உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எத்தியோப்பியாவில் ஒலித்தது வந்தே மாதரம்; உற்சாகத்துடன் கண்டு ரசித்த பிரதமர் மோடி

எத்தியோப்பியாவில் ஒலித்தது வந்தே மாதரம்; உற்சாகத்துடன் கண்டு ரசித்த பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அடிஸ் அபாபா: எத்தியோப்பியாவில் நடந்த நிகழ்ச்சியில் வந்தே மாதரம் பாடல் ஒலித்ததும் பிரதமர் மோடி கை தட்டி உற்சாகத்துடன் கண்டு களித்தார். எத்தியோப்பியாவுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அடிஸ் அபாபா விமான நிலையத்தில் அந்நாட்டு பிரதமர் அபய் அகமது அலி நேரில் வந்து பிரதமர் மோடியை வரவேற்று காரில் அழைத்து சென்றார். மோடியை கவுரவிக்கும் வகையில் அளிக்கப்பட்ட இரவு விருந்தின் போது 'வந்தே மாதரம்' பாடல் பாடப்பட்டது.எத்தியோப்பியா பாடகர்கள் பாட ஆரம்பித்ததும் பிரதமர் மோடி கைத்தட்டி உற்சாகத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து மகிழ்ச்சியுடன் பாடலை அவர் கேட்டு ரசித்தார். இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

நெகிழ்ச்சியான தருணம்

பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''பிரதமர் அபி அகமது அலி ஏற்பாடு செய்திருந்த விருந்து நிகழ்ச்சியில், எத்தியோப்பிய பாடகர்களால் அற்புதமான வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது. வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இந்த நேரத்தில், அது மிகவும் நெகிழ்ச்சியான தருணம்'' என குறிப்பிட்டுள்ளார். வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்...


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

palaniappan. s
டிச 17, 2025 13:57

மனுஷன் எங்கே போனாலும் கலக்கிறார்


M. PALANIAPPAN, KERALA
டிச 17, 2025 13:56

வந்தேமாதரம், ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் இந்தியாவின் புகழ் உலகம் முழுவதும் பரவ செய்யும் மோடிஜி வாழ்க


Kumar Kumzi
டிச 17, 2025 13:35

ஒரிஜினல் முஸ்லீம் வந்தே மாதரம் பாடுவதில் சந்தோஷப்படுவார்கள் சொத்துக்கு வக்கில்லாம மதம் மாறுன டூப்ளிகேட் முஸ்லீம் அல்லாஹ் கண்ணை குத்துவார்னு கதை விடுவான்


DINAKARAN S
டிச 17, 2025 12:54

உண்மையிலேயே மிகவும் பெருமைக்குரியா நிகழ்வு ..அந்த நிகழ்வில் நானும் கலந்து கொண்டதில் பெருமைப்படுகிறேன் ..வந்தே மாதரம் பாடலை பாடியவர்கள் எத்தியோப்பியா மக்கள் என்பது பெருமைக்குரிய விஷயம். நமது பாரத பிரதமர் எத்தியோப்பியா நாட்டின் மிக உயரிய விருதினை பெறுவதை நேரில் பார்க்கும் பாக்கியம் பெற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் . ஜெய் ஹிந்த்


RAMESH KUMAR R V
டிச 17, 2025 12:17

வந்தே மாதரம்


சமீபத்திய செய்தி