உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நிலத்தை அளக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம்: ஆத்தூர் அருகே விஏஓ மற்றும் கிராம உதவியாளர் கைது

நிலத்தை அளக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம்: ஆத்தூர் அருகே விஏஓ மற்றும் கிராம உதவியாளர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆத்தூர்: தலைவாசல் அருகே நிலத்தை அளவீடு செய்ய ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர்(விஏஓ) மற்றும் உதவியாளர் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள காமக்காபாளையத்தை சேர்ந்தவர் கண்ணையன். தனது நிலத்தை அளப்பதற்காக கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்த வி.ஏ.ஓ., பிரபு (30), உதவியாளர் வேல்முருகன் (44). ஆகியோர் ரூ. 10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர். இது குறித்து கண்ணையன் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் அளித்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர்கள் முருகன் மற்றும் ரவிக்குமார் ஆகியோர் கண்ணையனிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ. 10,000 ரொக்கத்தை கொடுத்து அனுப்பினர். இதனை பிரபு மற்றும் வேல்முருகன் அவரிடம் கொடுத்தபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கையும் களவுமாகபிடித்தனர். லஞ்சப்பணத்தையும் பறிமுதல் செய்ததுடன் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.பில் கலெக்டர் கைதுதிருவேற்காடு நகராட்சியில் ஜெகதீஷ் என்பவரிடம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் உமாநாத் என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

சிந்தனை
ஜூன் 26, 2025 20:42

நீதித்துறைக்கும் காவல்துறைக்கும் இவ்வளவு சம்பளம் கொடுத்தும், அவர்களால் லஞ்சம் வாங்குபவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை ஆனால் ஒரு அப்பாவி குடிமகன் தான் கண்டுபிடித்து கொண்டு போய் அந்த பெரிய மனிதர்களிடம் கொடுக்க வேண்டி உள்ளது சம்பளம் கொடுத்து என்ன பிரயோஜனம் அவர்களுக்கு சிந்திப்போம்


V Venkatachalam
ஜூன் 26, 2025 20:01

ஆஹா, இதுவும் வளர்ச்சி தான். முன்னாடி விஏஓ மட்டுமே கைதாவார்.‌ இப்போ இருவருமே கைது. இன்னும் 11 மாதங்கள் வரை இந்த மாதிரி கைது படலம் தொடரும். இதில் திமிங்கலங்கள் மாட்டவே மாட்டாது. அதுதான் நான்காண்டு நல்லாட்சிக்கு சாட்சி. லஞ்சம் வாங்கும் எவருக்குமே பயமில்லாமல் போய் விட்டது.


தாமரை மலர்கிறது
ஜூன் 26, 2025 19:01

கோட்டா கக்கிய குட்டி ட்ராகன்கள்.


D.Ambujavalli
ஜூன் 26, 2025 18:47

கேள்வி கேட்டால், ‘நாங்கள் கொடுத்தால் வந்தோம்.எங்களிடம் இந்தப் பணிக்காக வாங்கியவர்களில் எத்தனை பேரைக் கைது செய்தீர்கள், என்றோ, ‘பெரிய இடம் வரை இதில் பங்கு வைத்துவிட்டு எங்களுக்கு கிடைப்பது வெறும் ஆயிரம்தான்’ என்றும் உண்மைகள் வெளிவரும். பணியிடை நீக்கம், துறை விசாரணை எல்லாம் முடிந்து யதாஸ்தானம் வந்து அமர்ந்துவிடுவார்கள் கதை முடிந்தது...


Ram
ஜூன் 26, 2025 18:02

எல்லா அரசு துறைகளிலும் இடவொதுக்கீட்டின்மூலம் 70 சதவிகதம்பேர் உள்ளனர் , அதற்கு தகுந்தாற்போல் லஞ்சம் லாவண்யமும் கண்ணா பின்னா என்று உயர்ந்திருக்கிறது


V RAMASWAMY
ஜூன் 26, 2025 17:40

பிறந்தவுடன் பிறப்பு சான்று, பள்ளியின் சேர தேவைப்படும் சான்று, ரேஷன் கார்டு, அந்த சான்று இந்த சான்று, வீடு நிலம் வாங்கினால் அதற்குரிய சான்றுகள், வாரிசு சான்று, இறந்தால் இறப்பு சான்று, இன்ன பிற ஒரு மனிதனை வாழ விடாமல் அவர்கள் மட்டுமே வாழ வேண்டும் என்று எதற்கெடுத்தாலும் லஞ்சம் லஞ்சம். இந்த லஞ்சப்பேய்களின் முடிவு காலம் எப்பொழுது வரும் இறைவா? 2026ல் வருமா?


mdg mdg
ஜூன் 26, 2025 16:06

விசாரணை நடத்திட்டே இருப்பாங்க அப்புறம் ரிட்டயர் ஆயிடுவாரு அதிகபட்ச தண்டனை இடம் மாற்றமா தான் இருக்கும். லஞ்சம் வாங்காத சர்வே ய ரும் கிராம நிர்வாக அதிகாரிவயு ம் யாராவது இருந்தா எனக்கு தகவல் சொல்லுங்கள்


முக்கிய வீடியோ