உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துர்கா பூஜை பந்தலில் வாடிகன் சர்ச் விஷ்வ ஹிந்து பரிஷத் கடும் எதிர்ப்பு

துர்கா பூஜை பந்தலில் வாடிகன் சர்ச் விஷ்வ ஹிந்து பரிஷத் கடும் எதிர்ப்பு

ராஞ்சி : ஜார்க்கண்டில், துர்கா பூஜை பந்தல் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைமையிடமான வாடிகன் சர்ச் போன்று அமைக்கப்பட்டதற்கு, விஷ்வ ஹிந்து பரிஷத் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வடமாநிலங்களில் துர்கா பூஜை நாளை துவங்கி அக்., 2 வரை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஜார்க்கண்டின் தலைநகர் ராஞ்சியில் அமைக்கப்பட்டுள்ள துர்கா பூஜை பந்தல் கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் புனித நகரமான வாடிகன் நகர சர்ச் தோற்றத்தில் இடம்பெற்றுள்ளது. இதற்கு வி.எச்.பி., எனப்படும், 'விஷ்வ ஹிந்து பரிஷத்' கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து வி.எச்.பி.,யின் தேசிய செய்தி தொடர்பாளர் வினோத் பன்சால் கூறியதாவது: வாடிகன் நகர் கருப்பொருளில் ராஞ்சியில் நிறுவப்பட்டுள்ள துர்கா பூஜை பந்தல், ஹிந்துக்களின் மத உணர்வை புண்படுத்துவதாக உள்ளது. பந்தல் அமைப்பு குழு மதசார்பின்மையில் ஆர்வம் காட்டியிருந்தால், அவர்கள் சர்ச் அல்லது மதரசாக்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் ஹிந்து கடவுள்கள் அல்லது தேவியர் புகைப் படத்தை காட்சிப்படுத்த வேண்டும். வாடிகன் சர்ச் மற்றும் மியூசியம் தோற்றத்தில், அமைக்கப்பட்டுள்ள துர்கா பூஜை பந்தல், ஹிந்துக்களின் மத உணர்வை புண்படுத்துவதுடன் மதமாற்றத்தையும் ஊக்குவிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். பன்சாலின் இந்த குற்றச்சாட்டை துர்கா பூஜை பந்தலை அமைத்துள்ள ஆர்.ஆர்.ஸ்போர்ட்ஸ் கிளப் மறுத்துள்ளது. அந்த அமைப்பின் நி ர்வாகி விக்கி யாதவ் கூறுகையில், ''கடந்த 50 ஆண்டுகளாக துர்கா பூஜை பந்தல் அமைத்து வருகிறோம். மேற்கு வங்கத்தின் கொல்கட்டாவில் கடந்த 2022ல் அமைக்கப்பட்ட வாடிகன் நகர கருப்பொருளை மையப்படுத்தி, இப்போது பந்தல் அமைத்து உள்ளோம். ''துர்கை பின்னணியில் வாடிகன் செயின்ட் பீட்டர்ஸ் சர்ச் பந்தலில் அமைக்கப்பட்டுள்ளது. கொல்கட்டாவில் வரவேற்பை பெற்ற இந்த கருப்பொருளில் அமைத்துள்ள பந்தலுக்கு ராஞ்சி மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Kulandai kannan
செப் 27, 2025 17:39

இதுபற்றியெல்லாம் கவலையில்லாமல் இங்கு ஜோசப் விஜயை ஆதரிக்கும் சில இந்து வீணர்களை என்ன சொல்வது?


Madras Madra
செப் 27, 2025 12:05

யாரோ போடும் எலும்பை கடித்து விட்டு கண்ட இடங்களில் காலை தூக்குமாம் எச்சை நாய்


Rathna
செப் 27, 2025 11:51

சுய மரியாதையை மற்றும் சுய கவுரவம் இல்லாத கூட்டம். கிரிப்டோகளின் வேலையாக இருக்கும். இப்படி ஒவ்வரு இடத்திலும் புகுந்து நோயை குணப்படுத்துகிறேன், இலவச கல்வி தருகிறேன், மாதம் மாதம் பணம் தருகிறேன் என்று சொல்லி மதம் மாற்றுவதே இவர்களின் வேலை. ஆங்கிலேயன் வழங்கிய சாபக்கேடு. அவன் செய்த அநியாயங்கள் இந்தியர்கள் சரியாக படிக்கவில்லை என்பதையே காட்டுகிறது.


Kulandai kannan
செப் 27, 2025 10:38

இப்படி ஒரு செயலை பாகிஸ்தானில் செய்யத் துணிவுண்டா இந்த மானங்கெட்ட மதமாற்ற வெறியர்களுக்கு?


SUBRAMANIAN P
செப் 27, 2025 09:43

கிடைக்கிற இடத்தில எல்லாம் தங்கள் மதத்தை மத அடையாளங்களை பிரதிபலிக்க இங்குள்ள கைக்கூலிகள் உதவும்வரை இது தொடரும். இன்னும் பத்து வருடங்களில் இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மை இழப்பார்கள்.. மதசார்பின்மை என்ற போலித் திரைக்குள் ஒளிந்துகொண்டு தங்கள் மதத்தை பெரும்பான்மை ஆக்க போராடிக்கொண்டுருக்கிறது .


A P
செப் 27, 2025 09:37

பிற மதத்தை கேலி செய்கிற, மானங்கெட்ட, அறிவிலிகள்தான் இப்படி செய்வார்கள். இவர்களை உண்மையான கிறிஸ்தவர்கள் தண்டித்து, இதுபோல இனியொருமுறை நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.


vbs manian
செப் 27, 2025 09:23

mysore தசராவில் தொடங்கியது யார் என்று தெரியும். இப்போது ஜார்கண்ட்.


பெரிய குத்தூசி
செப் 27, 2025 09:10

உள்நாட்டில் பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு, மதத்தை வைத்து கேவல அரசியல் செய்யும் சக்திகளை ஒதுக்காமல் நாடு சந்தி சிரிக்கிறது. மோடி அவர்கள் உள்நாட்டில் உள்ள பிரச்சினைகளை சரிசெய்யாவிடில் உள்நாட்டு கலவரம் மூண்டு மோடி அவர்கள் குஜராத்துக்கு தப்பி செல்வதை தவிர்க்கமுடியாதது.


rengarajan
செப் 27, 2025 09:05

. அவருக்கு காண்டிராக்டு கொடுத்தால் வந்த வினை.


Vasan
செப் 27, 2025 08:51

வேற்றுமையில் ஒற்றுமை என்பதை உலகுக்கு பறைசாற்ற வேறென்ன வேண்டும்? துர்கா அண்ணி ஹிந்து கோவிலுக்கு செல்வதும், அண்ணன் ஸ்டாலின் தேவாலயம் செல்வதும், தம்பி உதயநிதி ரமலான் நோன்பு கஞ்சி குடிப்பதும் சகஜம் தானே. மக்கள் திலகம் MGR மற்றும் அம்மா ஜெயலலிதாவும் அப்படி தான். தெய்வ நம்பிக்கையை திராவிடத் தமிழர்களாகிய நாங்கள் என்றும் எதிர்த்ததில்லை. நாங்கள் எதிர்ப்பது மூட நம்பிக்கையை மட்டும் தான். ஆனால் எங்களை தெய்வ இறையாண்மைக்கு எதிரி போல் சித்தரிக்கிறவர்கள் சிலர். அவர்கள் முயற்சி தோற்கட்டும்.வாழ்க தமிழகம்.வாழ்க பாரதம்.