உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  சோப்பு, ஷாம்பூ, டூத்பேஸ்ட்டுக்கும் சைவம், அசைவம் குறியீடு

 சோப்பு, ஷாம்பூ, டூத்பேஸ்ட்டுக்கும் சைவம், அசைவம் குறியீடு

புதுடில்லி: சோப்பு, ஷாம்பூ உள்ளிட்ட பொருட்களில் சைவம், அசைவம் குறியீடு பதிக்கும் வகையில், 'பேக்கேஜிங்' விதிகளில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. உணவுப் பொருட்களின் பாக்கெட்களில் சைவம் என்றால் பச்சை நிறமும், அசைவம் என்றால் சிவப்பு நிறமும் குறியீடாக அச்சடிக்கப்பட்டிருக்கும். தற்போது நாம் அன்றாடம் பயன்படுத்தும் சோப்பு, ஷாம்பூ, டூத்பேஸ்ட் உள்ளிட்ட பொருட்களிலும் இந்த விதியை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக சட்ட அளவியல் (பொட்டலப் பொருட்கள்) விதிகள், 2011ல் திருத்தம் செய்யப்பட்டு, உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சோப்பு, ஷாம்பூ, டூத்பேஸ்ட் போன்ற பொருட்கள் முழு சைவம் என்றால் அதில் பச்சை நிற புள்ளியை குறியீடாகவும், விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டால், அசைவம் என்பதை குறிக்க அதில் சிவப்பு அல்லது பழுப்பு நிற புள்ளியை குறியீடாகவும் அச்சிட உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம், அழகு சாதனப் பொருட்களை வாங்கும் நுகர்வோர் தங்களுக்கு உகந்த பொருட்களை எளிதாக கண்டறிந்து வாங்க முடியும். இந்த நிற குறியீட்டை பொருள் பேக் செய்யப்பட்டிருக்கும் அட்டையின் மேல்புறத்தில் நுகர்வோர் கண்ணில் தெரியும்படி அச்சிட வேண்டும் என்ற அறிவுறுத்தலையும் மத்திய அரசு வழங்கி இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

subramanian
செப் 23, 2026 22:46

சாப்பிடும் பொருளில் சைவம் என்று கூறிவிட்டு.... E009, aso675 அதுக்கு நீ போய் அங்கு தேடு என்று அவர்கள் கலப்பதை தடுக்க வக்கில்லை..


subramanian
செப் 23, 2026 22:43

அவசரத்தில் மாற்றி வாங்கிவிட்டால் என்ன ஆகிவிடும்?


Haja Kuthubdeen
செப் 23, 2026 10:40

ஆட்சிகாலத்தில் அரிசி பஞ்சம் தலை விரித்தாடிய போது திமுக பிரச்சாரம் செய்ததாம்.அதெல்லாம் இப்ப ஞாபகம் வந்து தொலையுது...


Haja Kuthubdeen
செப் 23, 2026 10:33

அட போங்கப்பா..... சாப்பிடாத ஆளுங்களே உலகில் இல்லை..


சுந்தரம் விஸ்வநாதன்
செப் 23, 2026 07:07

எங்கய்யா நம்ம பொன்முடி?


விருமாண்டி
செப் 23, 2026 06:54

மாத்திரை, கேப்ஸூல்ஸ் முழுங்காத மனுசன், தடுப்புஊசி போடாத குழந்தை, காற்றுமாசு காரணமாக மூச்சுத் திணறலுக்கு இன்ஹேலர் போடாத குழந்தைகள் இல்லை என்று ஆகிவிட்ட காலம் இது. இவை அனைத்திலும் பன்றி, பசு, குதிரை, என பல நான்வெஜ் அயிட்டங்கள் அத்தியாவசியம். அப்படி இருக்கும் பட்சத்தில் இவ்வாறு தரம் பிரித்து நாடகமாடுவது வீணான காரியம். சாப்பிட வேண்டும் என்றால் வெஜ் முட்டை என்று சொல்லி முட்டை சாப்பிடும் வெஜிடேரியன்களையும், பிரியாணியில் இருந்து மாமிசத்தை எடுத்து விட்டு கோழி சால்னா ஊத்துங்கோன்னு அடிக்கும் வெஜிடேரியன்களையும் பார்த்தால் மிக வேடிக்கையாக இருக்கும். என்ன ஒரு போலித்தனம்?


Natarajan Ramanathan
செப் 23, 2026 06:05

பாக்கிங் அளவுகளிலும் ஸ்டாண்டர்ட் அளவுகள் கொண்டுவரவேண்டும். 17.3 கிராம் 49.8 கிராம் என்று எல்லாம் இருக்க கூடாது. 10, 20, 25, 50, 100, 200, 250, 500,1000 போன்ற அளவுகளிலேயே இருக்க வேண்டும்.....


M.Malini
செப் 23, 2026 05:55

அருமை


டாஸ்மாக் சாதனை
செப் 23, 2026 05:34

ஆவின் பால் ..பால் கோவா …முட்டை இவற்றுக்கு விதிவிலக்கா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை