உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோயில்களை அரசின் பிடியில் இருந்து விடுவிக்க நாடு தழுவிய போராட்டம்: வி.எச்.பி., தயார்

கோயில்களை அரசின் பிடியில் இருந்து விடுவிக்க நாடு தழுவிய போராட்டம்: வி.எச்.பி., தயார்

புதுடில்லி: 'சிறுபான்மையினருக்கான வழிபாட்டு தலங்களை அவர்களே நிர்வகிக்கும் போது, கோவில்கள் மட்டும் ஏன் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்' என, விஸ்வ ஹிந்து பரிஷத் கேள்வி எழுப்பி உள்ளது.ஆந்திராவில் உள்ள திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஹிந்து கோவில்கள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்ற குரல் ஒலிக்க துவங்கியுள்ளது.விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் இணை பொதுச் செயலர் சுரேந்திர ஜெயின் கூறியதாவது: நாடு முழுதும் உள்ள கோவில்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து, ஹிந்துக்கள் வசம் ஒப்படைக்கும் பணியை இன்று முதல் துவக்க உறுதி ஏற்றுள்ளோம்.முதல்கட்டமாக, அனைத்து மாநிலங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு, அந்தந்த மாநில முதல்வர்கள் வாயிலாக எங்கள் கோரிக்கையை கவர்னர்களிடம் சமர்ப்பிப்போம். தேவைப்பட்டால் நீதிமன்றத்தை நாடுவோம். ஹிந்து கோவில்களை ஹிந்து சமுதாயத்தினரிடம் ஒப்படைக்கும் கோரிக்கை ஒரு இயக்கமாக முன்னெடுக்கப்படும்.கோவில்களை நிர்வகிப்பது அரசின் வேலை அல்ல என்பதை நீதிமன்றங்கள் தொடர்ந்த வலியுறுத்தி வருகின்றன. கோவில்களை அரசின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. பிரசாதத்தில் கலப்படம் என்பது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மட்டும் நடக்கும் விவகாரம் அல்ல. பல கோவில்களில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சபரிமலை ஐயப்பன் கோவில் பாயாசத்தில் கூட கலப்படம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பல நிதி முறைகேடுகள் நடக்கின்றன. அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கோவிலில் கொள்ளையடித்து ஹிந்துக்களின் உணர்வுகளுடன் விளையாடுகின்றனர். சிறுபான்மையினர் தங்கள் வழிபாட்டு தலங்களை அவர்களே நிர்வகிக்கும் போது கோவில்கள் மட்டும் ஏன் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.முறைகேடுகள் நடக்கும் போது விசாரணை நடத்துவது நிரந்தர தீர்வாகாது. கோவில்களை அரசின் பிடியில் இருந்து விடுவிப்பதே நிரந்தர தீர்வு. இவ்வாறு கூறினார்.

'தமிழகத்தில் நடப்பது என்ன'

வி.எச்.பி., இணை பொதுச்செயலர் சுரேந்திர ஜெயின் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் மட்டும் 400க்கும் மேற்பட்ட கோவில்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த 400 கோவில்களில் இருந்து ஆண்டுக்கு 6,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஆனால், 200 கோடி ரூபாய் வருவாய் என்றும், 270 கோடி ரூபாய் செலவு என்றும் தமிழக அரசு கணக்கு காட்டுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் கோவில்கள் வாயிலாக 50,000 கோடி ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Senthil
செப் 25, 2024 22:25

கோயில்களை அரசிடமிருந்து விடுவித்து வேறு யாரிடம் கொடுப்பது?


venugopal s
செப் 25, 2024 18:14

இதைவிட முக்கியம் மாநிலங்களை தங்கள் அடிமைகள் போல் நடத்தும் மத்திய அரசின் பிடியில் இருந்து மாநில அரசுகளை விடுவிப்பது! மாநிலங்களுக்கு உரிய சுதந்திரத்தை பெறுவது!


xyzabc
செப் 25, 2024 11:08

Implement this scheme in Tamilnadu first. needed badly. DMK rulers are taking the temples for a ride. They want more powers devoluted to them from the centre. nightmare situation for the state.


சோழநாடன்
செப் 25, 2024 10:46

நல்ல பதில். எதைக் கொண்டு அடித்ததுபோல் உள்ளது. வாழ்த்துகள்


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 25, 2024 10:37

பாஜக அரசுக்கு இதில் கடமை இல்லையா ???? கையறு நிலையா ???? அல்லது பாஜகவுக்கு ஒட்டு வாங்கிக்கொடுக்க வி ஹெச் பி செய்யும் தந்திரமா ????


பேசும் தமிழன்
செப் 25, 2024 09:21

முதலில் தமிழ்நாட்டில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.... இங்கே திருட்டு திராவிட மாடல் ஆட்கள் கோவில் சொத்துக்களை ஆட்டையை போட்டு கொண்டு இருக்கிறார்கள்.


V RAMASWAMY
செப் 25, 2024 09:11

ஜல்லிக்கட்டு போன்று பாரத நாடு தழுவிய போராட்டமாக வேண்டிய அவசியம். இல்லையேல், .இந்து என்கிற சொல்லைத் தவிர்த்து வழிப்பாட்டுத்தல கண்ட்ரோல் போர்டு NATIONAL WORSHIP PLACES CONTROL BOARD என்றொரு அமைப்பு உண்டாக்கி அனைத்து மத வழிப்பாட்டு தலங்களையும் அந்த கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும் without interference of respective State Governments. ஒரு தலைப்பக்ஷமாக இந்து மதத்தை மட்டும் குறி வைப்பது அநியாயம்.


krishnan
செப் 25, 2024 08:23

ஆமாம் தயவு செய்து இந்த நல்ல காரியம் செய்ய வேண்டுமென கேட்டு கொள்கிறேன்.


R.RAMACHANDRAN
செப் 25, 2024 07:05

எந்த மதத்திலும் இந்து மதத்தை போல தாழ்த்தப்பட்டவர்களுக்கு கொடுமை செய்வது போல செய்வது இல்லை. இதற்கு போராடாமல் ஏற்ற தாழ்வுகளை நிலை நிறுத்தப் போராடுகின்றனர் சாதி மத வெறியர்கள்.


ஆரூர் ரங்
செப் 25, 2024 07:45

அடடே தலித் களுக்கு தனிதனி சர்ச் தனித்தனி பாதிரியார் உள்ளது தெரியுமா? இஸ்லாமியர்களிலும் படி நிலையும் சாதிகளும் உள்ளதை ஏன் மறைக்கிறீர் . பாஷ்மன்டா எனும் ஒடுக்கப்பட்ட பிரிவே உள்ளது.


Dharmavaan
செப் 25, 2024 09:02

வந்தேறி மதங்களில் ஜாதிக்கொடுமை இதைவிட கேவலம் ஆனால் வெளியே வருவதில்லை


karthik
செப் 25, 2024 09:04

எதுவும் தெரியாது என்றால்... இருக்க வேண்டும்.


Senthil
செப் 25, 2024 22:39

மிகச் சரி. ஏற்றத்தாழ்வுகளை நிலைநிறுத்தி பெருமை கொள்ளும் ஒரு வந்தேறிக் கூட்டம் அதை தக்க வைக்க போராடிக் கொண்டிருக்கிறது. அந்த கூட்டம்தான் தமிழர்கள் ஹிந்தி படிக்க வேண்டும் சமஷ்கிருதத்தைப் படிக்க வேண்டும் என நீண்ட காலமாக கூவிக்கொண்டே இருக்கிறது. அவர்கள் பருப்பு இங்கு வேகாது என்பது தெரிந்தும் கூவிக்கொண்டே இருக்கிறது.


Duruvesan
செப் 25, 2024 06:48

விடியலு நமது சிறப்பான ஆட்சியின் மீது ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டிய இவரை குண்டர் சட்டத்தில் எப்போது கைது செய்ய போகிறீர்கள்? தொட்டு பார் அப்போதான் ஹிந்துக்கள் யாருன்னு உனக்கு காண்பிச்சி குடுப்பாங்க


புதிய வீடியோ