வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இதை தன மக்கள் ஆவலுடன் எதிர் பார்க்கிறார்கள்
புதுப் பெருச்சாளிகளுக்கு பழைய பெருச்சாளிகளே தேவலைன்னு ஆயிடிச்சு. அதுங்களுக்கு கொஞ்சம் பக்தியாவது இருந்திச்சு.
எல்லா கோவில்களை சிதம்பரம் தீக்ஷிதர்களிடம் ஒப்படைக்க வேண்டுமா
புதுடில்லி, 'சிறுபான்மையினருக்கான வழிபாட்டு தலங்களை அவர்களே நிர்வகிக்கும் போது, கோவில்கள் மட்டும் ஏன் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்' என, விஸ்வ ஹிந்து பரிஷத் கேள்வி எழுப்பி உள்ளது.ஆந்திராவில் உள்ள திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஹிந்து கோவில்கள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்ற குரல் ஒலிக்கத் துவங்கியுள்ளது.இந்நிலையில், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் இணை பொதுச்செயலர் சுரேந்திர ஜெயின், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:நாடு முழுதும் உள்ள கோவில்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து, ஹிந்துக்கள் வசம் ஒப்படைக்கும் பணியை இன்று முதல் துவக்க உறுதி ஏற்றுள்ளோம். முதற்கட்டமாக, அனைத்து மாநிலங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு, அந்தந்த மாநில முதல்வர்கள் வாயிலாக எங்கள் கோரிக்கையை கவர்னர்களிடம் சமர்ப்பிப்போம்.தேவைப்பட்டால் நீதிமன்றத்தை நாடுவோம். ஹிந்து கோவில்களை ஹிந்து சமுதாயத்தினரிடம் ஒப்படைக்கும் கோரிக்கை ஒரு இயக்கமாக முன்னெடுக்கப்படும்.கோவில்களை நிர்வகிப்பது அரசின் வேலை அல்ல என்பதை நீதிமன்றங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. கோவில்களை அரசின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. பிரசாதத்தில் கலப்படம் என்பது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மட்டும் நடக்கும் விவகாரம் அல்ல. பல கோவில்களில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சபரிமலை அய்யப்பன் கோவில் பாயாசத்தில் கூட கலப்படம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பல நிதி முறைகேடுகள் நடக்கின்றன. அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கோவிலில் கொள்ளையடித்து ஹிந்துக்களின் உணர்வுகளுடன் விளையாடுகின்றனர். சிறுபான்மையினர் தங்கள் வழிபாட்டு தலங்களை அவர்களே நிர்வகிக்கும்போது, கோவில்கள் மட்டும் ஏன் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.முறைகேடுகள் நடக்கும்போது விசாரணை நடத்துவது நிரந்தர தீர்வாகாது. கோவில்களை அரசின் பிடியில் இருந்து விடுவிப்பதே நிரந்தர தீர்வு.இவ்வாறு அவர் கூறினார்.
வி.எச்.பி., இணை பொதுச்செயலர் சுரேந்திர ஜெயின் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் மட்டும் 400க்கும் மேற்பட்ட கோவில்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த 400 கோவில்களில் இருந்து ஆண்டுக்கு 6,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.ஆனால், 200 கோடி ரூபாய் வருவாய் என்றும், 270 கோடி ரூபாய் செலவு என்றும் தமிழக அரசு கணக்கு காட்டுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் கோவில்கள் வாயிலாக 50,000 கோடி ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
இதை தன மக்கள் ஆவலுடன் எதிர் பார்க்கிறார்கள்
புதுப் பெருச்சாளிகளுக்கு பழைய பெருச்சாளிகளே தேவலைன்னு ஆயிடிச்சு. அதுங்களுக்கு கொஞ்சம் பக்தியாவது இருந்திச்சு.
எல்லா கோவில்களை சிதம்பரம் தீக்ஷிதர்களிடம் ஒப்படைக்க வேண்டுமா