துணை ஜனாதிபதி தேர்வு பணி துவக்கம்
புதுடில்லி:துணை ஜனாதிபதி தேர்தலுக்கான பணிகளை தேர்தல் கமிஷன் துவக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று துவங்கிய வேட்பு மனு தாக்கல், வரும் 21ம் தேதி வரை நடக்கிறது. இதுதொடர்பாக, நேற்று வெளியிடப்பட்ட அரசாணை, அனைத்து மாநிலங்களின் அரசாணையிலும், அந்தந்த மாநில மொழிகளில் வெளியாகும். துணை ஜனாதிபதிக்கான தேர்தலில், தேர்தல் அதிகாரியாக ராஜ்யசபா தலைமை செயலர் இருப்பார். பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள ராஜ்யசபா அலுவலகத்தில் நேற்று துவங்கிய வேட்பு மனு தாக்கல், வரும் 21ம் தேதி வரை நடக்கும். போட்டியிட விரும்பும் மனுதாரர்கள், எந்த தொகுதியில் உள்ள வாக்காளர் பட்டியலில் அவர்கள் பெயர் இடம்பெற்றுள்ளதோ, அதை குறிப்பிட வேண்டும். மேலும், 15,0000 ரூபாயை, பாதுகாப்பு பணமாக வழங்க வேண்டும். போட்டி இருப்பின், செப்டம்பர் 9ம் தேதி, பார்லிமென்ட் வளாகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.