மேலும் செய்திகள்
ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டரில் சுட்டுக்கொலை
23-Sep-2024
லக்னோ: உ.பி.,யில் என்கவுன்டர் சம்பவங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மற்றும் மனித உரிமை கமிஷன் ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், புதிய விதிமுறைகளை மாநில அரசு வெளியிட்டு உள்ளது.உ.பி.,யில் 2017 ம் ஆண்டு முதல் நடந்து வரும் என்கவுன்டர் சம்பவங்கள் அங்கு சர்ச்சையை உண்டாக்கி உள்ளது. 7 ஆண்டுகளில் மட்டும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட என்கவுன்டர்கள் நடந்துள்ளன. இதில் கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டதாக கூறப்பட்ட 207 கிரிமினல்கள் உயிரிழந்தனர். 17 போலீசார் வீரமரணம் அடைந்துள்ளனர். 6,500 கிரிமினல்கள் காயமடைந்துள்ளனர்.இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் குறி வைக்கப்படுகிறார்கள். மற்ற சமுதாயத்தை சேர்ந்தவர்கள் போலீசுக்கு கண்ணுக்கு தெரியவில்லை என்றனர்.எதிர்க்கட்சி தலைவரான ராகுல், உ.பி.,யில் நடப்பது போலி என்கவுன்டர்கள். மாநில பா.ஜ., அரசுக்கு சட்டத்தின் ஆட்சியின் மீது நம்பிக்கையில்லை என்பதையே இது காட்டுகிறது எனக் குற்றம்சாட்டினார்.சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ், எதையோ மறைப்பதற்காக மாநில அரசு என்கவுன்டர் சம்பவங்களை ஆதரிக்கிறது என்றார். ஆனால், இதனை போலீசார் திட்டவட்டமாக மறுத்தனர்.இந்நிலையில், என்கவுன்டர் தொடர்பாக மாநில அரசு புதிய விதிமுறைகளை வகுத்து உள்ளது.இதன்படி1. என்கவுன்டரில் குற்றவாளிகள் கொல்லப்பட்டால் அல்லது காயமடைந்தால், அந்த இடம் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும்.2. உயிரிழந்த குற்றவாளியின் உடலை இரண்டு டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். இதையும் வீடியோ பதிவு செய்வது முக்கியம்3. என்கவுன்டர் நடந்த இடத்தை தடயவியல் நிபுணர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும்.4. உயிரிழந்த குற்றவாளியின் உறவினர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.5. என்கவுன்டர் செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் உடனடியாக ஒப்படைக்கப்பட வேண்டும். இதன் மூலம் அவை ஆய்வு செய்ய முடியும்.என்பன உள்ளிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன.போலீஸ் டி.ஜி.பி., பிரசாந்த் குமார் கூறுகையில், என்கவுன்டர் தொடர்பான விதிமுறைகள் அனைத்து மாவட்ட போலீஸ் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதனை முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம் என்றார்.
23-Sep-2024