உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விடைபெறுகிறேன் என அறிவித்தார் வினேஷ் போகத்: ஒலிம்பிக் தகுதி நீக்கத்தால் வேதனை முடிவு

விடைபெறுகிறேன் என அறிவித்தார் வினேஷ் போகத்: ஒலிம்பிக் தகுதி நீக்கத்தால் வேதனை முடிவு

புதுடில்லி: கடைசி நேரத்தில் அதிக எடை காரணமாக, ஒலிம்பிக் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட, இந்திய வீராங்கனை வினேஷ் போகத் மல்யுத்தப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qf2i7ies&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 'இனி என்னிடம் போராட சக்தி இல்லை' என உருக்கமாக சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். வினேஷ் போகத்துக்கு, வெள்ளிப்பதக்கம் வென்றவருகான மரியாதை, வரவேற்பு அனைத்தும் அளிக்கப்படும் என்று ஹரியானா அரசு அறிவித்துள்ளது.

விடை பெறுகிறேன்!

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த பைனலில், தங்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீராங்கனை வினேஷ் போகத், அனுமதிக்கப்பட்ட எடையை காட்டிலும் 100 கிராம் அதிகமாக இருந்ததால் நேற்று தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவரது தகுதி நீக்கத்தை எதிர்த்து இந்திய ஒலிம்பிக் கமிட்டி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. எனினும் வினேஷ்க்கான வாய்ப்புகள் முடிந்து விட்டதாகவே சர்வதேச மல்யுத்த சங்கம் அறிவித்து விட்டது. இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 08) மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் தெரிவித்தார்.

வினேஷ் போகத் உருக்கம்

அவர் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,'' எனக்கு எதிரான போட்டியில் மல்யுத்தம் வென்று விட்டது. நான் தோற்றுப் போய் விட்டேன். என் தைரியம் முற்றிலும் நொறுங்கி விட்டது. இனி என்னிடம் போராட சக்தி இல்லை. இனியும் போட்டிகளில் விளையாட எந்த வலிமையும் இல்லை'' என்று கூறியுள்ளார்.

ஹரியானா அரசு அறிவிப்பு

வினேஷ் போகத்துக்கு, வெள்ளிப்பதக்கம் வென்றவருகான மரியாதை, வரவேற்பு அனைத்தும் அளிக்கப்படும் என்று ஹரியானா அரசு அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Sivaprakasam Chinnayan
ஆக 08, 2024 20:56

தகுதி இழப்பு என்பது unfortunate


Sridharan Venkatraman
ஆக 08, 2024 13:05

என்ன பேரு


kulandai kannan
ஆக 08, 2024 11:37

முன்னர் 53 கிலோ பிரிவில் ஆடியவர், இந்த முறை 50 கிலோவுக்கு ஏன் மாறவேண்டும்?


Velan Iyengaar
ஆக 08, 2024 10:41

விதி இருக்கு என்று தெரியும்...


Velan Iyengaar
ஆக 08, 2024 10:22

தங்கப்பதக்கத்தை பெற்று தந்திருக்கமுடியுமே ??ஒலிம்பிக்ஸ் என்ன EVM போலவா ?? தேவையான மெஷினில் மட்டும் சூடு வெச்சி சூது விளையாட்டு விளையாட ??


Kumar Kumar
ஆக 08, 2024 10:42

Resign 40 mp for dmk party


Velan Iyengaar
ஆக 08, 2024 08:23

ஆளும் வர்கம் அதிகாரத்தை காட்டி பழிவாங்கிவிட்டது.. உலக மகா பணக்கார கட்சியின் கை ரொம்போ ரொம்போ நீளமானது ... எதையும் அணுகிவிடும் பணக்கார பலம் கொண்டது .....


Just imagine
ஆக 08, 2024 09:27

நம்மாளுகளுக்கு விதி என்றால் என்னவென்று தெரியாது.... விதி மீறல் என்றால் என்னவென்று தெரியாது... காலங்காத்தால அரை போதையில் முரசொலியை படிச்சுட்டு இங்க வந்து சம்மந்தமே இல்லாமல் ஊளையிட வந்துடுவாங்க ....


ஆரூர் ரங்
ஆக 08, 2024 09:30

அப்படின்னா ஒரு தங்கப்பதக்கத்தையாவது பெற்றுத் தந்திருக்க முடியுமே. ஆக திமுக காரர்களுக்கு முட்டியில் மூளை.


TRUE INDIAN
ஆக 08, 2024 09:54

காலங்காத்தால கள்ள சாராயம் குடிச்சிட்டு உளர வேண்டியது.


Ramesh
ஆக 08, 2024 08:11

தன் வினை தன்னைச் சுடும். அரசன் அன்றே கொல்வான். தெய்வம் நின்று கொல்லும். இப்போது நடந்தது தெய்வத்தின் விளையாடல்


Svs Yaadum oore
ஆக 08, 2024 07:46

வடக்கன் பானிபூரி படிக்காதவன் என்று இங்குள்ள விடியல் மந்திரி சொன்னது.. வரிப்பணத்தை எல்லாம் வடக்கன் எடுத்துகிறான் என்று விடியல் ஊளையிட்டது. இப்ப என்னமோ சதித்திட்டம் சூழ்ச்சி என்று வடக்கனுக்கு பரிந்து பேசி விடியல் திராவிடனுங்க சமூக நீதி மத சார்பின்மையாக கண்ணீர் வடிக்கிறானுங்க ....திராவிட அக்கா வடக்கனுக்கு ஆதரவாக மவுண்ட் ரோட்டில் ஊர்வலம் ...


SVR
ஆக 08, 2024 07:26

இந்த தகுதி நீக்கம் தனக்கு தானே வரவழைத்து கொண்ட ஒன்று. முதல் நாள் 49.9 கிலோகிராம் எடையில் 3 மலுயுத்தங்கள் செய்த பின்பு எனர்ஜி ட்ரிங்க்ஸ்ஐ குடித்து எடையை 2.7 கிலோகிராம் கூட்டி அந்த கூடிய எடையை 12 மணிநேரத்தில் 50 கிலோவுக்கு கொண்டு வர படாத பாடுபட்டு முடியாமல் போய் குறித்த நேரத்தில் 50.100 கிலோ எடை இருந்ததினால் வந்த வினை. இதற்கு யார் பிணை? என்னுடைய வரிகள் எல்லாம் யமுனா சாக்கடையில் வீணாக போயிற்று. இப்பொழுது ஒப்பாரி வைத்து என்ன பயன். அனுபவிக்க வேண்டியது தான். வாய் கூசாமல் இதை சதி என்கிறார்கள். இவருடைய எடையை யார் கூட்டவோ குறைக்கவோ முடியும் அவரை தவிர? அடி முட்டாள்கள்.


முருகன்
ஆக 08, 2024 06:38

தகுதி சுற்றில் உலகின் முதல் நிலை வீராங்கனையை வென்று அரையிறுதி வரை சரியான எடையில் வெற்றி பெற்ற உங்களுடன் இந்தியர்கள் இருக்கிறார்கள் பதக்கம் கொடுக்க வில்லை என்றாலும் நீங்கள் மக்கள் மனதில் வெற்றியாளர் தான் கவலை வேண்டாம் சகோதரி


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை