உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வி.எல்.சி.சி.,யின் தவறான விளம்பரம் ரூ.3 லட்சம் அபராதம்

வி.எல்.சி.சி.,யின் தவறான விளம்பரம் ரூ.3 லட்சம் அபராதம்

புதுடில்லி: தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக, உடல் எடையை குறைக்க பயிற்சி மற்றும் சிகிச்சை வழங்கும் வி.எல்.சி.சி., நிறுவனத்துக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இதுகுறித்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை: அழகுத் துறை விளம்பரங்களை கண்கா ணித்தல் மற்றும் புகார் வாயிலாக வி.எல்.சி.சி., நிறுவனத்தின் உடல் எடை குறைப்பு சிகிச்சை குறித்து கவனத்துக்கு வந்தது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், ஒரே அமர்வில் உடல் எடை குறைப்பு குறித்து வி.எல்.சி.சி., மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்களை வெளியிடுவது கண்டறியப்பட்டது. இதில், அமெரிக்காவின் எப்.டி.ஏ., எனப்படும், உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட, 'கூல்ஸ்கல்ப்டிங்' என்ற எடை குறைப்பு இயந்திரத்துக்கு வழங்கப்பட்ட உண்மையான ஒப்புதலை மிகைப்படுத்தியது தெரியவந்தது. இதன் வாயிலாக நுகர்வோரை அந்நிறுவனம் தவறாக வழி நடத்தியுள்ளது. இதையடுத்து, வி.எல்.சி.சி., நிறுவனத்துக்கு, 3 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்துக்கு சில ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. எதிர்கால விளம்பரங்கள் மற்றும் பொறுப்பு துறப்பு அறிவிப்புகளில் இதை கண்டிப்பாக கடைபிடிக்கும்படி உத்தரவி டப்பட்டுள் ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள் ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை