உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒளிமயமான எதிர்காலத்திற்கு காங்கிரசுக்கு ஓட்டளியுங்கள்: சோனியா வலியுறுத்தல்

ஒளிமயமான எதிர்காலத்திற்கு காங்கிரசுக்கு ஓட்டளியுங்கள்: சோனியா வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''அரசியலமைப்பு சட்டத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதில் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அர்ப்பணிப்புடன் உள்ளது. அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலத்திற்காக காங்கிரசுக்கு ஓட்டளியுங்கள்'' என வாக்காளர்களுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா வலியுறுத்தியுள்ளார்.காங்கிரஸ் வெளியிட்ட வீடியோவில் சோனியா கூறியதாவது: இன்று நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் இளைஞர்கள் வேலையின்மையை எதிர்கொள்கிறார்கள்; பெண்கள் கொடுமைகளை எதிர்கொள்கிறார்கள்; தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபான்மையினர் பயங்கரமான பாகுபாட்டை எதிர்கொள்கிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.,வால் இந்த சூழல் ஏற்பட்டுள்ளது. எந்த விலை கொடுத்தாவது அதிகாரத்தை கைப்பற்றுவதில் மட்டுமே அவர்களின் கவனம் உள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக வெறுப்புணர்வை வளர்த்துள்ளனர். அனைவரின் முன்னேற்றத்திற்காகவும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும், நாட்டை வலுப்படுத்தவும் காங்கிரஸ் கட்சியும் நானும் எப்போதும் போராடி வருகிறோம். அரசியலமைப்பு சட்டத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதில் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அர்ப்பணிப்புடன் உள்ளது. அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலத்திற்காக காங்கிரசுக்கு ஓட்டளியுங்கள், ஒன்றிணைந்து வலிமையான மற்றும் ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்குவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Devaraju
மே 08, 2024 07:16

Ayyo podhumda samy?? We no longer needed congress. Vote for looting???


பேசும் தமிழன்
மே 08, 2024 06:24

யாராவது...... தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளி போட்டு கொள்வார்களா???... உங்களுக்கு ஓட்டு போடுவதும்... பாகிஸ்தான் ஆட்களுக்கு ஓட்டு போடுவதும் ஒன்று தான் !!!


கண்ணன்
மே 08, 2024 05:58

உங்கள் குடும்பத்தின் மற்றும் உங்களுக்கு ஜால்ரா அடிக்கும் சிலரின் ஒளிமயமான எதிர்காலத்திற்கா?


Kasimani Baskaran
மே 08, 2024 05:46

சுதந்திரம் பெற்றிருந்தாலும் இந்திய ஆட்சி என்றில்லாமல் இஸ்லாமிய ஆதிக்கமுள்ள ஐரோப்பியர்களின் வழிவந்தவர்களின் ஆட்சி போலவே ஒரு ஆட்சி பல சகாப்தங்களாக தொடர்ந்தது காலணி ஆதிக்க மனம் படைத்தவர்களின் பிடியிலிருந்து விடுபட்டு கடந்த பத்தாண்டுகளாக பாரம்பரிய இந்தியர்களின் ஆட்சி நடக்கிறது அது பொறுக்காத இவர்கள் கண்ட மேனிக்கு பொய்களை அள்ளிவிட்டு கட்சியையும் கைக்குள் வைத்துக்கொண்டு நாட்டை சின்னாபின்னமாக்க துடிக்கிறார்கள்


subramanian
மே 07, 2024 23:04

காங்கிரஸ் கட்சி சொத்துக்களை உங்கள் பெயரில் மாற்றி மோசடி செய்து உள்ளாய், அரசு பங்களாவை காலி செய்து விட்டு, சொந்த உழைப்பில் வாழ முடியுமா ?


Krish
மே 07, 2024 20:36

நீங்க ஏன் எலக்‌ஷன்ல நிக்கல?


Ramesh Sargam
மே 07, 2024 20:21

யாருடைய ஒளிமயமான எதிர்காலம்? மக்களின் எதிர்காலமா, அல்லது காந்தி சோனியா காந்தி குடும்பத்தினரின் எதிர்காலமா??


குமரி குருவி
மே 07, 2024 20:14

காங்கிரஸ் ஆட்சியில் இருட்டில் இருந்தது போதும் உங்க சாக வாசமே வேண்டாம் நீங்க கம்பெனியை கலைங்க


enkeyem
மே 07, 2024 20:13

ஒளிமயமான எதிர்காலம் அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாப்பது எல்லாம் இந்திய மக்களின் நன்மைக்காக இல்லை அதுதான் பார்த்தோமே எமெர்கெனசி காலத்தில் இவளது மாமியார் தனது குடும்ப ஆதிக்கத்தை நிலை நிறுத்த நேரு குடும்பம் அரசியல் சட்டத்தை பலமுறை திருத்தியதையும் தனது அதிகாரத்திற்கு கட்டுப்படாத பல மாநில அரசுகளை ஜி பிரிவை பயன்படுத்தி கலைத்ததையும் இப்போது மருமகள் வந்து நீலிக்கண்ணீர் நடிக்கிறார்.


A.SIVASHANMUGAM
மே 07, 2024 19:56

உங்களுடைய ஒளிமயமான எதிர்காலம் என்ன என்பது குறித்து எல்லோரும் நன்கு அறிந்தவர்கள் வாய்ப்பு இல்ல ராஜா


மேலும் செய்திகள்







புதிய வீடியோ