உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாக்காளர் பட்டியலில் மோசடி: பழைய பல்லவியை மீண்டும் பாடுகிறார் ராகுல்!

வாக்காளர் பட்டியலில் மோசடி: பழைய பல்லவியை மீண்டும் பாடுகிறார் ராகுல்!

புதுடில்லி: கர்நாடக வாக்காளர் பட்டியலில், போலி வாக்காளர்கள், போலி முகவரிகள் என மோசடி நடந்துள்ளது என்று காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.தேர்தல் கமிஷனின், பீஹார் தேர்தல் சிறப்பு திருத்த நடவடிக்கை குறித்து ராகுல் அளித்த பேட்டி: தேர்தல்கள் ஜோடிக்கப்படுகின்றன. தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக, பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வேறு மாதிரியாக இருந்தாலும், முடிவு பாஜவுக்கு சாதகமாக உள்ளது. மஹாராஷ்டிராவில் 5 ஆண்டுகளில் இல்லாதவாறு 5 மாதங்களில் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

பகிர மறுப்பு

வாக்காளர் பட்டியலை பகிர தேர்தல் கமிஷன் மறுக்கிறது. மென்பொருள் மூலம் ஆய்வு செய்யக்கூடிய வகையில் வாக்காளர் பட்டியலைத் தர தேர்தல் கமிஷன் மறுக்கிறது. மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் 5.30 மணிக்குப்பிறகு ஓட்டுப்பதிவு அதிகரித்தது. எப்படி மோசடி நடைபெறுகிறது என்பதை ஆய்வு செய்ய குழு அமைத்தோம்.கர்நாடக வாக்காளர் பட்டியலில், போலி வாக்காளர்கள், போலி முகவரிகள் என மோசடி நடந்துள்ளது. பாஜவுடன் இணைந்து தேர்தல் கமிஷன் போலியான நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கிறது.

12 ஆயிரம் போலி ஓட்டுகள்

தேர்தல் கமிஷனுடன் இணைந்து பாஜ ஓட்டுகளை திருடுகிறது. கர்நாடகாவின் மஹாதேவபுரா தொகுதியில் ஒரு லட்சத்திற்கும் அதிமான ஓட்டுகள் திருடப்பட்டன. ஒரே நபருக்கு பல மாநிலங்களில் ஓட்டு உள்ளது. மஹாதேவபுரா தொகுதியில் கிட்டத்தட்ட, 12,000 போலி ஓட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. வாக்காளர் பட்டியலில் 40ஆயிரத்திற்கும் அதிகமான போலி முகவரிகள் உள்ளன. ஒரே வாக்காளர் பெயர் 4 வாக்குச்சாவடிகளில் இருந்தது கண்டறியப்பட்டது.

மோசடி

சில வாக்காளர்களின் பெயர்கள் வாக்குச்சாவடிகளில் இடம்பெற்றுள்ளன பல்வேறு மாநிலங்களின் இல்லாத விலாசத்தை பதிவு செய்து, பல வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் சேர்த்து மோசடி நடந்துள்ளது. பல வாக்காளர்களுக்கு புகைப்படங்கள் பதிவு செய்யப்படவில்லை, அடையாளம் காணும்படி இல்லை. ஒரே படுக்கை அறை கொண்ட வீட்டில் மட்டும் 48 வாக்காளர்கள் உள்ளனர். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

Mario
ஆக 07, 2025 22:23

"ஒரே நபர், ஒரே முகவரி.. ஆனால் 3 மாநிலங்களில் வாக்களிக்கிறார்.." ஆதாரமாக போட்டோவை வெளியிட்ட ராகுல்


vivek
ஆக 07, 2025 23:06

லண்டன் மரியோ,மணிப்பூர் மரியோ, கவுன்சிலர் மரியோ....இந்த மூணு பேரை சொல்றியா


Paul Durai Singh. S
ஆக 07, 2025 22:14

தேர்தல் கமிஷனை பாஜக விலைக்கு வாங்கி பல நாட்கள் ஆகி விட்டது


MARUTHU PANDIAR
ஆக 07, 2025 22:05

எங்கேயோ எதையோ வாங்கிக்கினு உதார் விட்டுணு அலையறான், நாட்டில் வேற பிரச்சினையே இல்லையா, இவன் லெவ லெல்லாம் அவ்ளோ தான் னுட்டு மக்கள் பேசிக்கறாங்க .


Rajkumar
ஆக 07, 2025 20:50

பல்லவியை விடுங்கள்...பதில் சொல்ல வேண்டும். ஏமாற்று வேலையை நிறுத்த வேண்டும்.ஒரு statutory body இப்படி ஏமாற்றுவது கேவலம்


சுந்தர்
ஆக 07, 2025 20:41

ஆதார் எண்ணுடன் வோட்டர் அடையாள எண்ணை இணைத்தால் பிரச்சனை பெருமளவில் குறைந்து விடும். உடனடியாக அதைச் செய்யுங்க.


Karthik Madeshwaran
ஆக 07, 2025 20:21

ராகுல் சொன்ன முழு வீடியோவையும் பார்த்தால் தான் இங்கேயுள்ள பாஜக கொத்தடிமைகளுக்கு உண்மை தெரியும். தினமும் தங்கள் கட்சி நாளேடே மட்டும் படித்தால் இப்படி தான் இருப்பார்கள்.


vivek
ஆக 07, 2025 22:00

உனக்கு புரிஞ்சா கொஞ்சம் சொல்லேன் மாதேஷ்....


vivek
ஆக 07, 2025 22:02

கரடியே காரி துப்பிடிச்சி....நீ இன்னமும் அதை துடைக்கிறே மாதேஷ்


Abdul Rahim
ஆக 07, 2025 20:07

ஆனந்து மற்றும் விவேக்... நீங்க சொன்ன அத்தனையும் உங்க 2 பேருக்கும் தான்


vivek
ஆக 07, 2025 22:01

உன் மண்டையில் இருக்கும் கொண்டை தெரியுது பாய்


Abdul Rahim
ஆக 07, 2025 20:01

மீண்டும் மீண்டும் ராகுலை ஒருமையில் எழுதவைத்து அழகு பார்ப்பது மகா கேவலம்....


vivek
ஆக 07, 2025 23:08

அங்கே அதிமுக வை பற்றி கேவலமா சொன்ன சொம்பு நீ தானே


V.Mohan
ஆக 07, 2025 19:33

எந்த வித படிப்பறிவோ,பட்டறிவோ இல்லாத இந்த ராகுல் வின்சிகான்.. தி சொல்லுவதை அவிங்க இத்தாலி மா...யா சோனியா அம்மா வேண்டுமானால் நம்பி ஸ்டேட்மெண்ட் தரட்டும். மானம் கெட்டாலும் செய்நன்றிக்காக இன்னும் அவிங்க வீட்டுக்கும் கட்சி ஆபீஸூக்கும் நடையாய் நடக்கும் கான்கிரஸின் மற்ற தலைகளுக்கு இன்னும் விசயம் மண்டைக்குள் போகலியா அல்லது பின்பாட்டு கும்பல் ஏத்திவிட்டு இவுங்களை தூக்கி கடாசிடுவாங்க என்கிற பயமா??. என்ன கண்றாவி இது காங்கிரஸூக்கு படிப்பாளிகள் தலைமை ஏற்றால் தான் அந்த கட்சி பழைய லெவலுக்கு போக முயற்சிக்கலாம். இல்லாவிட்டால், காலேஜ் எலக்ஷனுக்கு ரவுசு பண்ணும் பசங்க மாதிரி லட்சியமில்லாம ஆசையை மட்டும் வளர்த்திக் கொண்டு அல்லாடணும்.


Rameshmoorthy
ஆக 07, 2025 18:24

He knows that court will say freedom of speech??? What about his British so called citizenship probe, he is infact maligning constitutional authority and is there a way for the commission to file a defamation??


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை