உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜார்க்கண்டில் 67.59%, மஹாராஷ்டிராவில் 58.22% ஓட்டுப்பதிவு; தேர்தல் கமிஷன் அப்டேட்

ஜார்க்கண்டில் 67.59%, மஹாராஷ்டிராவில் 58.22% ஓட்டுப்பதிவு; தேர்தல் கமிஷன் அப்டேட்

புதுடில்லி: மஹாராஷ்டிராவில் இன்று (நவ.,20) ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஜார்க்கண்டில், 38 தொகுதிகளில் கடைசி மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.மாலை 5 மணி நிலவரப்படி, ஜார்க்கண்டில் 67.59 சதவீதமும், மஹாராஷ்டிராவில் 58.22 சதவீதமும் ஓட்டுப்பதிவாகி உள்ளது என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dijq8cjt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மஹாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 சட்டசபை தொகுதிகளுக்கு, இன்று (நவ.,20) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில், ஆளும் மஹாயுதி கூட்டணிக்கும், எதிர்க்கட்சியான உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, காங்., சரத் பவாரின் தேசியவாத காங்., அடங்கிய, 'மஹா விகாஸ் அகாடி' கூட்டணிக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. சட்டசபை தேர்தலுக்காக, 1,00,186 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. இந்த தேர்தலில், 4,140 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மாலை 5 மணி நிலவரப்படி, 58.22சதவீதம் ஓட்டுப்பதிவாகி உள்ளது.

ஜார்க்கண்ட் தேர்தல்

ஜார்க்கண்டில், கடந்த 13ல், 43 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது. இந்நிலையில் மீதமுள்ள 38 தொகுதிகளில், கடைசி மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி, 14,000க்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாலை 5 மணி நிலவரப்படி ஜார்க்கண்டில் 67.59 சதவீத ஓட்டுப்பதிவாகி உள்ளது.பிரதமர் மோடி சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஜார்க்கண்டில் இரண்டாம் கட்ட ஜனநாயக திருவிழா இன்று நடைபெறுகிறது. அதில் அனைவரும் ஓட்டளித்து புதிய சாதனை படைக்க வேண்டும். இளைஞர்களின் ஒவ்வொரு ஓட்டும் உங்கள் மாநிலத்திற்கு பலம் சேர்க்கும்.மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளுக்கும் இன்று ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. மாநில வாக்காளர்கள் முழு ஆர்வத்துடன் ஜனநாயகக் கொண்டாட்டத்தில் பங்கேற்று ஓட்டளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இளைஞர்கள் மற்றும் பெண்கள் அனைவரும் ஆர்வமுடன் ஓட்டளிக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

SUBBU,
நவ 20, 2024 12:40

மஹாராஷ்ட்ராவில் மொத்தம் 288 தொகுதிகள் உள்ளன. அதில் Majority பெறுவதற்கு 145 தொகுதிகள் வேண்டும். எனவே 145 இடங்களில் வெற்றி பெறும் அணி ஆட்சியமைக்கும். பாஜக தலைமையிலான மஹாயுக்தி என்றழைக்கப்படும் கூட்டணிக்கு 47% சதவீத வாக்குகளும் 146 முதல் 164 இடங்கள் வரை கிடைக்கும் என்றும் காங்கிரஸ் தலைமையிலான மஹா விகாஸ் அகாதி என்றழைக்கப்படும் கூட்டணிக்கு 41% சதவீத வாக்குகளும் 107 முதல் 125 இடங்களே கிடைக்கும் என்று அங்கிருந்து வரும் பெரும்பாலான கருத்து கணிப்புகள் கூறுகின்றன. அங்குள்ள என் நண்பர்களும் கிட்டத்தட்ட அதையே கூறுகிறார்கள்.


Rasheel
நவ 20, 2024 11:15

மஹாராஷ்ட்ராவை பாருங்கள். படித்த முட்டாள்கள் வோட்டு போடுவதில்லை. ஜார்கண்ட் அவ்வளவு படிக்காத மாநிலம். அவன் வோட்டு போடுகிறான். அதிலே பாதி பேர் பங்களாதேஷி??


SUBBU,
நவ 20, 2024 07:59

This Maharashtra election is between Chhatrapati Shivaji ideology and Aurangzeb ideology. The other side is united in their aim to defeat the Hindus and rule us. Dear people of Maharashtra, I hope you have not forgotten that Balkar Sadhu was killed during Uddhav Thackerays regime. So vote for the party that will save our nation and not for the separatists.


Indian
நவ 20, 2024 08:32

வோட் காங்கிரஸ் ..


Mettai* Tamil
நவ 20, 2024 09:28

save our nation vote for B.J.P


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை