உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹார் முதற்கட்ட சட்டசபை தேர்தலில் 64.66 % ஓட்டுப்பதிவு: 25 ஆண்டுகளில் அதிகம்

பீஹார் முதற்கட்ட சட்டசபை தேர்தலில் 64.66 % ஓட்டுப்பதிவு: 25 ஆண்டுகளில் அதிகம்

பாட்னா: பீஹாரில், 121 சட்டசபை தொகுதிகளில் இன்று (நவ.,06) காலை 7 மணிக்கு முதற்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது. இதில் 64.66 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது. கடந்த 2000ம் ஆண்டு 62.57 % ஓட்டு பதிவான நிலையில் 25 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் கூடுதல் ஓட்டு பதிவாகியுள்ளது.பீஹாரில் மொத்தமுள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு, இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில், ஆளும் பா.ஜ., எதிர்க்கட்சியான காங்., கூட்டணிகளிடையே பலத்த போட்டி நிலவுகிறது. தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி, புது போட்டியாளராக தேர்தல் களத்தில் குதித்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2815zqo3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த தேர்தலில், ஆளும் தே.ஜ., கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக நிதிஷ் குமார் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மஹாகட்பந்தன் கூட்டணியில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பீஹாரின் 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளில், முதற்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு இன்று (நவ.,06) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடந்தது. சிறு சிறு பிரச்னைகளை தவிர்த்து தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் 64.66 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.பீஹார் தேர்தல் வரலாற்றில் 2005 பிப்.,ல் நடந்த தேர்தலில் 46.5 %2005 அக்.,ல் நடந்த தேர்தலில் 45.85%2010 ல் 52.73%2015 ல் 56.91%2020 ல் 57.29 % சதவீத ஓட்டுக்கள் பதிவாகி இருந்தது. 25 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் அதிகளவு ஓட்டு பதிவாகியுள்ளது.

7.24 கோடி வாக்காளர்கள்

மொத்தம், 45,341 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இவற்றில், 36,733 ஓட்டுச்சாவடிகள் கிராமப்புறங்களில் உள்ளன. பதற்றமான ஓட்டுச்சாவடிகள் கண்டறியப்பட்டு, அங்கு துணை ராணுவப் படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.

முக்கிய வேட்பாளர்கள் யார்?

ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், மஹாகட்பந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் - ரகோபூர்; பா.ஜ.,வைச் சேர்ந்த துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி - தாராபூர்; ஜனசக்தி ஜனதா தள தலைவரும், தேஜஸ்வியின் சகோதரருமான தேஜ் பிரதாப் - மஹுவா தொகுதியிலும் போட்டியிட்டனர்.

உற்சாகத்துடன் ஓட்டளியுங்கள்!

பீஹார் முதற்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்த நிலையில், பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பீஹாரில் ஜனநாயகக் கொண்டாட்டத்தின் முதல் கட்டம் இன்று. சட்டசபை தேர்தலின் இந்தக் கட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் முழு உற்சாகத்துடன் ஓட்டளிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். இந்தச் சந்தர்ப்பத்தில், முதல் முறையாக ஓட்டளிக்கும் எனது இளம் நண்பர்கள் அனைவருக்கும் எனது சிறப்பு வாழ்த்துக்கள். நினைவில் கொள்ளுங்கள், முதலில் ஓட்டளிக்கவும், பின்னர் உணவுகளை எடுத்து கொள்ளுங்கள். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

ஆரூர் ரங்
நவ 06, 2025 22:23

முன்பெல்லாம் காங்கிரசு, RJD ரவுடிகள் பட்டியலின கிராமங்களுக்குச் சென்று ஓட்டுப் போட கூடாது என மிரட்டுவது வழக்கம். இப்போ உள்ள ஆட்சி அந்த அநியாயத்தை அனுமதிப்பதில்லை அதனால் பயமின்றி வாக்களிக்கின்றனர்.


Rahim
நவ 06, 2025 14:49

1 மணி வரை 42.31 சதவிகிதமாமே இன்னும் 5 மணி நேரம் இருக்கிறது 80 சதவிகிதத்தை தொடும் அப்போ பல்டிக்குமார் அரசு கவிழ்வது உறுதியா


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 06, 2025 15:22

எப்படியும் ஒட்டு எண்ணப்போவது ஒரு வாரம் கழிச்சுதான். அதுக்குள்ளே பல்டிக்குமாரை ஜெயிக்க வச்சுடலாம்.


Indian
நவ 06, 2025 11:22

பா ஜா வின் தோல்வி நெருங்குகிறது ...


v.sriram
நவ 06, 2025 10:06

இன்று அமெரிக்காவில் அதிபர் ட்ரம்பின் புலம்பல் சத்தம். அடுத்த சிலநாட்களில் இந்தியாவின் பிஹாரில் காங்கிரஸ் தோல்வி அடைந்தவுடன் ராகுல், சோனியா இவர்களின் புலம்பல் சத்தம் அதிகமாக இருக்கும். ஆனால் ட்ரம்பை மெச்சவேண்டும். அவர் வோட்டு திருட்டு என்று கூறவில்லை. தோல்வியை ஒப்புக்கொண்டிருக்கிறார். மாறாக இந்தியாவில் ராகுல், சோனியா போன்றவர்கள் தேர்தல் கமிஷன் மீதும், மத்திய அரசின் மீதும் பல குற்றங்களை அடுக்குவார்கள்


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 06, 2025 09:47

இன்று வாக்குப்பதிவு முடிந்தபின் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிடுமா


Mario
நவ 06, 2025 09:02

வாக்குத் திருட்டு தொடங்கியது


ஜெய்ஹிந்த்புரம்
நவ 06, 2025 08:09

நேர்மையான முறையில் தேர்தல் நடந்தால் பாஜக ஒரு சீட் கூட வெற்றி பெறாது.


Sudhakar
நவ 06, 2025 09:03

தமிழ் நாட்டில் DMK ஜெயிச்சது எப்படி


ஜெய்ஹிந்த்புரம்
நவ 06, 2025 08:04

ஒரு லட்சம் பேருக்கு 2 முதல் 200 வாக்குகள் வரை தேர்தல் ஆணையம் கொடுத்துள்ளார்களே, அவர்களுக்கு என்று தனியாக அட்வைஸ் கொடுத்து விட்டீர்களா?


Rahim
நவ 06, 2025 09:26

தமிழ்நாட்டில் குஜராத் பருப்பு வேகாது .....


N Sasikumar Yadhav
நவ 07, 2025 04:01

கோட்டர் கோழிபிரீயாணி என வாங்கி கொண்டு விஞ்ஞானரீதியான ஊழல்வாத திராவிட மாடலுக்கு ஓட்டுப்போடும் நீங்க இதைப்பற்றி பேசக்கூடாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை