உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இண்டிகோவுக்கு எதிரான சபதம்: யெச்சூரிக்காக கைவிட்ட தோழர்

இண்டிகோவுக்கு எதிரான சபதம்: யெச்சூரிக்காக கைவிட்ட தோழர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோழிக்கோடு: இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கசப்பான சம்பவம் காரணமாக, 'இண்டிகோ' நிறுவனத்தின் விமானத்தில் இனி பயணம் செய்ய மாட்டேன் என சபதம் செய்திருந்த மார்க்.கம்யூ., மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான இ.பி.ஜெயராஜன், யெச்சூரிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தன் சபதத்தை வாபஸ் பெற்றார்.கேரளாவின் கண்ணுாரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு இண்டிகோ விமானம், 2022 ஜூன் 13ல் சென்றது. இந்த விமானத்தில், முதல்வர் பினராயி விஜயன், மார்க்.கம்யூ., மூத்த தலைவர் இ.பி.ஜெயராஜன், 74, ஆகியோர் பயணித்தனர். மேலும் இதில், காங்., இளைஞரணி நிர்வாகிகள் இருவரும் பயணித்தனர். திருவனந்தபுரத்தில் விமானம் தரையிறங்கியதும், தங்க கடத்தல் வழக்கு விவகாரத்தில், முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக, காங்., இளைஞரணி நிர்வாகிகள் முழக்கம் எழுப்பினர்.இதனால் ஆத்திரமடைந்த இ.பி.ஜெயராஜன், அந்த இருவரையும் பிடித்து தள்ளினார். இதை கவனத்தில் எடுத்த இண்டிகோ, தங்கள் நிறுவனத்தின் விமானத்தில் பறக்க, இ.பி.ஜெயராஜனுக்கு மூன்று வாரங்கள் தடை விதித்தது. இதனால் அதிருப்தி அடைந்த இ.பி.ஜெயராஜன், 'இனி வரும் காலங்களில் நானும், என் குடும்பத்தினரும் இண்டிகோ விமானத்தில் பயணிக்க மாட்டோம்' என ஆவேசமாகக் கூறினார்.இந்த சபதத்தின்படி, இரு ஆண்டுகளாக இண்டிகோ நிறுவனத்தை புறக்கணித்து வந்த இ.பி.ஜெயராஜன், நேற்று முன்தினம் இதை கைவிட்டு, டில்லிக்கு புறப்பட்டுச் சென்றார். இது குறித்து, இ.பி.ஜெயராஜன் கூறுகையில், “மறைந்த மார்க்.கம்யூ., பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரிக்கு அஞ்சலி செலுத்த, டில்லிக்கு விரைவாக செல்ல வேண்டும் என்பதால், இண்டிகோ விமானத்தில் பயணித்தேன். அவரை விட பெரியது எதுவும் இல்லை,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Karthikeyan
செப் 15, 2024 16:01

இதிலிருந்து நீ ஒரு சுத்தமான கம்யூனிஸ்ட்காரன்தான் எனத் தெரிகின்றது... இதுல சப்பைக்கட்டு வேற...


R K Raman
செப் 15, 2024 12:20

காத்துக் கிட்டிருந்தார் போல...


Azar Mufeen
செப் 14, 2024 11:17

ஆமாங்க நம்ம ஐ பி எஸ் மாதிரி கதவை திறந்திருக்கணும்


ஆரூர் ரங்
செப் 14, 2024 11:11

வாத்ராவை மகிழ்விக்க இப்படி செய்திருப்பாரோ? புரிஞ்சா சரி.


M Ramachandran
செப் 14, 2024 11:07

கொள்கைய்யற்ற இக்கால கம்யூனிஸ்ட்டு


Shekar
செப் 14, 2024 10:19

இண்டிகோ தவிர வேற விமானமே நாட்டில் இல்லையா? ரெண்டு மணிநேரம் முன்னாடியோ அல்லது பின்னாடியோ போ. பினராய் கூப்பிட்டிருப்பார், ஓசினா, வைராக்கியமாவது மண்ணாவது.


Iniyan
செப் 14, 2024 09:00

கொள்கையாவது வெங்காயமாவது. பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்


Raj
செப் 14, 2024 08:10

கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாமல் பார்த்துக்கொள்வார்கள் இந்த அரசியல்வாதிகள். வெட்கக்கேடு.


கண்ணன்
செப் 14, 2024 06:46

கம்யூக்களே இப்படித்தான்… எதற்கும் உறுதியற்ற கோழைகள் காற்றில் அட்டைக்கத்தி வீசுபவர்கள்


Kasimani Baskaran
செப் 14, 2024 06:44

இந்தியாவின் ஸ்டார் முதலாளி என்றுதான் சொல்லுமளவுக்கு


முக்கிய வீடியோ