உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹாரில் சாலையில் கொட்டப்பட்ட விவிபேட் ஒப்புகைச் சீட்டுகள்; அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட்

பீஹாரில் சாலையில் கொட்டப்பட்ட விவிபேட் ஒப்புகைச் சீட்டுகள்; அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா; பீஹாரில் சமஸ்திபூர் மாவட்டத்தில் கல்லூரி அருகே சாலையில் குவியல்,குவியலாக விவிபேட் சீட்டுகள் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் தேர்தல் கமிஷனைச் சேர்ந்த 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பீஹார் சட்டசபைக்கான முதல்கட்ட ஓட்டுப்பதிவு நடந்து முடிந்து விட்டது. 2ம் கட்ட ஓட்டுப்பதிவு நவ.11ம் தேதி நடக்க உள்ளது. இந் நிலையில் முதல்கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்ற சமஸ்திபூரில் உள்ள ஒரு கல்லூரி அருகே சாலைகளில் குவியல், குவியலாக விவிபேட் சீட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த சீட்டுகள், சரைன்ரஞ்சன் சட்டசபை தொகுதியின் கீழ் உள்ள ஓட்டு மையத்திற்கு அருகில் இருந்த விவரமும் வெளியானது. இதையடுத்து, சமஸ்திபூர் மாவட்ட தேர்தல் அதிகாரி ரோஷன் குஷ்வாஹா சம்பவ பகுதிக்கு நேரில் சென்றார். சம்பந்தப்பட்ட அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியதோடு, எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்தும் பல்வேறு கேள்விகளும் எழுந்தன. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக, பணியில் அலட்சியம் காட்டியதாக 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இது குறித்து பேசிய தேர்தல் கமிஷனர் ஞானேஷ்வர் குமார், சம்பவ இடத்தில் விசாரணை நடத்த மாவட்ட அதிகாரிக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த ஓட்டுச்சீட்டுகள் எல்லாம், மாதிரி ஓட்டுச்சீட்டுகளில் இருந்து எடுக்கப்பட்டவை. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் நன்றாக வேலை செய்கிறதா என்பதை சரிபார்க்க, உண்மையான ஓட்டு அளிக்கும் முன் நடத்தப்பட்ட போலி ஓட்டுப்பதிவு சீட்டுகள்.இவ்வாறு அவர் கூறினார். விவிபேட் என்பது என்ன? ஒருவர் ஓட்டு போட்டார்களா? அவரின் ஒட்டு பதிவாகி இருக்கிறதா என்பதை விவிபேட் இயந்திரம் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதாவது, வாக்காளர்கள் தங்களின் ஓட்டை செலுத்திய பின்னர், மின்னணு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ள விவிபேட் எனப்படும் இயந்திரத்தில் அதன் விவரம் தெரிய வரும். அதில் வாக்காளர் யாருக்கு ஓட்டு போட்டாரோ அந்த வேட்பாளர் பெயர், சின்னர் இரண்டும் 7 விநாடிகளுக்கு விவிபேட் திரையில் ஒளிரும். பின்னர், இந்த விவரம், ஒப்புகை சீட்டாக அச்சாகி இயந்திரத்தில் பொருத்தப்பட்டு உள்ள பெட்டிக்குள் விழுந்துவிடும். இந்த பெட்டியை, தேர்தல் நடத்தும் அதிகாரியால் மட்டுமே திறக்க முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

அருண், சென்னை
நவ 09, 2025 10:09

இங்கு khan-crossக்கு முட்டுக்கொடுப்பவர்கள், இந்தியா முன்னேற்றம் அடைவதில் பெருமைகொள்பவர்களாக இருக்க வாய்ப்பில்லை...


Rahim
நவ 09, 2025 09:38

ஞானேஸ்வர் குமார் முற்றிலும் விலை போயி விட்டார், தேர்தல் கமிஷனின் நேர்மை கௌரவம் அனைத்தும் தொலைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது ....


கரீம் பாய், ஆம்பூர்
நவ 09, 2025 15:05

ஆமாம் ரஹிம் பாய். இங்கே இவ்ளோ ஊழல் செய்தும் 8 கோடி மக்கள் எதிர்த்து ஓட்டு போட்டும் 40 க்கு 40 எப்படி? ஓட்டு திருட்டு அல்ல, இது ஓட்டு கொள்ளை. தேர்தல் ஆணையத்தை கலைத்து தமிழாக்கம் முழுவதும் கவர்னர் ஆட்சி அமுல் செய்து மறு தேர்தல் நடத்த வேண்டும். அப்போ மாடல் இலட்சணம் தெரியும்...


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 09, 2025 09:33

தேர்தல் ஆணையம் ரொம்ப ரொம்ப நேர்மையானதாம். டீக்கடையில பேசிக்கிட்டாக


naranam
நவ 09, 2025 09:27

மாதிரி வாக்குகளின் வி வி பேட் சீட்டுக்களே ஆனாலும் தேர்தல் நேரத்தில் ஏன் அவற்றை வீச வேண்டும்? இது ராகுல் தேஜஸ்வி யாதவ் போன்றோர்களின் சதித் திட்டமாகத் தான் இருக்கும் என்று தோன்றுகிறது.


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 09, 2025 13:36

தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகளின் செயலுக்கும் ராகுலுக்கும் என்ன சம்பந்தம். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்


Swaminathan L
நவ 09, 2025 09:17

செலுத்தப்பட்ட மின்னணு வாக்குகள் அனைத்தும் கண்ட்ரோல் யூனிட் மெமரியில் தான் உள்ளன. அது ஸீல் செய்யப்பட்டு பாதுகாப்பாக பூட்டப்பட்ட அறைக்குள் இந்த விவிபாட் இயந்திரத்தோடு வைக்கப்பட்டிருக்கிறது. போலீஸ் பாதுகாப்பில் உள்ள வீல் வைக்கப்பட்ட அறைக்குள் புகுந்து இந்த ஒப்புகைச் சீட்டுகளைத் திருடி வந்து வெளியே கொட்டி நாடகமாடினாலும், கண்ட்ரோல் யூனிட்டைத் திரும்பிச் சென்று மறைத்து விடலாமோயொழிய அதில் பதிவாகியிருக்கும் ஓட்டுக்களை மாற்ற முடியாது. எனவே, தேர்தல் ஆணையம் இந்த ஒப்புகைச் சீட்டுகளை உடனடியாகக் கைப்பற்றி அவை டம்மி சீட்டுகளா அல்லது வாக்களிப்பின்போது தயாரானவையா என்கிற உண்மையை வெளிப்படுத்த வேண்டும். என்ன காரணத்திற்காக இரண்டு அதிகாரிகள் பணியிடை நீக்கம் ஆனார்கள் என்பதையும் தெளிவு படுத்த வேண்டும்.


Mario
நவ 09, 2025 07:30

செயல் இழந்த தேர்தல் கமிஷன்


Kasimani Baskaran
நவ 09, 2025 06:54

காங்கிரஸ் தயாரித்து போலியானதாகவே இருக்கவே வாய்ப்பு இருக்கிறது. தில்லு முல்லு செய்வதில் காங்கிரஸ் கெட்டி - அவர்களே இது போல பிரிண்ட் செய்து குப்பையில் கொட்ட ஏற்பாடு செய்து இருப்பார்கள். ஆய்வுக்கு உட்படுத்தினால் புரிந்து கொள்ள முடியும்


Rahim
நவ 09, 2025 09:29

உங்க கருத்தை பார்த்து உங்களுக்கே வெட்கமா இல்லையா


Ramesh Sargam
நவ 09, 2025 00:07

ஏற்கனவே பொங்குவார் ராகுல். இப்ப பொங்குவது அதிகமாக இருக்கும்.


Rahim
நவ 09, 2025 09:32

மனசாட்சியோடு எழுதுங்கள் இது தேர்தல் கமிஷனின் தோல்வி என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா ?இன்னும் வழக்கம்போல ராகுலை தூற்றுவதை நிறுத்திவிட்டு தேர்தல் கமிஷனை கொஞ்சம் கேள்வி கேட்க நினையுங்கள்....


ஜெய் ஹிந்த் புறம்
நவ 08, 2025 22:17

ஸ்லீப்பர் செல்


Saai Sundharamurthy AVK
நவ 08, 2025 22:05

ராகுல் சதியாக இருக்கலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை