20 தொகுதிகள் வேண்டும்!
மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், 'இண்டி' கூட்டணியில் சமாஜ்வாதியும் போட்டியிட விரும்புகிறது. நாங்கள், 12 தொகுதிகளை கேட்டு உள்ளோம். காங்கிரசும், மற்ற கூட்டணி கட்சிகளும் எங்களுக்கு இந்த தொகுதிகளை ஒதுக்கும் என நம்புகிறோம்.அகிலேஷ் யாதவ், தலைவர், சமாஜ்வாதிசெலவு எவ்வளவு?
மஹாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா தலைமையில் இருந்த கூட்டணி அரசை, பா.ஜ., 2022ல் கவிழ்த்தது. இந்த கட்சிகளை உடைப்பதற்கும், எம்.எல்.ஏ.,க்களை இழுப்பதற்கும் பா.ஜ., எவ்வளவு செலவிட்டது என தெரிய வேண்டும். இதற்கு பா.ஜ.,வால் பதிலளிக்க முடியுமா?ஜெய்ராம் ரமேஷ், பொதுச்செயலர், காங்கிரஸ்மிகப்பெரிய ஊழல்!
பீஹாரின் ஒவ்வொரு வீதியிலும் மதுக்கடைகளை திறந்தவர் தான் நிதீஷ் குமார். இப்போது மது விலக்கை அமல்படுத்தி விட்டதாக, மஹாத்மா காந்தி போல் பேசுகிறார். அவரது கட்சியினர், கள்ளச்சாராய விற்பனை வாயிலாக பல கோடி ரூபாய் சம்பாதிக்கின்றனர். இதில், மிகப்பெரிய ஊழல் நடக்கிறது. தேஜஸ்வி யாதவ், தலைவர், ராஷ்ட்ரீய, ஜனதா தளம்