உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இறந்து விட்டதாக நாடகம் ஆடிய தேடப்படும் குற்றவாளி சிக்கினார்

இறந்து விட்டதாக நாடகம் ஆடிய தேடப்படும் குற்றவாளி சிக்கினார்

புதுடில்லி:கொள்ளை மற்றும் சட்டவிரோத துப்பாக்கிகள் விற்ற வழக்குகளில் போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க, தான் இறந்து விட்டதாக நாடகம் ஆடிய இளைஞர் கைது செய்யப்பட்டார். புதுடில்லி முங்கேஷ்பூரைச் சேர்ந்தவர் வீரேந்தர் விமல்,35. கொள்ளை மற்றும் சட்டவிரோதமாக துப்பாக்கிகள் விற்றது, திருட்டு உட்பட ஏராளமான வழக்குகள் வீரேந்தர் மீது நிலுவையில் உள்ளன. இவர் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 2021ம் ஆண்டு வீரெந்தர் விமல் மரணம் அடைந்து விட்டதாக போலி ஆவணங்கள் தாக்கல் செய்து, டில்லி மாநகராட்சியில் இறப்புச் சான்றிதழ் பெறப்பட்டது. இதையடுத்து,ம் விமல் மீதான நீதிமன்ற நடவடிக்கைகள் கைவிடப்பட்டன. சமீபத்தில் போலீசார் விமல் மீதான வழக்குகளை முடிக்கும் நடவடிக்கைக்காக ஆய்வு செய்த போது, இறப்பு பதிவில் முரண்பாடுகள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். விசாரணை நடத்திய போது வீரேந்தர் விமல் மரணம் அடையவில்லை என்பது தெரிய வந்தது. தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து, உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் பதுங்கி இருந்த வீரேந்தர் விமலை கைது செய்தனர். குற்றவாளியின் அடையாளம், பயோமெட்ரிக் தரவுத்தளமான க்ரைம் குண்ட்லி மற்றும் முக அங்கீகார அமைப்பு மென்பொருளைப் பயன்படுத்தி உறுதிப்படுத்தப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட விமல், சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை