உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேடப்பட்ட கொள்ளையன் சுட்டுப்பிடிப்பு காலில் குண்டு பாய்ந்து சுருண்டார்

தேடப்பட்ட கொள்ளையன் சுட்டுப்பிடிப்பு காலில் குண்டு பாய்ந்து சுருண்டார்

புதுடில்லி: கொள்ளை வழக்கில் தேடப்பட்ட வாலிபர், துப்பாக்கிச் சண்டைக்குப் பின் கைது செய்யப் பட்டார். காலில் குண்டு பாய்ந்த அவருக்கு சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப் படுகிறது. ஜாமி ன் கடத்தல், கொள்ளை மற்றும் வழிப்பறி வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஹிமான்ஷு, 22, ஜூன் மாத இறுதியில் ஜாமினில் வந்தார். சமீபத்தில், ஹிமான்ஷு தன் கூட்டாளியுடன் சேர்ந்து பீட்சா டெலிவரி செய்யும் சிறுவனை மிரட்டி பணத்தை பறித்துச் சென்றார். இதுகுறித்த புகார்படி போலீசார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். ஹிமான்ஷுவின் கூட்டாளி கவுஷல், 24ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், பதர்பூரில் மற்றொரு கொள்ளைக்கு ஹிமான்ஷு திட்டமிட்டு இருப்பது தெரிய வந்தது. தனிப்படை போலீசார், நேற்று முன் தினம் இரவு, 9.20 மணிக்கு பதர்பூர் மேம்பாலம் அருகே, ஹிமான்ஷுவை சுற்றி வளைத்தனர். ஆனால், அவர் போலீஸ் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். போலீஸ் கொடுத்த பதிலடியில் ஹிமான்ஷு வலது காலில் குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்தார். பறிமுதல் அவரை கைது செய்த போலீசார், சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப் படுகிறது. ஹிமான்ஷுவிடம் இருந்து கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சிகிச்சை முடிந்து திரும்பியதும் அவர் சிறையில் அடைக்கப்படுவார் என போலீசார் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை