உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாட்டின் நலனுக்காகவே வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா: ராஜ்யசபாவில் நட்டா பேச்சு

நாட்டின் நலனுக்காகவே வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா: ராஜ்யசபாவில் நட்டா பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா நாட்டின் நலனுக்காக மட்டுமே கொண்டு வரப்படுகிறது. எந்த கட்சியின் நலனுக்காகவும் கொண்டு வரப்படவில்லை,'' என மத்திய அமைச்சர் ஜேபி நட்டா பேசினார்.வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே நேற்று லோக்சபாவில் நிறைவேறியது. இம்மசோதா இன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது.இம்மசோதா மீதான விவாதத்தில் மத்திய அமைச்சர் நட்டா பேசியதாவது: நாட்டின் நலனுக்காகவே வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. 25 மாநில வக்ப் வாரியங்களுடன் கலந்து ஆலோசித்தோம். பார்லிமென்ட் கூட்டுக்குழுவினர் நாட்டின் 25 முக்கிய நகரங்களுக்கு சென்று கருத்துக்களை பெற்றனர்.ஆனால், மசோதா மீதான விவாதத்தில் இருந்து திசைதிருப்ப எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன. அவர்களிடம் விவாதிப்பதற்கு என உண்மையான எந்த விஷயமும் இல்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் வக்ப் சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்பட்ட போது அமைக்கப்பட்ட கூட்டுக்குழுவில் 13 பேர் மட்டுமே இருந்தனர். தற்போது 31 பேர் உள்ளனர். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது, 2013ல் கொண்டு வரப்பட்ட வக்ப் குறித்த மசோதா, 2014ல் உங்களை காப்பாற்றவில்லை. எதிர்க்கட்சிகள் இம்மசோதா குறித்து பொய்த் தகவலை பரப்புகின்றன. இது நிராகரிக்கப்பட வேண்டும். இம்மசோதா விவகாரத்தில் ஜனநாயக முறைகளை மோடி அரசு பின்பற்றுகிறது.திட்டங்களை அமல்படுத்தும்போது, மக்களின் நலனுக்கு தான் பிரதமர் மோடி முன்னுரிமை அளித்து வருகிறார். தேசிய நீரோட்டத்தில் முஸ்லிம்களை சேர்க்காமல் 70 ஆண்டுகள் வைத்து இருந்தது யார்? முத்தலாக் முறையை நிறுத்த பிரதமர் மோடிக்காக முஸ்லிம் பெண்கள் காத்து இருந்தனர். இந்த முறையை பலநாடுகள் நிறுத்திவிட்டன. எந்த கட்சியின் நலனுக்காகவும், யாரை திருப்திப்படுத்தவும் இம்மசோதா கொண்டு வரப்படவில்லை.சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தோனேஷியா வக்ப் வாரியத்தை சீரமைத்து உள்ளது. சவுதி அரேபியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளும் வக்ப் வாரியத்தை சீரமைத்து உள்ளன. இந்தியாவும் ஏன் சீரமைக்கக்கூடாது. வக்ப் வாரியங்கள் முறையாக நிர்வகிக்கப்படக்கூடாதா? இவ்வாறு நட்டா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

K.n. Dhasarathan
ஏப் 03, 2025 20:51

வாக்ப வாரிய சட்ட திருத்தம் ஏதற்கு ? முஸ்லிம்கள் மீது திடீர் கரிசனம் ஏன் ? பல லட்சம் கோடி சொத்துக்கள் , தேவை இல்லாமல் நாடாளுமன்ற செயற்பாடுகளை முடக்கியது மிக பெரிய முட்டாள்தனம்.இவ்வளவு நாள் எங்கிருந்தார்கள் இவர்கள் ? ஐயா, எங்காவது சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு என்றால் அதை சட்ட முறைப்படி மீட்க வேண்டும் தான், அதில் மாற்ற்றுக்கருத்து இல்லை, ஆனால் அதற்காக சட்டத்தையே மாற்றனும் என்றால் தேவையில்லாத ஒன்று தான். காலம் தான் கிரிமினல் வேஸ்ட் .


ஆரூர் ரங்
ஏப் 03, 2025 21:18

வக்ஃபு செயல்பாடுகளால் எல்லா மதத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். வக்ஃபு வாரியம் மீது இஸ்லாமியர்களே 9000 வழக்குகளை போட்டுள்ளார்கள். எல்லோருக்கும் சேர்த்துதான் இந்த சட்டத்திருத்தம்.


J.Isaac
ஏப் 03, 2025 20:41

கோடிக்கணக்கான இந்து மக்கள் ஒரு நேர உணவிற்கு வழியின்றி தங்க உறைவிடமின்றி , வாழ்வாதாரம் இன்றி அலையும் போது, அவர்களது நலனில் அக்கறை செலுத்தாமல் மக்களை திசை திருப்ப இது ஒரு நாடகம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை