வாசகர்கள் கருத்துகள் ( 1 )
புறா அனுப்பாம, சண்டை போட்டு ஜெயிக்க பாரு
புதுடில்லி: ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையை தொடர்ந்து, பாகிஸ்தான் எல்லையோர பகுதிகளில் உள்ள குஜராத், ராஜஸ்தான், ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் போர் ஒத்திகை இன்று நடக்கிறது.இந்தியா - பாக்., இடையே கடந்த 10ம் தேதி போர் நிறுத்தம் அமலானது. எனினும், இருநாட்டு எல்லைகளிலும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.இதற்கிடையே பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள குஜராத், ராஜஸ்தான், ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில், போர் ஒத்திகையை இன்று நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இரு நாடுகளுக்கும் இடையே போர் நடக்கும்போது, பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்; என்ன செய்யக்கூடாது என்று பயிற்சி அளிப்பதே போர் ஒத்திகை. இதுதவிர தங்களையும், தங்கள் உடைமைகளையும் எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்தும் பொதுமக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இதேபோல் பஞ்சாபில் ஜூன் 3ல் போர் ஒத்திகை நடக்கவுள்ளது.முன்னதாக, கடந்த 7ம் தேதி நாடு முழுதும் போர் ஒத்திகையை மத்திய அரசு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
புறா அனுப்பாம, சண்டை போட்டு ஜெயிக்க பாரு