மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
2 hour(s) ago | 1
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
8 hour(s) ago | 2
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
8 hour(s) ago
பெங்களூரு : கடந்த சட்டசபை தேர்தலின் போது விதிமுறை மீறிய ஸ்ரீராமுலு மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த கர்நாடக உயர்நீதிமன்றம், 'விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றால் பிடிவாரன்ட் பிறக்கப்படும்' என எச்சரித்துள்ளது.கடந்தாண்டு சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறாமல், பா.ஜ., வேட்பாளரை ஆதரித்து, அமைச்சராக இருந்த ஸ்ரீராமுலு ஊர்வலம் நடத்தினார். இது தொடர்பாக, தேர்தல் அதிகாரி, ஏப்., 28 ம் தேதி போலீசில் புகார் அளித்தார்.இவ்வழக்கு, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கை ரத்து செய்ய கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீராமுலு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இம்மனு, நீதிபதி கிருஷ்ணா தீட்சித் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரர் தரப்பு வழக்கறிஞரிடம், 'இவ்வழக்கில் உங்கள் மனுதாரர், நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளாரா' என்றார். வழக்கறிஞர், 'இல்லை' என்றார்.மீண்டும் நீதிபதி, 'விசாரணை நீதிமன்றம் நோட்டீஸ் அல்லது சம்மன் அனுப்பப்பட்டதா. எத்தனை முறை அனுப்பப்பட்டது' என்றார்.வழக்கறிஞர், 'நான்கு முறை' என்றார்.இதனால் கோபமடைந்த நீதிபதி, 'உங்களின் நடவடிக்கையால் நீதிமன்றம் மகிழ்ச்சியாக உள்ளது என்று அர்த்தமா. உங்கள் மனுதாரர், சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராவதில் என்ன தடை உள்ளது. நீதிமன்றம் என்றால் என்ன என்று நினைக்கிறீர்கள்.'மனுதாரருக்கு அடுத்த விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்பவும். நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால், அவருக்கு கைது வராண்ட் பிறப்பிக்கப்படும்' என்றார்.
2 hour(s) ago | 1
8 hour(s) ago | 2
8 hour(s) ago