மேலும் செய்திகள்
கிருமாம்பாக்கத்தில் இன்று குடிநீர் 'கட்'
11-Apr-2025
கரோல்பாக்:தெற்கு டில்லியின் சில பகுதிகளில் இன்றும் நாளையும் தண்ணீர் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.குடிநீர் வாரியம் வெளியிட்ட அறிக்கை:தெற்கு டில்லியின் சாதிக் நகர் பகுதிக்கு அருகில் ஒரு பிரதான நீர் விநியோக பாதையை சரிசெய்யும் பணி இன்றும் நாளையும் மேற்கொள்ளப்படுகிறது.இதனால் சிராக் டில்லி, கிர்கி எக்ஸ்டன்ஸன், பஞ்சீல் விஹார், சாகேத் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளுக்கு இந்த நாட்களில் தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட வாய்ப்புள்ளது.நுகர்வோர் போதுமான அளவு தண்ணீரை சேமித்து வைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசர தேவை என்றால் வாரியத்தின் 1916 / 1800117118 என்ற கட்டணமில்லா எண்ணில் பதிவு செய்து டேங்கர் தண்ணீரை பெற்றுக் கொள்ளலாம். குடிநீர் வாரிய வாட்ஸாப் எண்: 965029102.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11-Apr-2025