உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரியங்காவுக்கு எதிராக களமிறங்கிய சத்யன் மோகெரி; யார் இவர் தெரியுமா?

பிரியங்காவுக்கு எதிராக களமிறங்கிய சத்யன் மோகெரி; யார் இவர் தெரியுமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வயநாடு: வயநாடு இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்காவை எதிர்த்து மூத்த தலைவர் சத்யன் மோகெரியை வேட்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. காலியாக உள்ள லோக்சபா தொகுதியான வயநாடு மற்றும் பாலக்காடு மற்றும் செலக்காரா சட்டசபை தொகுதிகளுக்கும் நவம்பர் 13ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த அறிவிப்பை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா அறிவிக்கப்பட்டார். இந்த அறிவிப்பு வந்த உடனே காங்கிரஸ் கட்சியினர் தங்களின் பிரசாரத்தை தொடங்கி விட்டனர். முதல்முறையாக தேர்தலில் போட்டியிடும் பிரியங்காவை எதிர்த்து யாரை களமிறக்குவது என்பது குறித்து மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் தீவிரமாக ஆலோசித்து வந்தன.ராகுல் போட்டியிட்டபோது அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆனி ராஜா போட்டியிட்டார். இந்த முறை போட்டியிடும் வேட்பாளர் பற்றி முடிவு செய்வதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. முடிவில், அக்கட்சியின் மூத்த தலைவர் சத்யன் மோகெரி வேட்பாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். சத்யன் மோகெரி இதுக்கு முன்பாக, 1987-2001ம் ஆண்டு நடபுரம் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்துள்ளார். பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியதால் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். இவர் ஏற்கனவே, கடந்த 2014ம் ஆண்டு வயநாடு தொகுதியில் போட்டியிட்டு, 20,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், '2014ல் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு, காங்கிரசுக்கு எதிராக எங்களின் சிறப்பான பங்களிப்பை கொடுத்தோம். அதே உற்சாகத்துடன் இந்த முறையும் தேர்தலில் போட்டியிடுவேன். இங்கு வேண்டுமானால் ராகுல் தோல்வியடையாமல் இருந்திருக்கலாம். ஆனால், வட இந்தியாவில் தோல்வியடைந்ததால் தான் இங்கு வந்து போட்டியிட்டார். கருணாகரனே இங்கு தோல்வியடைந்துள்ளார். அதே நிலைமை தான் பிரியங்காவுக்கும்,' எனக் கூறினார். காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்த நிலையில், பா.ஜ., இன்று வேட்பாளர் குறித்த அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

M Ramachandran
அக் 18, 2024 13:36

சதிகார குடும்ப அரசியாலுக்கும் நாட்டு எதிராகா பாசம் வைத்திருக்கும் வெளி நாட்டு கம்யூனிசம் என்று ஏமாற்றும் பாசமுடைய கட்சிக்கும் அண்டர் ஸ்டாண்ட்டிங்


Rajasekar Jayaraman
அக் 18, 2024 12:48

சிரிக்காதே தாயே குழந்தைகள் பயப்படுவார்கள் பெரியவங்க எங்களுக்கே பயமா இருக்குது.


saiprakash
அக் 18, 2024 14:05

இதைவிட மோசமா சிரிப்பாங்களா


Anand
அக் 18, 2024 11:46

காங்கிரஸும் கம்மிகளும் இண்டி கூட்டணியின் அங்கத்தினர், இவர்கள் எதிர்ப்பது பிஜேபியை, அப்படி இருக்கையில் இங்கு மட்டும் ஒருவருக்கொருவர் அடித்து பிராண்டி கட்டிப்புரண்டு உருளுவது ஏன்?


வைகுண்டேஸ்வரன்
அக் 18, 2024 17:09

இதற்கு கேரள முதல்வர் எப்போதோ பதில் சொல்லி விட்டாரே. "காங்கிரஸ் சை எதிர்த்து கம்யூனிஸ்ட் போட்டியிடலைன்னா பிஜேபி இரண்டாவது இடத்துக்கு வந்துட்டோம் னு சொல்லுவாங்க. அதைத் தடுக்கத் தான் போட்டியிடுகிறோம் " - என்று சொன்னார்.


ஆரூர் ரங்
அக் 18, 2024 11:11

கள்ளக் கூட்டணி உறவுக்காக INDI க்குள் போலி எதிர்ப்பு . படித்த கேரள மக்களை ஏமாளிகளாக்குகிறார்கள்.


கிஜன்
அக் 18, 2024 09:56

பிரியங்கா காந்தி அவர்கள் வயநாட்டில் மாபெரும் வெற்றிபெறுவார் ....


ஆரூர் ரங்
அக் 18, 2024 12:48

99 என்பது 99 ஆகவே தொடரும்.


Kumar Kumzi
அக் 18, 2024 13:08

மூர்க்கம் பல பெயர்களில் உலாவும் போலருக்கே ஹீஹீஹீ


Raghavan
அக் 18, 2024 09:53

காங்கிரஸ் திராவிட குடும்ப வாரிசுகளை விட்டால் போட்டியிட அவர்கள் கட்சியில் வேறு யாரும் இல்லையா? இந்த முறை பிரியங்காவை தோற்கடித்து வயநாடு மக்கள் அவர்களுக்கு பாடம் கற்பிக்கவேண்டும். இவர்கள் பரம்பரையை விட்டால் வேறு யாரும் போட்டியிட தயாராக இல்லைபோல் ஒரு மாயையை மக்கள் மத்தியில் இவர்கள் உண்டாக்குகிறார்கள்.


Rajathi Rajan
அக் 18, 2024 11:44

ஏம்ப்பா ராகவா தில் இருந்த நீயோ அல்லது உன் குடும்பமோ யாராவது வந்து போட்டி போடுங்க பார்க்கலாம் வெட்டி பேச்சு பேசாத


வைகுண்டேஸ்வரன்
அக் 18, 2024 16:06

Ragavan:: பிஜேபி யின் 76 MP க்கள் வாரிசுகள். 28 ஒன்றிய அமைச்சர்கள் வாரிசுகள். இந்த பொது அறிவு, யோசிக்கும் திறன் எல்லாம் உங்களுக்கு தெரியாமலே வெச்சிருக்காங்க பாருங்க, அவிங்க அங்க நிக்கறாங்க.


Shekar
அக் 18, 2024 09:47

நம்புங்க நாங்கதான் இன்டி கூட்டணி உறுப்பினர்கள், எல்லோருமா சேர்ந்து ஒற்றுமையாய் பிஜேபியை எதிர்க்கிறோம்


raja
அக் 18, 2024 08:33

திருட்டு திராவிடற்களின் தொப்புள் கொடி உறவுகள் அவருக்கே ஒட்டு போடும்...


Palanisamy Sekar
அக் 18, 2024 08:26

பாதுகாப்பான தொகுதியை தேடி தேடி தேடி டெல்லி டு கேரளா. மஹா கேவலமா இருக்குது. எப்படியோ தன்னோட கணவர் மீதுள்ள நில அபகரிப்பு வழக்கை தள்ளிப்போட இந்த எம் பி பதவியை பயன்படுத்தலாம் என்று வந்துள்ளார் பிரியங்கா. ஆனாலும் வெற்றிபெறுவது சந்தேகம்தான்.


A Viswanathan
அக் 18, 2024 10:33

யார் வெற்றி பெற்றாலும் பரவாயில்லை.காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடிக்க வேண்டும். இவர் வெற்றி பெற்றாலும் தொகுதிக்கும் வரமாட்டார் மக்களுக்கும் ஒன்றும் செய்யமாட்டார்.மக்களே சிந்தித்து வாக்களியுங்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை