உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வயநாடு தொகுதி இடைத்தேர்தல்; களம் இறங்கியது காங்கிரஸ்

வயநாடு தொகுதி இடைத்தேர்தல்; களம் இறங்கியது காங்கிரஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வயநாடு: கேரளாவில் நடைபெறும் இடைத்தேர்தலுக்கான பணிகளில் மற்ற கட்சிகளை காட்டிலும் காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது.லோக்சபா தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல், ரேபரேலியை தேர்வு செய்ததன் மூலம், வயநாடு காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்டது. அதேபோல, பாலக்காடு காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஷபி பரம்பில் மற்றும் செலக்காரா தொகுதி மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., கே. ராதாகிருஷ்ணன் ஆகியோரும், லோக் சபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதன் காரணமாக, காலியான வயநாடு லோக்சபா தொகுதிக்கும், பாலக்காடு மற்றும் செலக்காரா சட்டசபை தொகுதிகளுக்கும் நவம்பர் 13ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, காங்கிரஸ் கட்சியினர், பிரசாரத்தை தொடங்கி விட்டனர். வயநாடு தொகுதியில் பிரியங்காவின் போட்டோ அடங்கிய போஸ்டர்களையும், பேனர்களையும் ஒட்டி ஓட்டு சேகரிப்பில் ஈடுபடத் தொடங்கி விட்டனர். ஆனால், மற்ற கட்சிகளான பா.ஜ., மற்றும் இடதுசாரி கூட்டணிகள் இன்னும் வேட்பாளரை தேடும் பணியிலேயே இருந்து வருகிறது. பா.ஜ., சார்பில் ஷோபா சுரேந்திரனும், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் எம்.எல்.ஏ., பிஜிமோலையும் நிறுத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால், பா.ஜ.,வின் ஷோபா சுரேந்திரன், பாலக்காடு சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புவதாக சொல்லப்படுகிறது.இதனிடையே, அக்.,17ம் தேதி இடதுசாரி கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வேட்பாளரை அறிவிக்க இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இ.ஜே., பாபு தெரிவித்துள்ளார். அதேபோல, 17 மற்றும் 18ம் தேதிகளில் கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசி வேட்பாளரை தேர்வு செய்ய இருப்பதாக பா.ஜ., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Nallavan
அக் 18, 2024 09:39

இ கா வெற்றி உறுதி


bgm
அக் 17, 2024 07:58

மெத்த படித்த மக்கள், மாநிலம்...முடிவுகள் அதி மேதாவிதனமாக இருக்கும். ஆச்சரியப்படுவதற்கில்லை


ஆரூர் ரங்
அக் 16, 2024 21:44

ஃபட்வா உ‌த்தரவு மூலம் குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்களிக்கக் கூறுவது எப்போ நிறுத்தப்படும்?


Barakat Ali
அக் 16, 2024 21:44

நம்பிக்கையோடு வாக்களித்த மக்களுக்கு மீண்டும் திணிக்கப்பட்ட தேர்தல்


nv
அக் 16, 2024 21:16

வயநாடு மக்கள் எதற்காக யாரோ ஒரு வெளி நபரை அவர்கள் தொகுதியில் தேர்ந்து எடுக்க வேண்டும்? சிந்திக்க வேண்டிய நேரம்!


nagendhiran
அக் 16, 2024 20:17

பெண் அதிகாரிதான் பாஜக வேட்பாளர்? போட்டி கடுமையாகதான் இருக்கும்? அனால் அங்கு மதம்சார்ந்த வாக்குகள்தான் வெற்றியை தீர்மானிக்கும்?


vadivelu
அக் 16, 2024 20:02

பா.ஜ.க., வயநாடு தொகுதியில் போட்டி இட கூடாது, கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கே வாக்களித்து விட வேண்டும். காங்கிரசின் வாக்குகளை கணிசமாக குறைத்து விட வேண்டும்.


N Sasikumar Yadhav
அக் 16, 2024 19:44

இடைத்தேர்தலுக்கான செலவு தொகையை, கொழுத்துப்போய் ராஜினாமா செய்த கட்சியிடம் வசூலிக்க வேண்டும்.பொதுமக்களின் வரிப்பணத்தை செலவு செய்ய கூடாது. முதலில் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.


புதிய வீடியோ