உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாகிஸ்தானுடன் பேச்சு நடத்தணுமா; ஒரே ஒரு நிபந்தனை இருக்கிறது என்கிறார் ராஜ்நாத்

பாகிஸ்தானுடன் பேச்சு நடத்தணுமா; ஒரே ஒரு நிபந்தனை இருக்கிறது என்கிறார் ராஜ்நாத்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காஷ்மீர்: தீவிரவாதத்தை தொடர்ந்து ஊக்குவித்து வரும் பாகிஸ்தானுடன் எப்படி நல்லுறவை கடைபிடிக்க முடியும் என்று ஜம்மு காஷ்மீர் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

தேர்தல்

யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரில், மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த 18ம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, வரும் 25ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும், அக்., 1ல் மூன்றாம் கட்ட தேர்தலும் நடக்கிறது. அக்., 8ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் நடக்கும் முதல் தேர்தல் என்பதால், இந்த தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த தேர்தலில், பா.ஜ., மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி தனியாகவும், காங்., - தேசிய மாநாட்டு கட்சி கூட்டணியாகவும் போட்டியிடுவதால், மும்முனை போட்டி நிலவுகிறது.

பிரசாரம்

2வது கட்ட தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் பிரதமர் மோடி ஓட்டு சேகரித்து சென்ற நிலையில், இன்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

நிம்மதியான வாழ்க்கை

பூச் பகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வாழும் மக்களின் நிலை பரிதாபமாக உள்ளது. அதே சமயம், இந்தியாவின் சீரிய நடவடிக்கையால், ஜம்மு காஷ்மீர் புதிய உருமாற்றத்தை பெற்றிருப்பது அவர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. நாம் காங்கிரஸைப் போல, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களை ஒதுக்கி வைக்க மாட்டோம். அவர்கள் விரும்பினால், அந்த மக்களை நம்முடன் இணைத்து வாழத் தயார். இதன்மூலம், அவர்கள் கண்ணியமான வாழ்க்கையை வாழ முடியும்.

பேச்சுவார்த்தைக்கு தயார்

ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஒற்றுமையாகவும், அமைதியாகவும் வாழ வேண்டும் என்பதே எங்களின் கொள்கையாகும். பாகிஸ்தான் உள்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் நல்லுறவையே விரும்புறோம். ஆனால், பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் போது, நல்லுறவை எப்படி எதிர்பார்க்க முடியும். இந்திய மண்ணில் தீவிரவாதத்தை புகுத்த மாட்டோம் என உறுதி கொடுத்தால், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார், எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ramesh Sargam
செப் 22, 2024 22:02

இந்த ஜம்மு காஷ்மீர் பிரச்சினை ஒருவழியாக முடிவுக்கு வரும். வரவேண்டும். இங்கு வேறு ஒரு கருத்தை பதிவிட விரும்புகிறேன். நான் போன ஒரு வாரமாக Hyderabad - Secunderabad பகுதிகளுக்கு சென்றுவந்தேன். எங்கு நோக்கினும் இஸ்லாமிய மதத்தினர். வொவொரு சந்துகளில் மசூதிகள். நான் ஏதோ பாகிஸ்தான் நாட்டில் இருப்பதுபோல இருந்தது. போதாக்குறைக்கு போனவாரம் ஒரு முஸ்லீம் மத பண்டிகை வேறு. அது மிலாடிநபி என்று நினைக்கிறேன். பல இடங்களில் தெருவில் பந்தலிட்டு, loudspeaker மூலம் உரக்க முஸ்லீம் மத பாடல்களை பாடவிட்டு, வீதியில் செல்வோருக்கெல்லாம் ஏதோ உண்ணக்கொடுத்தார்கள். இருசக்கர வாகனங்களில், ஆட்டோக்களில் சிறுவர்கள் பாக்கிஸ்தான் நாட்டு தேசிய கொடிபோல ஒரு கொடியை சிறு மாறுதல் செய்து கட்டிக்கொண்டு ஊர்முழுக்க திரிந்தவண்ணம் இருந்தனர். இந்த நிலை இப்படியே தொடர்ந்தால், நான் கூறிய அந்த இரு நகரங்களும், முந்தைய ஜம்மு காஷ்மீர் போல ஆகிவிடும் போல தெரிகிறது. ஜம்மு காஷ்மீரை மீட்டெடுக்கும் மத்திய அரசு, இந்த இரு நகரங்களை முந்தைய ஜம்மு காஷ்மீர் நிலைக்கு செல்லாமல் இப்பொழுதே அவர்களிடமிருந்து மீட்டெடுக்கவேண்டும்.


Sathyanarayanan Sathyasekaren
செப் 23, 2024 03:23

திருச்சி முக்கொம்பு சுற்றுலாத்தலத்திற்கு வந்து பாருங்கள் எங்கெங்கு காணினும் புர்க்கத்தான் ஒன்ட்ரிண்டு ஹிந்து மக்கள் தென்படுவார்கள் 5 பொண்டாட்டி, 20 பிள்ளைகள் என்று மக்கள்தொகையை பெருக்கிக்கொண்டு செல்கிறார்கள். இந்துக்களோ, இரு குழந்தையோடு நிறுத்திக்கொண்டு, மக்கள்தொகை ஜிஹாத்துக்கு துணை போகிறார்கள்.


சிவம்
செப் 22, 2024 20:14

இந்திய மண்ணில் மட்டும் அல்ல. உங்கள் நாட்டின் ஒரு பகுதியாக இருக்கும் பலுசிஸ்தானில் கூட தீவிரவாதம் அடியோடு ஒழிக்கப் பட வேண்டும். சுருக்கமா சொன்னால் உங்கள் அரசு, ராணுவம், உளவுத்துறை இவை மூன்றும் மூன்றாம் நாட்டின் கண்காணிப்பில் இருக்கும். ஐக்கிய அரபு நாடுகளில் நடக்கும் இஸ்லாமிய ஆட்சி போல் எப்போது பாகிஸ்தான் மாறுகிறதோ அப்போது பேசலாம். இந்த யுகத்தில் சாத்தியமில்லை


subramanian
செப் 22, 2024 19:14

பாகிஸ்தான், சீனா , பங்களாதேஷ் , இந்திரா காங்கிரஸ், ராகுல், பிரியங்கா, சோனியா, திமுக, இந்திய முஸ்லிம் மக்கள், கிறிஸ்தவ மக்கள் இவர்களை எந்த நொடியும் நம்ப வேண்டாம்.


SUBBU,MADURAI
செப் 22, 2024 22:06

இந்திய கம்யூனிஸ்ட்டுகளை விட்டுட்டீங்க?


Sathyanarayanan Sathyasekaren
செப் 23, 2024 03:27

சுப்ரமணியன் இந்திய கம்யூனிஸ்ட்டில் இருப்பவர்கள் அதிக அளவில் மதம்மாறிய கிருத்துவர்கள் தான், பழைய இந்து பெயரிலேயே மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். சமீபத்தில் இறந்த கம்யூனிஸ்ட் தலைவரின் பெயர் சீதாராம் எச்சுரி. இவரை கிருத்துவமுறைப்படி அடக்கம் செய்ததால் தெரியவந்தது. எப்பேர்ப்பட்ட பொய்? வெட்கக்கேடு. இப்படி ஏமாற்றுபவர்களை ஹிந்துக்கள் கேள்விகேட்டகமல் நமக்கென்ன என்று கடந்து போவது ஏன்? இன்னொமொரு உதாரணம், திடீர் அரசியல் வியாதி ஜோசப் விஜய்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை