மேலும் செய்திகள்
விக்சித் பாரத் ஜி ராம் ஜி மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்
35 minutes ago
பாட்னா: ‛‛ பீஹார் முதல்வர் நிதீஷ்குமார் எங்களுக்கு தேவையில்லை. அவர் நெருக்கடி காரணமாக அணி மாறி உள்ளார் '' என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார். பீஹார் முதல்வர் நிதீஷ்குமார், காங்கிரஸ் கூட்டணியை முறித்துக் கொண்டு பதவியை ராஜினாமா செய்தார். பிறகு, பா.ஜ., ஆதரவுடன் மீண்டும் முதல்வராக பதவியேற்றார்.பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையின் ஒரு பகுதியாக பீஹார் வந்துள்ள ராகுல், புரூனியா என்ற இடத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசும் போது நிதீஷ் அணி மாறியது குறித்து முதல்முறையாக கருத்து தெரிவித்தார்.அப்போது ராகுல் கூறியதாவது: நிதீஷ்குமார் அழுத்தம் காரணமாக பல்டி அடித்து கூட்டணி மாறி உள்ளார். ‛ மகாகட்பந்தன் ' கூட்டணி, மாநிலத்தில் சமூக நீதிக்காக போராடும். இந்த காரணத்திற்காக நிதீஷ்குமார் எங்களுக்கு தேவையில்லை. இனி அவர் எங்களுக்கு தேவையில்லை. இவ்வாறு ராகுல் பேசினார்.
35 minutes ago