உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஹல்காம் தாக்குதலில் கதறிய சுற்றுலா பயணிகள்: நம்பிக்கை ஊட்டிய ராணுவ வீரரின் வைரல் வீடியோ

பஹல்காம் தாக்குதலில் கதறிய சுற்றுலா பயணிகள்: நம்பிக்கை ஊட்டிய ராணுவ வீரரின் வைரல் வீடியோ

ஸ்ரீநகர்; பயப்படாதீர்கள், நாங்கள் இந்திய ராணுவத்தினர் தான் என்று பஹல்காம் தாக்குதலால் நிலைகுலைந்த சுற்றுலா பயணிகளிடம் ராணுவ வீரர் ஒருவர் பேசி நம்பிக்கை ஊட்டும் வீடியோ வைரலாகி உள்ளது.காஷ்மீரில் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளின் இந்த செயலுக்கு உலகம் எங்கிலும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், சம்பவத்தின் போது அங்கு பீதியில் இருந்த சுற்றுலா பயணிகளை இந்திய ராணுவத்தினர் பயப்பட வேண்டாம், நாங்கள் இந்திய ராணுவத்தினர் தாம் என்று பேசும் வீடியோ வெளியாகி இருக்கிறது.அந்த வீடியோவில், பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட போது என்ன நடக்கிறது என்றே தெரியாமல் சுற்றுலா பயணிகள் அச்சத்தின் உச்சத்தில் இருந்துள்ளனர். அதிர்ச்சியில் கதறி அழுத அவர்களை அங்கே வந்த இந்திய ராணுவ வீரர் ஆசுவாசப்படுத்தி இருக்கிறார்.அவரின் உடையை பார்த்து அங்கே இருந்த பெண் சுற்றுலா பயணி ஒருவர் பயந்து கதறி இருக்கிறார். என் குழந்தையை ஒன்றும் செய்துவிடாதீர்கள் என்று கண்ணீர் விட, அவர்களை ராணுவ வீரர் அமைதிப்படுத்தி உள்ளார்.நாங்கள் ராணுவத்தினர். உங்களை காப்பாற்றவே வந்திருக்கிறோம் என்று கூறிய பின்னரே, வந்திருப்பது இந்திய ராணுவத்தினர் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். அங்கே இருந்த ஒரு சிறுவன், தமது அப்பாவை கதறியபடியே அழைக்க, அவரையும் ராணுவ வீரர் ஆசுவாசப்படுத்தி தைரியமூட்டுகிறார். பின்னர் அனைவருக்கும் குடிக்க தண்ணீர் வழங்கியும், எதற்காக வந்திருக்கிறோம் என்பதையும் விளக்கி கூறுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு பகிரப்பட்டும் வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Mr Krish Tamilnadu
ஏப் 23, 2025 20:49

காஷ்மீரில் அமைதி திரும்புகிறது என கூறி, கபடி ஆட்டமாக மாறி விட்டது. இறங்கும் வரை அமைதியாக இருந்து விட்டு, இறங்கி பிறகு அடித்து விட்டார்கள். அந்த குழுக்கள் விலகி விட்டன. இந்த குழுக்கள் விலகி விட்டன. என நம்பிக்கை தந்து, இப்படி ஆகி விட்டது. எல்லா நாட்டில் நடப்பது தான். அமெரிக்கவே இரட்டை கோபுர தாக்குதலை எதிர் கொண்டது. மனிதநேய உணர்ச்சி முகத்திலும், தீவிரவாத கண்காணிப்பு மூளையிலும் என்றுமே இருக்க வேண்டும். கொரோனா வை ஒன்றுபட்டு எதிர் கொண்டது போல், அரசுடன் இந்த நேரத்திலும் இணைந்து நிற்போம்.


yts
ஏப் 23, 2025 19:54

எதற்கெடுத்தாலும் பொங்கி கொண்டிருந்த நடிகர் ஜோசப் விஜய் எங்கே ?


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 23, 2025 22:18

அடுத்த படத்தில் இந்த கதையை எப்படி பயன்படுத்தலாம் என்று கதை இலாகாவுடன் ஆலோசனை செய்து கொண்டு இருப்பார். திமுக ஜடி விங்க் இவருக்கான வசனத்தை இன்னும் எழுதவில்லை. அவர்கள் எழுதி கொடுத்தவுடன் சீறிக்கொண்டு வருவார் பாருங்கள். கொசுறு செய்தி திமுக ஜடி விங்க் கோயமுத்தூர் ஜல்லிக்கட்டில் பிசியாக உள்ளது. எல் அண்ட் டி பைபாஸ் சாலை செட்டிபாளையம் அதாவது ராகுல் ஸ்டாலின் மீட்டிங் நடந்த இடத்திற்கு அருகில் பரபரப்பாக உள்ளது. திமுகவின் காளைகள் எப்போது வேண்டுமானாலும் வாடி வாசல் வழியாக வெளியே வரலாம்.


Venkateswaran Rajaram
ஏப் 23, 2025 19:47

அங்கே ராணுவம் நாட்டை பாதுகாக்கிறது ...இங்கே ஊழல் பெருச்சாளிகளான அரசியல்வாதிகள் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ...இந்த பயங்கரவாதிகள் ஊழல் பெருச்சாளிகளை டார்கெட் செய்து நாட்டை சுத்தப்படுத்தினால் பாராட்டலாம் ..சாதாரண மக்கள் பாவம் அவர்கள் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிட்டது ...ஊழல் பெருச்சாளிகளான அரசியல்வாதிகள் பெயருக்கு இரங்கல் தெரிவித்துவிட்டு மீண்டும் நாட்டை சூறையாடிக்கொண்டே இருப்பார்கள்...


Palanisamy T
ஏப் 23, 2025 19:31

26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். சுற்றுப் பயணிகளின் நம்பிக்கையை பாதுகாப்பை இந்த பயங்கரவாதிகளின் செயல்கள் வெகுவாக பாதித்துள்ளது இதனால் இந்தியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகையில் கொஞ்சம் பாதிப்பு ஏற்படலாம். உள்ளூர்வாசிகளின் ஆதரவு உதவிகள் இல்லாமல் இப்படி யொரு பயங்கரவாத தாக்குதல்கள் நடந்திருக்க வாய்ப்பில்லை. முளையிலேயே இவர்களை கிள்ளியெறிய வேண்டும் . கடுமையாக போக்கை அரசு கடைப்பிடிக்கவேண்டும்.


தாமரை மலர்கிறது
ஏப் 23, 2025 18:56

காஷ்மீரை காசாவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.


B MAADHAVAN
ஏப் 23, 2025 18:55

அடர்ந்த பனிப் பிரதேசத்தில், மிக்க சிரமத்துடன், நமக்காக நம் நாட்டை காக்கும் இராணுவ வீரர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். அவர்களும், அவர்களது குடும்பத்தினரும் எல்லா நலன்களும், வளங்களும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ அன்பு பிரார்த்தனைகள்.


spr
ஏப் 23, 2025 18:46

பாராட்டுவோம் நல்ல வேளை இறைவனுக்கு நன்றி இந்த நாட்டின் ராணுவத்தில் மதம் இனம் மொழியென்ற பிரிவினை அரசியல் இல்லை வாழ்க அவர்கள் தொண்டு இறைவன் அவர்களை பாதுகாக்கட்டும்


முக்கிய வீடியோ