உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கணக்கு சரிபார்க்கச் சென்றோம் கப் அடிக்கும் அறை கொடுத்தார் மன்மோகன்; தணிக்கை அதிகாரி பளிச்

கணக்கு சரிபார்க்கச் சென்றோம் கப் அடிக்கும் அறை கொடுத்தார் மன்மோகன்; தணிக்கை அதிகாரி பளிச்

புதுடில்லி: நிலக் கரி ஊழலை வெளிகொண்டு வந்ததன் காரணமாக, மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சி காலத் தில், தலைமை கணக்கு தணிக்கை அதிகாரிகள் பல்வேறு சோதனைகளை அனுபவித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில், நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டதில், 1.86 லட்சம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. சி.ஏ.ஜி., எனப்படும் மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் அம்பலப்படுத்திய இந்த விவகாரம், பார்லி.,யில் அப்போது பெரும் புயலை கிளப்பியது. 'அன்போல்டட்' இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் சி.ஏ.ஜி., இயக்குநர் ஜெனரலாக இருந்த சேஷ் குமார் எழுதியுள்ள, 'அன்போல்டட்' என்ற புத்தகம் தற்போது வெளியாகியுள்ளது. அதி ல், ஊழலை வெளிக்கொண்டு வருவதற்கு முன்பாக, பல சோதனைகளை எதிர்கொண்டதாக சேஷ் குமார் விளக்கியுள்ளார். அரசியல் தாக்குதல்கள், அதிகார தடைகள், ஊடகங்களின் தலையீடுகள் என பல சோதனைகள் வந்தபோதும், தங்களது குழு உறுதியுடன் நின்றதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அந்த புத்தகத்தில் இடம் பெற்ற சில தகவல்கள்: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் வெளிப்படையாக இல்லாததால், உச்ச நீதிமன்றம் அனைத்து ஒதுக்கீடுகளையும் ரத்து செய்தது. இதைத் தொடர்ந்து, ஊழலை கண்டுபிடிக்க நாங்கள் களமிறங்கியபோது , எங்களுக்கு வரவேற்பு வேறு விதமாக இருந்தது. நிலக்கரி அமைச்சகம் மத்திய அரசின் ஓர் அங்கம். இருந்தாலும், அந்த அமைச்சகத்தில் பணியாற்றியவர்கள், ஆவணங்களை மறைக்க ஆரம்பித்தனர் . நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் தொடர்பாக, 200க்கும் மேற்பட்ட ஆய்வு கமிட்டி கூட்டங்கள் நடந்து இருக்கின்றன. அதன் தகவல்களை கேட்டபோது, வெறும் இரண்டு, மூன்று கூட்டங்களின் தகவல்கள் மட்டுமே எங்களுக்கு வழங்கினர். நாங்கள் கேட்ட கோப்புகளை கூட அவ்வளவு எளிதில் தரவில்லை. வேண்டுமென்றே கால தாமதம் செய்தனர். கணக்கு - வழக்குகளை சரி பார்க்க நிலக்கரி அமைச்சகத்தில் எங்களுக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டது. துர்நாற்றம் வீசும் கழிப்பறைக்கு அருகிலேயே அந்த அறை இருந்தது. அதாவது, இந்த விசாரணையில் இருந்து நாங்களாகவே ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், அந்த அறை எங்களுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனாலும், இந்த தடைகளை எல்லாம் பொருட்படுத்தாமல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் குறித்த தகவல்களை வெளிக்கொண்டு வந்தோம். 1.86 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டது என்பது, ஏதோ பொதுவான கணக்கு அல்ல. விரிவாக ஆராயப்பட்டு கணக்குகளை சரிபார்த்ததில் கிடைத்த தொகை அது. முக்கிய ஆதாரம் தனியாருக்கு ஒதுக்கப்பட் ட, 75 நிலக்கரி சுரங்கங்களில், 57 சுரங்கங்களின் கணக்கில் தான் இந்த அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டது என்பது தெரிந்தது. நிலக்கரி அமைச்சகத்தின் கொள்கை தொ டர்பான ஒரு கோப்பு மூலமாகவே ஊழல் நடந்ததற்கான முக்கிய ஆதாரம் சிக்கியது. உண் மையான வெற்றி என்பது எங்கள் அறிக்கையில் அச்சான எண்களில் அல்ல, பொது மக்களின் நிதியை பாதுகாக்கும் கடமை, அரசியலுக்கு உட்பட்டது அல்ல; ஜனநாயகத்திற்கு உட்பட்டது என்பதை மீ ண்டும் உறுதிப்படுத்தியதில் இருந்தது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

அப்பாவி
அக் 29, 2025 15:03

இன்னிக்கி எழுதப்படும் புத்தகம் 20 வருஷம் கழிச்சு வெளிவரும். காத்திருப்போம்.


கண்ணன்
அக் 29, 2025 12:55

இதில் மன்மோஹன் ஸிங்கிற்கும் நல்ல பங்கு உண்டு


V Venkatachalam, Chennai-87
அக் 29, 2025 12:27

தன் புத்தகத்தில் தெரிவித்துள்ள தகவல்கள் தான் இங்கே பிரசுரம் ஆகி இருக்கிறது. அவர் மீட்டிங் போட்டு இதை தெரிவிக்கவில்லை.‌இங்கு சில அவர் இப்போது ஏன் சொல்கிறார் ன்னு கருத்து போடுதுகள் புத்தகத்தில் உள்ளதை புடிச்சா படியுங்கள். இல்லாட்டி போய்கிட்டே இருங்க. திருட்டு திராவிட விசுவாசத்தை இங்கே காண்பிக்க வேண்டாமே.


R. SUKUMAR CHEZHIAN
அக் 29, 2025 12:21

காங்கிரஸ் மற்றும் திமுகவால் நம் தேசதிற்கு நஷ்டம் இழப்புகள் அதிகம் ஆனாலும் இந்த கூட்டத்திற்கு ஓட்டு போடும் சுயநல மக்கள் இருக்கதான் செய்கிறார்கள். திருந்த வேண்டியது ஓட்டு போடும் போது மக்கள் தான்.


Venugopal S
அக் 29, 2025 11:52

வாழ்நாள் முழுவதும் உழைத்து சம்பாதிக்க முடியாத பணத்தை ஒரே ஒரு பொய் சொல்லி ஒரே பேமெண்ட்டில் லம்ப்பாக வாங்கி விட்டார் போல் உள்ளது!


ஆரூர் ரங்
அக் 29, 2025 11:36

ஊழல் நடந்த காலத்தில் நிலக்கரித்துறை அமைச்சர் யாருமில்லை. பிரதமர் மன்மோகன்சிங்கின் நேரடிப் பொறுப்பில்தான் அந்தத் துறை இருந்தது. எக்காரணத்தினாலோ அவரை கோர்ட் விசாரிக்கவேயில்லை. நாட்டின் டாப் டென் பணக்காரர்களில் ஆறு பேர் சம்பந்தப்பட்டிருந்தனர். வழக்கில் பல மூத்த அதிகாரிகள் சிறைத்தண்டனை பெற்றாலும் ஒரு அரசியல்வாதிகூட தண்டிக்கப்படவில்லை. முக்கியப் பயனாளி மேலிட மருமகன் ராபர்?


M S RAGHUNATHAN
அக் 29, 2025 11:27

மன்மோகன் அவர்கள் ஒரு பொம்மை பிரதமராக இருந்தார். இன்னமும் இந்த போலி காந்தி குடும்பம் நாட்டை சீரழிக்க துடிக்கிறது.


Rathna
அக் 29, 2025 11:27

ஊழலை பற்றி காலம் கடந்து பேசுகிறீர்களே என்பது பலரது வாதம். அரசு ஊழியருக்கு குடும்பம் உள்ளது. பெண் குழந்தைகள், மனைவி உள்ளனர். நேர்மையான அரசு அதிகாரிகள் குடும்பத்தை கடத்தி செல்வது, போன் மூலம் மிரட்டல் விடுவது, குழந்தைகள் படிக்கும் கல்லூரிகளுக்கு முன்னால் ரௌடிகளை நிறுத்தி மிரட்டுவது, வீடு வாசலில், வீட்டிற்கு உள்ளே அசிங்கத்தை கொட்டுவது, சாக்கடையை அடைப்பது, தண்ணீர் கன்னெக்ஷன் கட் செய்வது, வீட்டில் உள்ள வயதானவர்களை மிரட்டுவது போன்றவை பல மாநிலங்களில், டெல்லியில் சர்வ சாதாரணம். இதெல்லாம் தெரியாமல் எதாவது எழுத கூடாது.


Balasri Bavithra
அக் 29, 2025 11:26

காங்கிரஸ் ஊழலால் நாடு அடைந்த இழப்பு அதிகம் ..அதுவும் மன்மோகன் காலத்தில் கொள்ளை அடிக்க பட்டது .அதை பற்றி பேசினால் அது பழைய கதை ..ஆனால் கோட்ஸேய் பற்றி இன்னும் பேசுவார்கள் .


Abdul Rahim
அக் 29, 2025 11:01

உங்க புளுகு 2g விவகாரத்திலேயே வெளிப்பட்டு போச்சே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை