உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருப்பதி லட்டில் மாட்டுக்கொழுப்பு எப்படி; திடுக்கிடும் தகவல் தெரிவித்த கோவில் அதிகாரி

திருப்பதி லட்டில் மாட்டுக்கொழுப்பு எப்படி; திடுக்கிடும் தகவல் தெரிவித்த கோவில் அதிகாரி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பதி: 'திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில், நெய் கலப்படத்தை கண்டறிய சொந்த ஆய்வகம் இல்லை என்ற குறைபாட்டை சப்ளை செய்தவர்கள் பயன்படுத்திக்கொண்டனர்' என திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி சியாமளா ராவ் தெரிவித்தார்.ஆந்திராவில் ஏழுமலையான் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் திருப்பதி லட்டுவில், விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டிருந்ததை, திருமலை திருப்பதி தேவஸ்தானம் உறுதி செய்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=772fgqyv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து தேவஸ்தான செயல் அதிகாரி சியாமளா ராவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: லட்டு பிரசாதத்தின் தரம் மற்றும் சுவை உறுதி செய்யப்பட வேண்டும். புனிதத்தன்மையை மீட்டெடுக்க வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெளிவாக கூறியுள்ளார். உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளை உள்ளடக்கியதால், சுத்தமான பசு நெய் பயன்படுத்துவதை உறுதி செய்வோம்.

கவனம் செலுத்துகிறோம்!

புதிய திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் பொறுப்பேற்றதிலிருந்து லட்டுகளின் தரம் மற்றும் சுவையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தத் துவங்கி உள்ளோம். கடந்த சில வருடங்களில் லட்டுகளின் தரம் குறைந்ததாக பக்தர்களிடம் கருத்துகளைப் கேட்ட பிறகும், லட்டு தயாரிக்கும் தொழிலாளர்களிடம் கலந்துரையாடிய பிறகும் தெரியவந்தது.முதன்முறையாக கலப்படப் பரிசோதனைக்காக வெளியில் உள்ள ஆய்வகத்திற்கு நெய் பொருட்களை அனுப்பினோம். 5 நெய் சப்ளையர்கள் இருந்தனர். நல்ல தரமான நெய்யை உறுதி செய்ய புதிய நிர்வாகத்தால் அனைவருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆய்வகம் இல்லை

இல்லையெனில் மாதிரிகள் கலப்படத்திற்கான சோதனைக்காக வெளிப்புற ஆய்வகங்களுக்கு அனுப்பப்படும் என கூறி இருந்தோம். எச்சரித்த பிறகும், ஏ.ஆர்.புட்ஸ் நிறுவனம் அனுப்பிய 4 நெய் டேங்கர்கள் தரமற்றவை என முதல்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது. பன்றிக்கொழுப்பு மற்றும் மாட்டிறைச்சி கொழுப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.தரமில்லாததற்குக் காரணம் திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்திற்கு சொந்தமாக ஆய்வகம் இல்லை. இந்த குறைபாடுகளை சப்ளையர்கள் பயன்படுத்திக் கொண்டனர். NDDB நெய் கலப்பட பரிசோதனை கருவிகளை நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளது. இதற்கு நிரந்தர தீர்வாக வரும் டிசம்பர் அல்லது ஜனவரிக்குள் ரூ.75 லட்சம் மதிப்பிலான புதிய ஆய்வுக்கூடம் நிறுவப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 58 )

sundarsvpr
செப் 22, 2024 16:42

திருக்கோயில்களில் கொடுக்கும் பிரசாதம் மட்டும் புனிதமானவை என்பது நம்பிக்கை. நம்பிக்கை இழந்துவிட்டோம். திருக்கோயில் பிரசாதம் தேவையா? தேவையெனில் வீட்டில் தேவையான குறைந்த அளவு பதார்த்தம் ஒவ்வொருவரும் தயார் செய்து கொடிக்கம்பத்தின்கீழ் சுவாமிக்கு நைவேத்தியம் செய்துவிட்டு திருக்கோயில்களுக்கு வெளியில் சாப்பிடலாம். ஸ்வாமிக்கு காட்டிவிட்டு சாப்பிடுவது நம் ஆராதனம். ஆண்டவன் ஏற்றுக்கொள்வான். கோயில் மட்டுமல்ல அரசு அலுவலங்களில்பொருள்கள் குறைந்த டெண்டர் முறையில் மாற்றங்கள் தேவையா என்பதனை மீள பரிசீலிப்பது நல்லது.


sridhar
செப் 21, 2024 18:56

தேவஸ்தான பெண் அதிகாரி ஒருத்தி ttd காரில் கீழ் திருப்பதியில் உள்ள சர்ச்சுக்கு சென்றது படம் பிடிக்கப்பட்டது . இது தான் ttd நிர்வாகிகள் லட்சணம் . இன்றும் அங்கே ஹிந்து விரோதிகள் பெரிய பதவிகளில் இருக்கிறார்கள் .


அப்பாவி
செப் 21, 2024 17:51

உங்களால தேவையான அளவு நெய் தயாரிக்க முடியலேன்னா ஏன் வெளியிலிருந்து வாங்குறீங்க? ராமானுஜர் கட்டிய புனிதஸ்தல கோவிலை நீங்க வியாபார ஸ்தலமாக்கி ரொம்ப வருஷமாச்சு. இதுல முந்தைய அரசை குறை சொல்லுறீங்களா? சிமெண்ட் ஃபேக்டரி மாதிரி லட்டு ஃபேக்டரியே நடத்துறீங்களே... அந்தக் கோவிலுக்கு சாந்நித்தியம் போயி ரொம்ப நாளாச்சுன்னு கேள்விப்பட்டேன். உண்மையாயிடுச்சு.


venugopal s
செப் 21, 2024 17:10

இப்போது செய்த அந்த நெய் தரப் பரிசோதனையை நெய் சப்ளை செய்த நந்தினி பிராண்டை மாற்றி புதிய கம்பெனிக்கு கொடுத்த போதே செய்து இருக்கலாமே! இந்தப் பிரச்சினையே வந்திருக்காதே!


spr
செப் 21, 2024 16:46

"தரமில்லாததற்குக் காரணம் திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்திற்கு சொந்தமாக ஆய்வகம் இல்லை." உண்மை இதுவல்ல நேர்மையான கடவுள் பக்தியுள்ளவர்கள் நிர்வாகப் பொறுப்பில் இல்லை என்பதுதான் உண்மை. இந்தியாவில் பல கோயில்களில் உணவு பரிமாறப்படுகிறது பிரசாதம் தரப்படுகிறது மேலும் திருப்பதி தேவஸ்தானம் இன்று நேற்று லட்டு செய்ததில்லை பன்நெடுங்காலமாகச் செய்து கொண்டுதானிருந்தது. எனவே "நிர்வாகத்திற்கு சொந்தமாக ஆய்வகம் இல்லை" என்பது ஒரு பிரச்சினையை இல்லை நிர்வாகத்தில் தரமான மனிதர்கள் இல்லையென்பதுதான் பிரச்சினை தீர விசாரித்து இப்படி உண்ணும் பிரசாதத்தில் உணவில் கலப்படம் செய்யக் காரணமானவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு மரண தண்டனை தர வேண்டும்


வல்லவன்
செப் 21, 2024 15:44

அப்போ ஹார்மோன் ஊசி போட்டாதான் மாடு பால் கறக்குது அந்த நெய் கெடுதல் இல்லையா


Tetra
செப் 21, 2024 14:54

மொதல்ல அந்த ஏ ஆர் புட்ஸ் முதலாளி பேர சொல்லுங்க. எந்த ஹிந்துவும் கோவிலுக்கு அதுவும் திருப்பதி கோவிலுக்கு இப்படி செய்ய மாட்டான்.


jaya
செப் 23, 2024 10:49

ரெனி என்பவர் அந்த நிறுவனத்திற்காக பேசுகிறார் , அதிலிருந்தே புரிந்து கொள்ளலாம் .


கல்யாணராமன் சு.
செப் 21, 2024 14:26

அவரே வேணாம் .... அதுக்கு பதிலாதான் திருமாவளவன் MP வந்துட்டாரே


சாண்டில்யன்
செப் 21, 2024 13:23

WHAT HAPPENS IN SEBI? WHO ARE RESPONSIBLE?


Tetra
செப் 21, 2024 14:55

செபிக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?


Venkates.P
செப் 22, 2024 15:25

கோபாலபுரத்தில் என்ன நடக்குது & அறிவு இல்லாத ஆலயத்தில் என்ன நடக்குது. அதே முதலில் கேளு


Kumar Kumzi
செப் 21, 2024 11:50

இது திருட்டு திராவிஷ மாடலின் சூழ்ச்சி இந்த பாதகத்தை செய்த கொடூரர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்


mugundh
செப் 21, 2024 13:30

dravida model pathi en tirupati arasiyaluku pesringa. ennane teryama type pannadinga.


ram
செப் 21, 2024 13:53

ஏழுமலையான் பார்த்து கொள்வார் எப்படி ஒரு அரசியல் வாதி பெருமாளுக்கு தீங்கு செய்யும் நோக்கத்தில் செயல்பட அவருடைய மலையிலே உடல் கிடைக்காமல் இறந்து போனார், அவர் பேரை சொல்ல விருப்பமில்லை. இதுபோல மாட்டு கொழுப்பை சப்ளை செய்த அந்த நிறுவனத்திரின் குடும்பங்கள் இதற்கு உடந்தையாக இருந்த அனைவரும் நன்றாக இருக்க மாட்டார்கள். ஏதோ ஒரு விதத்தில் அவர்களுக்கு சங்கடம் வரும் இது நிச்சியம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை