உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாநிலத்தை பிரிக்க விடமாட்டோம்: மேற்குவங்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

மாநிலத்தை பிரிக்க விடமாட்டோம்: மேற்குவங்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: மேற்குவங்க மாநிலம் இரண்டாக பிரிப்புக்கு எதிராக இன்று (ஆக.,5) சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேற்கு வங்க மாநிலத்தில் சில வட மாவட்டங்களை ஒருங்கிணைத்து தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் சுகந்தா மஜூம்தார் பிரதமர் மோடியை சமீபத்தில் சந்தித்து வலியுறுத்தினார். இந்த சந்திப்புக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா கடும் கண்டனம் தெரிவித்தார்.கடந்த ஜூலை 30ம் தேதி சட்டசபையில் பேசிய முதல்வர் மம்தா மேற்குவங்க மாநிலத்தை இரண்டாக பிரிப்பதை என்ன விலை கொடுத்தாவது தடுப்பேன் என்றார்.டார்ஜிலிங்கை உள்ளடக்கிய மேற்கு வங்க மாநிலத்தின் வட மாவட்டங்களை ஒருங்கிணைத்து ஒரு தனி மாநிலமாக உருவாக்க வேண்டும் என பா.ஜ., தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், இன்று மேற்குவங்க சட்டசபை மழைக்கால கூட்டத்தொடரில், மாநிலத்தை இரண்டாக பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டு தீர்மானம் நிறைவேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.இது குறித்து முதல்வர் மம்தா பேசியது, இந்திய சுதந்திரத்திற்காக போராடியது மேற்கு வங்கம். நம் மாநிலத்தின் கலாச்சாரம், பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டிய நேரம் இது. மாநில வளர்ச்சிக்காக நாம் அனைவரும் ஒன்றிணைவோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

konanki
ஆக 06, 2024 13:01

தமிழகத்தின் வளர்ச்சியை முன்னிட்டு கோவை திருப்பூர் நீலகிரி பொள்ளாச்சி உள்ளடக்கிய கொங்கு நாடு மற்றும் மதுரை விருதுநகர் தூத்துக்குடி கன்னியாகுமரி உள்ளிட்ட பாண்டிய நாடு எனவும் புதிய மாநிலங்கள் ஏற்படுத்த வேண்டும். பொருளாதார கலாச்சார கல்வி சுகாதாரம் சமூக நலன் எல்லா துறைகளிலும் மும்மடங்கு வளர்ச்சி காணமுடியும் மக்களின் வாழ்க்கை தரம் உயரும்


Ravi Kulasekaran
ஆக 06, 2024 09:22

மாநிலங்களை நிர்வாக ரீதியாக பிரிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது மாநில அரசின் அனுமதி தேவை இல்லை அரசியலமைப்பு சட்டம் மத்திய அரசுக்கு கொடுத்த உரிமை மேற்கு வங்க அரசுக்கும் தமிழ் நாட்டுக்கும் பொறுத்தும்


Sarojsubramani Subramaniyam k
ஆக 06, 2024 13:50

ஏ ய் யா நீ யே ன் ன நீ தி ப தி யா


mathes prabhu
ஆக 06, 2024 18:13

கரெக்ட்


BALAJI ELANGOVAN
ஆக 06, 2024 06:00

மிகவும் நன்று , இதனை உத்திரப்பிரதேஷில் இருந்து ஆரம்பிக்கலாம் .


konanki
ஆக 06, 2024 12:56

உத்தரபிரதேசத்தில் இருந்து பிரிந்து தான் உத்ராகண்ட் மாநிலம் உருவானது தெரியாதா?? கும்மிடிப்பூண்டி தாண்டிய இந்தியா தெரியாது திராவிடர்களுக்கு


rama adhavan
ஆக 06, 2024 00:23

மாநிலத்தை பிரிப்பது ஒன்று தான் மம்தாவின் மமதையை அடக்க சிறந்த வழி. மேலும் கூர்கா லேண்ட் என தனி மாநிலம் வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாளாக உள்ளது


சோலை பார்த்தி
ஆக 05, 2024 22:45

வங்கதேச ஊடுருவல் காரல் களுக்காக இந்த பேச்சு


ஆரூர் ரங்
ஆக 05, 2024 22:08

இதே மாதிரி தான் ஆந்திராவைப் பிரிக்க விட மாட்டோம் ன்னு தீர்மானம் போட்டது? தீர்மானத்தை குப்பையில் போட்டது சோனியா காங்கிரஸ் அரசு.


S. Narayanan
ஆக 05, 2024 22:06

சில நிர்வாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ள பெரிய மாநிலங்கள் இரண்டாக பிரிக்கலாம்.


GMM
ஆக 05, 2024 22:04

மாநில நிர்வாக வசதிக்கு மாவட்டங்கள் பிரிக்க முடியும். அது போல் மத்திய அரசு தேச பாதுகாப்பு, நிர்வாக வசதி கருதி, மாநிலத்தை பிரிக்க, இணைக்க முடியும். மாநிலம் என்பது மத்திய அரசுக்கு உதவி செய்ய உருவாக்க பட்ட நிர்வாக அமைப்பு. அதன் அதிகாரம் வரை செய்யப்பட்டது. Ltd. மத்திய அரசின் கொள்கை முடிவில் சட்ட பேரவை தலையிட சட்ட அதிகாரம் கிடையாது. சட்ட பேரவை தற்காலிக மக்கள் பிரதிநிதிகள் சபை. நிரந்தர அமைப்பு மட்டும் தான் புதிய தீர்மானம் பரிந்துரைக்க முடியும். பாராளுமன்ற மன்றம், தேசிய பிரதிநிதிகள் கொண்ட சபை. அதன் சாசன அதிகாரம் அதிகம்.


Easwar Kamal
ஆக 05, 2024 21:28

ஆரம்பிச்சிட்டானுவ


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை