உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால்

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில், வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை. இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல் நடக்கும் போது, அந்த நடவடிக்கை தொடரும். அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அதற்கு அஞ்ச மாட்டோம். இந்திய பாதுகாப்பு படையினர் தாக்குதலால் பேரழிவிற்கு உள்ளான பிறகு, பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்காக கெஞ்சியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4tmm2227&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 உள்நாட்டு ஆயுதங்கள் ஆபரேஷன் சிந்தூர் மூலம், இந்தியாவின் உள்நாட்டு ஆயுதங்களின் சக்தியை உலகம் கண்டுள்ளது. நமது இந்திய ஆயுதங்களும் பிரம்மோஸ் ஏவுகணையும் எதிரியின் எல்லைக்குள் நுழைந்து பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. இலக்குகள் தீர்மானிக்கப்பட்ட இடங்களில் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டன.எதிரி எங்கிருந்தாலும், அவன் விரட்டியடிக்கப்படுவான். தூக்கம் இல்லாத இரவுகள் இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு நுழைந்து, பயங்கரவாதிகள் முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எதிரிக்கு தூக்கமில்லாத இரவுகளை பிரம்மோஸ் ஏவுகணை கொடுத்தது.வேலைக்கு ஆகாது பாகிஸ்தான் அரசு மற்றும் அரசு சாராதவர்களின் சூழ்ச்சி இனி வேலை செய்யப் போவதில்லை. பாதுகாப்புத் துறையில் பெரிய நிறுவனங்கள் உ.பி.க்கு வருகின்றன. AK203 துப்பாக்கி உற்பத்தி அமேதியில் தொடங்கியது. பஹல்காமில் நடந்த கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலில், கான்பூரின் மகன் சுபம் திவேதியும் தனது உயிரை இழந்தார். மகள் ஐஷான்யாவின் வலியையும் கோபத்தையும் நாம் அனைவரும் உணர்ந்திருக்கிறோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

ஆறுதல் தெரிவித்தார் பிரதமர்!

கடந்த ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட 26 பேரில் ஒருவரான சுபம் திவேதியின் குடும்பத்தினரை பிரதமர் மோடி சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். உத்தரப் பிரதேசம் சென்றுள்ள மோடி, விமான நிலையத்தில் அவர்களை சந்தித்து பேசினார். 'இது மிகவும் உணர்ச்சிபூர்வமான சந்திப்பு' என்று சுபமின் உறவினர் சவுரப் திவேதி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

ஜிதீஷ்
மே 31, 2025 10:07

இதுமாதிரி பேச்சுக்கள் பிஹார் எலக்‌ஷன் நடந்து முடியும் வரை தொடரும்.


Narayanan Muthu
மே 30, 2025 20:03

1947 முதல் 2014 வரை ருபாய் 55 லட்சம் கோடி 2014 முதல் 2025 வரை 200 லட்சம் கோடி இது இந்திய அரசின் மீது கடன். பெரும்பான்மையான பொது சொத்துக்களை விற்றதுமல்லாமல் வரி பயங்கரவாதம் தொடுத்தும் இதுதான் நிலைமை. பொது மக்கள்தான் சிந்திக்க வேண்டும்.


மீனவ நண்பன்
மே 30, 2025 20:28

..வெளியிலிருந்து எதிரிகள் தேவை கிடையாது ..அந்தோணி பாதுகாப்பு அமைச்சரா இருந்தபோது போர்விமானங்கள் வாங்க அரசாங்கத்திடம் பணம் இல்லை என்று சொன்னார் .


மீனவ நண்பன்
மே 30, 2025 20:48

பசுத்தோல் போர்த்திய புலி மாதிரி மார்க்கம் தர்மத்தின் போர்வையில் ..அவ்வளவு கஷ்டம்னா பக்கத்து தேசங்களுக்கு சென்று செட்டிலாயிடலாமே


vivek
மே 30, 2025 21:30

சொத்தை முத்து ,போய் நேரு மாமா கிட்ட கேளு...


madhesh varan
மே 30, 2025 17:40

மோடியின் வாய் சவடால்


ஆரூர் ரங்
மே 30, 2025 19:03

மும்பை தாக்குதல் நேரத்தில் பிரதமர் மன்மோகன் வாய் கூட திறக்கவில்லை. பதிலடிக்கு முயற்சிக்கவில்லை. இப்போ அதிரடி. பயங்கரவாத பயிற்சி முகாமில் சேரவே பயப்படுகிறார்கள்.


Narayanan Muthu
மே 30, 2025 19:57

ரங்கு உருட்டு உருட்டு எவ்வளவு முடியுமோ அவ்வளவு உருட்டுங்கள். தலைவர்களின் உருட்டுக்குஉங்கள் உருட்டு ஒன்றும் சளைத்தது அல்ல.


சந்திரசேகரன்,துறையூர்
மே 30, 2025 20:14

போலி இந்துப் பெயரில் உள்ள துலுக்கனுங்களுக்கு எல்லாம் மோடியின் பெயரை கேட்டாலே ச்சும்மா அல்லு விடுது உன் டொப்பிள் கொடி நாட்டில் கேட்டுப் பார் மோடி பேசுவது வாய் சவடாலா என்று?


மீனவ நண்பன்
மே 30, 2025 20:44

சுருட்டு கும்பல் தான் இந்த மொத்துக்கு ஒத்துவரும்


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 30, 2025 17:32

அவங்க கிட்ட இருக்குற பட்டாசு வகைகள்ல உருப்படியா இருக்குறது அவைதான் .... அதை வெச்சுதானே மிரட்டியாகணும் ??


Gnana Subramani
மே 30, 2025 17:13

யாரும் இப்போது மிரட்ட வில்லையே. பாகிஸ்தானே உலகமெங்கும் பிச்சை எடுத்து நொந்து போய் இருக்கிறது


சமீபத்திய செய்தி