உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாதிகளை தப்ப விடமாட்டோம்; காஷ்மீரில் முகாமிட்டுள்ள அமித்ஷா உறுதி

பயங்கரவாதிகளை தப்ப விடமாட்டோம்; காஷ்மீரில் முகாமிட்டுள்ள அமித்ஷா உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: அப்பாவி மக்களை கொன்ற பயங்கரவாதிகளை தப்ப விடமாட்டோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார். காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து காஷ்மீரில் தாக்குதல் நடந்த இடத்தில் ஹெலிகாப்டரில் அமித்ஷா சென்று ஆய்வு நடத்தினார்.பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த, புகைப்படங்களை அமித்ஷா சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அன்புக்குரியவர்களை இழந்த வலியை ஒவ்வொரு இந்தியரும் உணர்கிறார்கள். இந்த துயரத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அப்பாவி மக்களைக் கொன்ற இந்த பயங்கரவாதிகளை ஒருபோதும் தப்பிக்க விடமாட்டோம் என பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அனைத்திற்கும், நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் உறுதியளிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

R.RAMACHANDRAN
ஏப் 24, 2025 09:54

அரசு பணிகளில் குற்றவாளிகள் ஊடுருவி உள்ளதால் குற்றங்கள் நடக்கும் வரை தூங்கி கொண்டிருந்துவிட்டு குற்றங்கள் நடந்த பிறகு சில நாட்கள் விழிப்புடன் இருப்பது போல பாசாங்கு செய்கின்றனர்.


thehindu
ஏப் 23, 2025 23:53

வேறு வேலை இல்லையா?


thehindu
ஏப் 23, 2025 23:49

இவர்கள் துப்பாக்கி வைத்துதான் தாக்குதல் நடத்தினார்கள் . ஆனால் உச்ச நீதிமன்றமோ அரசின் இதே ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது . இதில் யார் பயங்கரவாதி ?


thehindu
ஏப் 23, 2025 22:31

இவ்வளவு நாட்களாக எத்ரிகட்சிகளிடம் சவால் விட்டுக்கொண்டு இருந்தவர்கள் இப்போது தீவிரவாதிகளுக்கு சவால் விட்டுகொண்டு இருக்கிறார்கள் . இரண்டுக்கும் ஏதாவது வித்தியாசம் பார்க்க முடிகிறதா?.


Rajathi Rajan
ஏப் 23, 2025 19:11

அமித்ஷா பதவி விலக வேண்டும்


Kasimani Baskaran
ஏப் 23, 2025 19:06

பயங்கரவாதிகளை விட அவர்களை ஆதரித்து அவர்கள் வந்து தாக்குதல் நடத்த உதவிய கூட்டத்தையும், நவீன ஆயுதங்கள் கொடுத்து உதவியவர்களையும் கருவறுக்க வேண்டும். அதிக அளவில் இராணுவத்தினர் குடியேற்றப்பட்ட வேண்டும். அது ஒன்றுதான் நிரந்தர தீர்வு.


thehindu
ஏப் 23, 2025 18:53

நாடு முழுவதும் பயங்கரவாதம் பற்றிய செய்திதான். நாடு எவ்வளவு கெட்டு போயுள்ளது என்று இதன் மூலம் தெரிகிறது .


Mr Krish Tamilnadu
ஏப் 23, 2025 18:33

குறைந்தது 2 வருடத்திற்காவது, மிக கடுமையான செக்யூரிட்டி நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். காஷ்மீரில் அனைவரும் ஆதார் நகல் கையில் வைத்திருக்க வேண்டும். சிம் காஷ்மீரில் வாங்கிய சிம்மையே பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் வெளி ஆள் தங்கும் விவரம், வெளியேரும் விவரம் அரசுக்கு தெரிந்து இருக்க வேண்டும். துப்பாக்கி பொம்மைகள் விற்பனையை கூட தடை செய்ய வேண்டும். கடுமையான நடைமுறைகள் நேர்மையானவர்களை ஒரு போதும் பாதிக்காது. நாளைய நமது வலிமைக்காக, 5 வருடம் கூட தீவிர கண்காணிப்பு, சோதனைகளை கடுமையாக்க வேண்டும்.


sundarsvpr
ஏப் 23, 2025 16:57

எனக்கு வயது 88 வயது. சிறு பிராயத்தில் கவனித்துள்ளேன். தெருவில் புதிய நபர் வந்தால் அவரை விசாரிப்பார்கள். நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை கண்டால் நாம் மௌனம் காப்பது நல்லதுஅல்ல. இதுபோல் விசாரிப்பது நல்லது. இரவில் வயதான ஆண்கள் குழு தெருவில் ரோந்து போவார்கள். இதுபோல் விசாரணை நாமே செய்தால் ஊடுருவல் இருக்காது. அது மட்டும் இல்லை. தெருவில் விளையாடும் சிறுவர்கள் புதியமனிதர் வந்தால் யாரை பார்க்கவேண்டும் என்று விசாரிப்பார்கள். இதைவிட முக்கியமானது. போலீஸ்காரர் ஊரிலுள்ள மனிதர்களை நன்றாக அறிந்துவைத்திருப்பார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை