உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆதார், பான் கார்டு விவரம் வெளியிட்ட இணையதளங்கள் முடக்கம்; மத்திய அரசு நடவடிக்கை!

ஆதார், பான் கார்டு விவரம் வெளியிட்ட இணையதளங்கள் முடக்கம்; மத்திய அரசு நடவடிக்கை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஆதார், பான் கார்டு விவரங்களை வெளியிடும் பல்வேறு இணையதள பக்கங்களை மத்திய அரசு முடக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக்குழு இணையதளப் பக்கங்களை கண்காணித்து வருகிறது. மக்களின் ஆதார் மற்றும் பான் கார்டு விவரங்கள் உள்ளிட்ட முக்கியமான தனிப்பட்ட தகவல்களை சில இணையதளங்கள் வெளியிடுவது தெரியவந்தது. அவற்றின் மீது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 'இந்திய மக்களின் ஆதார் மற்றும் பான் கார்டு விவரங்களை வெளியிடுவதாக தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு வந்த தகவல் அடிப்படையில், பல்வேறு இணையதள பக்கங்களை முடக்கி, அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்புக்கு இணங்க, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தனிப்பட்ட விவரங்கள் கசிந்தால் அவர்கள் ஆன்லைன் மோசடிகளுக்கு ஆளாக நேரிடும். கசிந்த தகவல்களால் எந்தவொரு பாதிப்பும் ஏற்பட்டால், தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் அதிகாரிகளை சந்தித்து புகார் அளித்து இழப்பீடு பெறலாம். இதற்கு தகவல் தொழில்நுட்ப செயலர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கடந்த வாரம், ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் அதிகாரிகள் 3.1 கோடி வாடிக்கையாளர்களின் டேட்டாவை விற்றுள்ளதாக ஹேக்கர் ஒருவர் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

vijay Vijay
செப் 28, 2024 23:10

Aadhaar card pancard link panathathuku penalty 1000 we r daily wage person


KRISHNAN R
செப் 27, 2024 20:57

ஆதார் அட்டை என்பது. ஒரு நபரின் பெயர் முகவரி மட்டும். தெரிய வகையில் மட்டும்..வரவேண்டும்... மற்ற தகவல் பாது காப்பு இல்லை. இதனால் குற்றம் நடக்கின்றது. இதற்கு மத்திய அரசு.. தகவல் பாதுகாப்பு செய்யவில்லை


J.Isaac
செப் 27, 2024 19:04

ஆன்மீக இந்தியா . அன்பு,அடக்கம்,ஒழுக்கம் என்ற மும்மொழியை கற்றுக்கொடுக்க வேண்டும்.


R S BALA
செப் 27, 2024 17:55

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நம் தகவல் நம் வசம்தான் இன்னும் பாதுகாப்பாக உள்ளது என்று நினைப்பது அப்பாவித்தனமும் உச்சபட்ச காமெடியும் ஆகும்..


Sankaran Natarajan
செப் 27, 2024 16:45

ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் தரவுகளையும் வாடிக்கையாளர் விவரங்களையும் யாராவது தனிநபர் அல்லது நிறுவனம் திருடியிருந்தால் அது கிரிமினல் குற்றம். சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் நிறுவன அதிகாரிகளே தகவல்களை விற்றனர் என்பது செய்தி. அது உண்மையாயின் நிறுவனமே தடைசெய்யப்பட்டு அதிகாரிகளுக்கு உரிய தண்டனை அளிக்கவேண்டும்.


நாகபிரசாத்
செப் 27, 2024 15:59

ஒண்ணுக்கு போறதுக்குக் குய்ட ஆராரைக் கொண்டா, ஓ.டி.பி யக் கொண்டான்னு சர்வம் டிஜிட்டல் மயமாயிருச்சு. இதுல எவன் யாரோட டேட்டாவை எங்கே லீக் பண்ணுறானோ?


V RAMASWAMY
செப் 27, 2024 15:20

This is a very issue that every Govt in all States needs to look into and address at the earliest. Since such details go to into the hands of criminals and/or other vested interested, general public is put into lots of nuisance, disturbance and troubles. It is learnt that this has become a business to sell personal details to various desiring companies that need to market their products.


narayanansagmailcom
செப் 27, 2024 14:33

யாருக்கு என்ன ப்ரோப்லேம் வரும் என்பது இனிமேல் தான் தெரியும்


P. VENKATESH RAJA
செப் 27, 2024 14:11

மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


புதிய வீடியோ