உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருமண போட்டோ ஷுட் டாக்டர் சஸ்பெண்ட்

திருமண போட்டோ ஷுட் டாக்டர் சஸ்பெண்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சித்ரதுர்கா: அரசு மருத்துவமனையில், திருமணத்திற்கு முந்தைய போட்டோ ஷுட் நடத்திய, டாக்டர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளார்.திருமணத்திற்கு முந்தைய, பிந்தைய போட்டோ ஷுட் இப்போது பிரபலமாகி உள்ளது. படகில் சென்றபடி, அருவி உச்சியில் நின்றபடி உட்பட பல்வேறு கற்பனைகளில், புதுமண தம்பதிகள் போட்டோ ஷுட் எடுத்து வருகின்றனர்.ஆனால், டாக்டர் ஒருவர் சற்று வித்தியாசமாக யோசித்து, திருமணத்திற்கு முந்தைய போட்டோ ஷுட் எடுத்து, சிக்கலில் சிக்கி உள்ளார்.சித்ரதுர்காவின் பரமசாகரில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு ஒப்பந்த அடிப்படையில், டாக்டராக வேலை செய்தவர் அபிஷேக், 30. இவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்க உள்ளது. திருமணத்திற்கு முந்தைய 'போட்டோ ஷுட்' எடுக்க ஆசைப்பட்டார். இதனால் வருங்கால மனைவியை, தான் வேலை செய்யும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.அங்கு ஒருவரை படுக்கையில் படுக்க வைத்து, அவருக்கு அபிஷேக் அறுவை சிகிச்சை செய்வது போலவும், அபிஷேக்கிற்கு, வருங்கால மனைவி மருத்துவ உபகரணங்கள் எடுத்துக் கொடுத்து, உதவி செய்வது போலவும், 'போட்டோ ஷுட்' எடுத்து, சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.இந்த வீடியோவை பார்த்தவர்கள் அபிஷேக்கிற்கு, கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். 'மருத்துவ தொழிலை கொச்சைப்படுத்துகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்தனர்.இதையடுத்து அவரை 'சஸ்பெண்ட்' செய்து, சித்ரதுர்கா கலெக்டர் வெங்கடேஷ் நேற்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

theruvasagan
பிப் 10, 2024 21:26

இந்த ரெண்டு கேவலங்களையும் புடிச்சு உள்ள போட்டு ஜெயில் வாசத்தை போட்டோ ஷூட் எடுத்து எல்லாருக்கும் காமிக்கணும்.


Senthoora
பிப் 10, 2024 20:14

கையில காசு வாயில தோசை, என்பதுபோல பல டாக்டர்கள் பணம் இருந்தால்தான் வைத்தியம் அல்லது வெளியில் போ என்று சொல்லி அனுப்பி, எதனை உயிர் பிரிய காரணமான டாக்டர்கள் இன்னும் ஜாலியாக நடமாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள், அவர்களுக்கு ஒரு சஸ்பெண்ட் செய்வார்களா?


Viswam
பிப் 10, 2024 19:59

ஒரு வீடியோக்ராபர் இந்த மாதிரி எடுத்தா சூப்பரா இருக்கும் சொல்லியிருக்கக்கூடும் கல்யாணத்துக்கு முன்னாலே போட்டோஷூட்டிங்னு நாடு விநோதமா போயிட்டிருக்கு


rama adhavan
பிப் 10, 2024 11:27

தியேட்டர் பணியாளர், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் தவிர மற்றவர்களுக்கு, எவ்வளவு தான் பாதுகாப்புடன் இருந்தாலும் அனுமதி இல்லை. ஏன் எனில் tetanus நோய் தியேட்டரில் பரவ வாய்ப்பு அதிகம். இதனால் நோயாளி இறக்க வாய்ப்பு அதிகம்.


NicoleThomson
பிப் 10, 2024 11:23

லூசு லூசு பேசாம பிளேஸ் பேனர் வைத்து போயிருக்கலாம்


தத்வமசி
பிப் 10, 2024 11:05

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள். போட்டோ ஷூட் வாழ்க்கையல்ல திருமணம். திருமண முறிவு, பிணக்கம் இல்லாமல் இருப்பதற்கும், பெரியவர்களை மதித்து நடக்கவும் இந்த போட்டோ ஷூட்கள் பயன்பட வேண்டுமே தவிர, வெறும் பொழுது போக்குக்காக, அடுத்தவர்கள் லைக்குக்காக செய்தால் விபரீதமாக மாறிவிடும். திருமணத்தின் பொருளே போட்டோ ஷூட்டாக மாறிவிடும்.


RADE
பிப் 10, 2024 08:21

இந்த பூமியில் வாழ வாழ்க்கைக்கு எது அத்யாவிஷ்யம், அவசியம், ஆடம்பரம் மற்றும் அவசியமற்றது என்று பகுத்து பார்க்க தெரியாத படித்த முட்டாள்களாக தற்பொழுதைய தலை முறை உள்ளது...


Ramesh Sargam
பிப் 10, 2024 06:53

கொஞ்சம் ஓவராதான் போறாங்க... நல்லா சாத்தனும். இவர்களுக்கு சரியான போட்டோ சூட் (தண்டனை) - காவல் நிலையத்தில் கம்பிக்கு பின்னாடி நடத்தணும்.


Sundar
பிப் 10, 2024 09:26

அவர் நீண்ட விடுமுறைக்கு ஒரு வழியைக் கண்டுபிடித்தார்.


மேலும் செய்திகள்