உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வரவேற்பு! ; ஜி.எஸ்.டி.,யில் இனி இரண்டு அடுக்குகள்:   மத்திய அரசின் முடிவுக்கு மாநிலங்கள் ஆதரவு

வரவேற்பு! ; ஜி.எஸ்.டி.,யில் இனி இரண்டு அடுக்குகள்:   மத்திய அரசின் முடிவுக்கு மாநிலங்கள் ஆதரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஜி.எஸ்.டி., வரி அடுக்குகளை இரண்டாக குறைப்பதற்கான மத்திய அரசின் திட்டத்துக்கு மாநில அரசுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. டில்லியில் கடந்த 15ம் தேதி அன்று 79வது சுதந்திர தின விழாவில், தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு இந்த ஆண்டு தீபாவளி பரிசு காத்திருப்பதாக தெரிவித்திருந்தார். ஜி.எஸ்.டி., வரி விகிதங்களை குறைக்கும் வகையில் அறிவிப்பு வெளியாகும் என்பதை அவர் கூறியதாக தகவல்கள் தெரிவித்தன. சீர்திருத்தம் இதையடுத்து, நிதிய மைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சமீபத்தில் மாநில நிதியமைச்சர்கள் கூட்டம் இரண்டு நாட்கள் நடந்தது. அதில், ஜி.எஸ்.டி., வரி விகிதங்களை நான்கு அடுக்குகளில் இருந்து இரண்டு அடுக்குகளாக குறைக்கும் திட்டம் முன்மொழியப்பட்டது. ''ஜி.எஸ்.டி., வரி விகிதங்களில் மேற்கொள்ளப் படும் இந்த சீர்திருத்தங்களால் ஏழைகள், விவசாயிகள், நடுத்தர மக்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு பெருமளவில் வரிச்சுமை குறையும்,'' என, நிர்மலா சீதாராமன் கூறினார். இந்நிலையில், ஜி.எஸ்.டி., வரி விகிதங்களை குறைக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு, மாநில நிதியமைச்சர்கள் குழு ஆதரவு தெரிவித்துள்ளது. பீஹார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி தலைமையில், உத்தர பிரதேச நிதியமைச்சர் சுரேஷ்குமார் கண்ணா, ராஜஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங், மேற்கு வங்க நிதியமைச்சர் சந்த்ரிமா பட்டாச்சார்யா, கர்நாடக வருவாய் துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா மற்றும் கேரள நிதியமைச்சர் பாலகோபால் ஆகியோர் கூடி ஆலோசித்தனர். அப்போது, ஜி.எஸ்.டி., வரி குறைப்பு தொடர்பாக மத்திய அரசு முன்மொழிந்த திட்டங்களுக்கு ஆதரவு தர முடிவு எடுக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பீஹார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி, “மத்திய அரசின் முடிவை ஏற்றுக்கொள்ள, மாநில அமைச்சர்கள் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. “அதே சமயம், பாவ வரியில், மிக விலை உயர்ந்த ஆடம்பர கார்களையும் சேர்க்குமாறு மத்திய அரசுக்கு குழு பரிந்துரை செய்திருக்கிறது,” என்றார். ஜி.எஸ்.டி., வரி அடுக்குகளை குறைக்கும் மத்திய அரசின் புதிய திட்டத்தின்படி இனி, 5 சதவீத மற்றும் 18 சதவீத அடுக்குகள் மட்டுமே இருக்கும். 12 சதவீத மற்றும் 28 சதவீத வரி அடுக்குகள் நீக்கப்படும். புகையிலை, மதுபானங்கள் உள்ளிட்ட ஏழு பொருட்களுக்கு விதிக்கப்படும் பாவ வரி, 40 சதவீதமாகவே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி., வரி விகிதங்களை குறைப்பதற்கான புதிய திட்டத்தின்படி, தற்போது 12 சதவீத வரி விகிதத்தில் இருக்கும் 99 சதவீத பொருட்கள், 5 சதவீத வரி விகிதத்திற்கு மாற்றப்படும் என தெரிகிறது. அதே போல், தற்போது 28 சதவீத வரி விகிதத்தில் இருக்கும் 90 சதவீத பொருட்கள் இனி, 18 சதவீத வரி விகிதத்திற்கு மாற்றப்படும். இந்த வரி குறைப்பால், நுகர்வு 1.93 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்து, உற்பத்தி துறை வளர்ச்சிக்கு வித்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனிநபர்களின் ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடுகளுக்கு, ஜி.எஸ்.டி., வரியில் இருந்து விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால், ஆண்டுக்கு 9,700 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. விவாதிக்கப்படும் எனினும், மத்திய அரசி ன் இந்த நடவடிக்கைக்கு, மாநில அமைச்சர்கள் குழு வரவேற்பு தெரிவித்துள்ளது. மேலும், இந்த வரி விலக்கு, காப்பீடுதாரர்கள் பயனடையும் வகையில் இருப்பதை உறுதி செய்யுமாறு குழு வலியுறுத்தியுள்ளது. மாநில நிதியமைச்சர்களின் ஒப்புதலை தொடர்ந்து, ஜி.எஸ்.டி., கவுன்சிலின் அடுத்த கூட்டத்தில், வரி விகிதங்கள் குறித்து இறுதி முடிவெடுக்கப்படும். குறிப்பாக ஜி.எஸ்.டி., வரி அடுக்குகள் மாற்றத்தால், மாநில அரசுகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்வது குறித்தும் விரிவாக விவாதிக்கப்படும் என தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

நல்லவன்
ஆக 22, 2025 11:18

இததான கோவை அன்னபூர்ணா ஓனர் ..கேட்டாரு ... அவர அசிங்க படுத்தினீங்க எல்லாரும்


அப்பாவி
ஆக 22, 2025 10:44

பன், பட்டர், பட்டர் ஜாம், ஜாம், பன் நு ரெண்டு ரெண்டா பிரிச்சு இரண்டடுக்கில் வரி போடுவாங்களோ


Rajan A
ஆக 22, 2025 08:02

அது என்ன "பாவ" வரி? இந்த பொருட்களை உபயோகப்படுத்துபவர்கள் பாவிகளா? பணம் உள்ளவர்கள் வாங்குகிறார்கள். முதலில் 5-10 கிமீ கொடுக்கும் வாகனங்களுக்கு தடை மற்றும் எரிபொருள் விலை ஏற்ற சொல்லுங்கள். முட்டாள்தனமான உலகம்


Keshavan.J
ஆக 22, 2025 10:15

Even in Middle east the governments call this SIN TAX. So it is not in India alone


N Sasikumar Yadhav
ஆக 22, 2025 03:14

விஞ்ஞானரீதியாக ஆட்டய போடுவநில் திறமை வாய்ந்த கட்சியான திருட்டு திமுக இந்த வரி குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறதாம் . தன்னுடைய மக்கள் நலனில் அக்கறையுள்ள ஒரே கட்சி திருட்டு திராவிட மாடல் கட்சி மட்டுமே


தாமரை மலர்கிறது
ஆக 22, 2025 02:03

இந்த வரி குறைப்பால் மத்திய அரசுக்கு ஏற்படும் நஷ்டத்தில் மாநில அரசும் பங்கேற்பது நல்லது. கார்ப்பரேட் மற்றும் வருமான வரியை முற்றிலும் நீக்குவது பொருளாதாரத்திற்கு நல்லது. ஆனால் ஜிஎஸ்டியை குறைக்க கூடாது. அப்படி குறைத்தால், அரசின் செலவுகளை குறைக்க வேண்டும். மாநில அரசுக்கு கொடுக்கும் மானியங்களை குறைக்க வேண்டும். கடன் வாங்கி செலவு செய்வது நாட்டிற்கு நல்லதல்ல.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை