உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசு டாக்டர்கள் 200 பேர் கூண்டோடு ராஜினாமா; திணறும் மேற்கு வங்க அரசு

அரசு டாக்டர்கள் 200 பேர் கூண்டோடு ராஜினாமா; திணறும் மேற்கு வங்க அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் 200க்கும் மேற்பட்ட அரசு டாக்டர்கள் ஒரே சமயத்தில் வேலையை ராஜினாமா செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.ஜி., கர் மருத்துவமனையில் இளம்பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் மீதான எதிர்ப்பு அலை மேற்கு வங்கத்தில் இன்னும் தீரவில்லை. இந்த சம்பவத்தைக் கண்டித்து டாக்டர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், மத்திய கோல்கட்டாவின் ஜன்பசாரில், கடந்த 5ம் தேதி மாலை முதல் ஜூனியர் டாக்டர்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ச்சியாக 5வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நீடித்து வருகிறது. இதனால், டாக்டர்களின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜூனியர் டாக்டர்களின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்கும் விதமாக, மேற்கு வங்கத்தில் அரசு டாக்டர்கள் 200க்கும் மேற்பட்டோர் ஒரே நாளில் ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். கோல்கட்டா தேசிய அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 50 சீனியர் டாக்டர்களும், என்.ஆர்.எஸ்., மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 34 டாக்டர்களும், சாகோர் தட்டா மருத்துவ கல்லூரியில் 30 டாக்டர்களும், ஜல்பாய்குரி மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் 19 டாக்டர்களும் ராஜினாமா செய்தனர். அதற்கு முன்னதாக கோல்கட்டா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 70 சீனியர் டாக்டர்களும், வடக்கு வங்காள மருத்துவ கல்லூரி, மருத்துவமனையைச் சேர்ந்த 40 டாக்டர்களும் பணியை ராஜினாமா செய்தனர். டாக்டர்களின் ஒட்டுமொத்த ராஜினாமாவால், அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் பற்றாக்குறை ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. இது ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Ramesh Sargam
அக் 10, 2024 22:20

அரசியலில் மமதை பிடித்த மமதாவின் இறுதி ஆண்டுகள்.


V RAMASWAMY
அக் 10, 2024 13:26

ஒரே வழி முதல்வரின் ராஜினாமா.


Sudha
அக் 10, 2024 13:01

ஒன்றும் புரியவில்லை, கொலை செய்தது யாரோ ஒரு காமுகன், அவன் என்ன மம்தாவுக்கு உறவா கட்சிக்காரனா? விசாரணை சிபிஐ செய்தது , அறிக்கையும் வந்தாயிற்று, உண்மையில் முதல்வரின் தவறு என்று எதை கூறுகிறார்கள்? கள்ளக்குறிச்சி கள்ள சாராய விவகாரம் இதற்கு முன் நடந்த ஞாபகம், அறிக்கை வந்து விட்டதா? முதல்வரின் பங்கு என்ன?


Raman
அக் 10, 2024 12:46

Absolutely


Kumar Kumzi
அக் 10, 2024 09:27

பதவியை ராஜினாமா செய்வேன்னு நாடகமாடி ஊரை ஏமாற்றிய கொடுமைக்காரி மும்தா பேகத்தை பதவியிலிருந்து தூக்க வேண்டும்


Sankare Eswar
அக் 10, 2024 09:13

நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் இப்போராட்டத்திற்கு ஆதரவு தந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடவேண்டும்.


Sankare Eswar
அக் 10, 2024 09:12

மமதா ராஜினாமா செய்துவிட்டு ஆடினால் மேற்கு வங்கம் உருப்படும்


Narayanan Sa
அக் 10, 2024 08:49

மம்தாவை வீட்டுக்கு அனுப்புனால் தான் இந்த பிரச்சனையை தீர்க்க முடியும்


raja
அக் 10, 2024 08:22

சபாஷ் ஆனவகாரி மமதை பதவியை விட்டு விலகும் வரை போராட்டத்தை கைவிடாதீர்...


nv
அக் 10, 2024 08:09

இந்திய மருத்துவ கவுன்சில் மருத்துவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்... அப்போது தான் மாநிலங்கள் அவர்களுக்கு உரிய மரியாதை தரும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை