உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேற்கு வங்கத்தில் டாக்டர்கள் மீண்டும் போராட்டம்; பணி புறக்கணிப்பு: முதல்வர் மம்தா மீது அதிருப்தி

மேற்கு வங்கத்தில் டாக்டர்கள் மீண்டும் போராட்டம்; பணி புறக்கணிப்பு: முதல்வர் மம்தா மீது அதிருப்தி

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் இன்று (அக்டோபர் 01) மீண்டும் டாக்டர்கள் போராட்டத்தை துவங்கி உள்ளனர். எங்கள் கோரிக்கைகளை அரசு சரியாக அணுகவில்லை என டாக்டர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.மேற்குவங்கம், கோல்கட்டா அரசு மருத்துவமனையில் ஆகஸ்ட் 9ம் தேதி பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். பெண் டாக்டருக்கு நீதி கேட்டும், பாதுகாப்பை வலியுறுத்தியும் நாடு முழுவதும் மருத்துவ பணியாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tizvo3wr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சுகாதார துறை செயலர், கோல்கட்டா போலீஸ் கமிஷனரை பணி இடமாற்றம் செய்ய வேண்டும், பணி செய்யும் இடங்களில் சி.சி.டி.வி., கேமரா உள்பட பாதுகாப்புகளை அதிகப்படுத்த வேண்டும் என்பது உள்பட 5 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர்.அவர்களின் கோரிக்கைகளை ஏற்பதாக முதல்வர் மம்தா ஒப்புக்கொண்டார். செப்டம்பர் 21ம் தேதி முதல் டாக்டர்கள் பணிக்கு திரும்பினர். ஆனால் டாக்டர்களுக்கான பாதுகாப்பு அம்சங்களை அரசு ஒப்புக் கொண்டபடி செயல்படுத்தவில்லை என கூறி ஜூனியர் டாக்டர்கள் இன்று (அக்டோபர் 01) மீண்டும் காலவரையற்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தை தொடங்கினர். 52வது நாள் போராட்டத்தை தொடங்கி இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். வேலை செய்யும் இடங்களில் போதிய பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற எங்கள் கோரிக்கைகளை அரசு சரியாக அணுகவில்லை. அதனால் போராட்டத்தில் மீண்டும் ஈடுபடுகிறோம். இதைத்தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்றனர். மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் நாளை தொடங்க உள்ள நிலையில், ஜூனியர் டாக்டர்கள் கண்டன பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Mahendran Puru
அக் 02, 2024 19:59

தலைகீழாக நின்று தண்ணீர் குடித்துப் பார்க்கிறது சங்கிக் கட்சி. தொண்டை தான் வறண்டு போகும். மம்தாவை ஜெயிக்க முடியாது. இப்படி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் போராட்டம் ஓட்டு வாங்கிக் கொடுக்காது சங்கிகளே.


Sudha
அக் 01, 2024 19:34

போராட்டம் தூண்டி விடப்படுகிறது என்பது உறுதி செய்யப்பட்டது


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 01, 2024 21:07

போராட்டம் தூண்டிவிடப்படுகிறது என்று அம்மாநில முதல்வர் கூட சொல்லவில்லை .... சொன்னால் அவருக்கு எதிரான உணர்வே அதிகரிக்கும் .... மீண்டும் போராட என்ன காரணம் என்று தெரியாமலேயே கருத்திடுகிறீர்கள் ....


raja
அக் 01, 2024 16:14

மத்திய பிஜேபி அரசு ஒரு கையாலாகாத அரசு தேச விரோதிகளுக்கு கொலைகாரர்கலுக்கு கொள்ளை காரர்களுக்கு ஆதரவு கொடுக்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்க காரணமான திருட்டு திராவிட விடியல் மாடல் அரசையும் மம்தா அரசையும் களைக்க முடியாத ஒரு துப்பு கெட்ட அரசு..


Barakat Ali
அக் 01, 2024 18:13

திமுக மற்றும் திரிணாமூல் ........ ஆட்சி கலைக்கப்பட்டால் இரு கட்சிகளுமே முன்பை விட 4, 5 சீட்டுக்கள் அதிகம் பெற்று ஆட்சிக்கு வருவார்கள் .....


narayanansagmailcom
அக் 01, 2024 16:06

மம்தாவை தூக்குவதை தவிர வேறு வழி இல்லை


nagendhiran
அக் 01, 2024 15:02

புமாரங்?


Palanisamy Sekar
அக் 01, 2024 14:47

பெண்ணா பேயான்னே தெரியவில்லை. மம்தாவுக்கு பழிவாங்கும் குணம் அதிகம் இருக்கிறது என்று பலரும் விமர்சித்ததை இப்போது நிரூபிக்கின்றார் போலும். பாதுகாப்புக்கு கோரிக்கை விடுகின்றார்கள். அதனைக்கூட செய்ய மறுத்தால் இவரது ஆட்சியை உச்ச நீதிமன்றமே ஒரு முடிவோடு நீக்க பரிந்துரைக்கலாம். ஒவ்வோர் முறையும் சம்பவங்கள் நடந்த பிறகு வருத்தப்பட்டு பலனில்லை. மருத்துவர்களுக்கே இந்த கதி என்றால் சாமானியர்களின் நிலைமை எப்படி இருக்கும். இனி பங்களாதேஷிலிருந்து வந்த தீவிரவாதிகளை வைத்து மீண்டும் தாக்குதல் கூட செய்வார் என்று உறுதியாக நம்பலாம். மம்தாவை பதவி நீக்கம் செய்தால் மட்டுமே இதற்கான தீர்வினை எட்டமுடியும் என்பதே பொதுவான கருத்து. அரசியல் அரக்கி மம்தா


RAMAKRISHNAN NATESAN
அக் 01, 2024 14:41

முமைதா பேகத்தின் வாயில சனி சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கு .........


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை