உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கவர்னரின் அதிகாரங்கள் என்னென்ன? பள்ளி புத்தகங்களில் சேர்க்கிறது கேரளா

கவர்னரின் அதிகாரங்கள் என்னென்ன? பள்ளி புத்தகங்களில் சேர்க்கிறது கேரளா

கொச்சி : ''மாநில கவர்னரின் அரசியலமைப்பு அதிகாரங்கள் மற்றும் கடமைகளை விளக்கும் உள்ளடக்கம் பள்ளிப் பாடப்புத்தகங்களில் விரைவில் சேர்க்கப்படும்,'' என, கேரள அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்துள்ளார். கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உள்ளார்.

எதிர்ப்பு

கடந்த ஜூன் 4ம் தேதி கவர்னர் மாளிகையில் நடந்த உலக சுற்றுச்சூழல் தின விழாவில், பாரத மாதா கையில் காவிக்கொடி ஏந்தியிருக்கும் புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது.விழாவில் பங்கேற்ற மாநில அமைச்சர் பிரசாத், இது, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு பயன்படுத்தும் கொடி என எதிர்ப்பு தெரிவித்து நிகழ்ச்சியில் பங்கேற்காமல் வெளியேறினார். இது, மாநில அரசுக்கும், கவர்னருக்கும் இடையே உரசலை ஏற்படுத்தியது. இந்த சூழலில், நேற்று முன்தினம் கவர்னர் மாளிகையில் நடந்த சாரண - சாரணியருக்கு சான்றிதழ் வழங்கும் விழாவிலும், மீண்டும் பாரத மாதா புகைப்படம் வைக்கப்பட்டிருந்ததால், நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே அமைச்சர் சிவன்குட்டி வெளியேறினார். வேண்டுமென்றே, ஆர்.எஸ்.எஸ்., பயன்படுத்தும் பாரத மாதா படத்தை அரசு விழாவில் கவர்னர் வைப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

இந்நிலையில் நேற்று, கேரள கல்வித் துறை அமைச்சர் சிவன்குட்டி வெளியிட்ட அறிக்கை:

சமீபகாலமாக, கவர்னர்களை தவறாக பயன்படுத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சீர்குலைக்கும் முயற்சிகள் அதிகரித்து வருகின்றன. அரசியலமைப்பின் கீழ் கவர்னரின் அதிகாரங்கள் என்ன என்பதை உச்ச நீதிமன்றமும் தெளிவுபடுத்திஉள்ளது. இந்த விஷயத்தை பள்ளி குழந்தைகளுக்கு எடுத்துச் செல்ல மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

முக்கிய பங்கு

ஜனநாயகம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை குழந்தைகள் கற்றுக்கொள்ள உதவுவதில், பள்ளிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, கவர்னரின் அரசியலமைப்பு அதிகாரங்கள், கடமைகள் குறித்த உள்ளடக்கங்களை பள்ளிப்பாடப்புத்தகத்தில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தின், இரண்டாவது தொகுதியில் இந்த தலைப்பு இடம்பெறும். உயர்நிலைப்பள்ளி புத்தகங்களில் வரவிருக்கும் மாற்றங்களின் ஒரு பகுதியாக இது இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Selvaraj K
ஜூன் 23, 2025 05:02

வாக்காளர் இந்தியா குடி மகன் என்ற முறையில் என் கருத்த பதிவு பன்றேன் கவர்னர் குடியரசு தலைவர் அதிகாரம் தெளிவா இருக்குது மக்களால் தேர்ந்தெடுத்த மாநில அரசு நிர்வாகம் மற்றும் சட்ட ஒழுங்கு சரி இல்லை என்றால் 356 பயன் படுத்த உரிமை இருக்குது அதே வேளை இவர்கள் தவறுக்கு துணை போனால் 361 4 கீழ் விளக்கம் கேட்டு 60 நாள் கழித்து வழக்கு தொடுக்கலாம்


Oviya vijay
ஜூன் 21, 2025 12:33

முதல்வரின் அதிகாரம் என்ன? தங்க கடத்தல் அதிகார வரம்பிற்குள் வருமா என கமிட்டி அமைத்து அதில் ஆராய்ச்சி செய்ய வேண்டும்


Kulandai kannan
ஜூன் 21, 2025 12:28

கம்யூனிசத்தால் உலகெங்கும் நடத்தப்பட்ட படுகொலைகளையும் பாடத்தில் சேர்க்கலாம்.


Ramesh Sargam
ஜூன் 21, 2025 12:23

ஆளும் கட்சியினர் மக்களுக்கு செய்யவேண்டிய செயல்கள், பணிகள் என்னென்ன என்றும் பள்ளி புத்தகங்களில் சேர்த்தால் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.


Iyer
ஜூன் 21, 2025 08:59

யோகா, பிராணாயாமம், தியானம், தமிழர்களின் சித்த மற்றும் இயற்கை வைத்தியம் , தமிழர்களின் பசு ஆதார இயற்கை வேளாண்மை - போன்றவற்றில் பயிற்சி நம் மாணவர்களுக்கு மிக அவசியம்.


Iyer
ஜூன் 21, 2025 08:48

நமது பள்ளிகளையும் கல்லூரிகளையும் RSS இடம் ஒப்படையுங்கள். அப்போதுதான் மாணவர்களிடம் நாட்டுப்பற்று, ஒழுக்கம் , Discipline போன்ற குணங்கள் வளரும்


Lakshmanan
ஜூன் 21, 2025 07:55

கள்ள ஒட்டு அரசியல் கொலை பற்றி எழுதலாம்


Iyer
ஜூன் 21, 2025 08:53

மாநில மந்திரியாக இருந்துகொண்டே Gold Smuggling செய்வது எப்படி என்பது பற்றி புத்தகங்களில் விளக்கலாம்


GMM
ஜூன் 21, 2025 07:49

அரசியலமைப்பின் கீழ் உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் , அதிகாரம், மாநில அமைச்சர், மாநில சட்ட பேரவை, மாநில நிர்வாக அதிகாரிகள் அதிகாரம் பற்றி சேர்க்கவும். அதன் பின் கவர்னர் ஜனாதிபதி அதிகாரத்தை தெளிவு படுத்தலாம். நீதிபதிக்கு தீர்வு காணும் அதிகாரம். மந்திரிக்கு பரிந்துரை செய்யும் அதிகாரம். கவர்னர் உத்தரவிட, அமுல்படுத்தும் அதிகாரம் சாசனம் வழங்கியுள்ளது.


Kasimani Baskaran
ஜூன் 21, 2025 07:04

தமிழகம் என்றால் திராவிட முதல்வரின் அதிகாரம் என்று பாடப்புத்தகத்தில் சேர்ப்பார்கள். கூடுதலாக பெரியார்தான் சமூக புரட்சி மூலம் முதல்வர்களுக்கு பரவலாக அதிகாரம் கிடைக்க போராடினார். பலர் தீக்குளித்து வீர மரணமடைந்தனர் என்று கூட தயங்காமல் புளுகுவார்கள்.