உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / என்னது, எலி காரணமா...? சாலை பள்ளத்துக்கு சரமாரி கதை விட்ட ஊழியர் டிஸ்மிஸ்

என்னது, எலி காரணமா...? சாலை பள்ளத்துக்கு சரமாரி கதை விட்ட ஊழியர் டிஸ்மிஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : 'டில்லி - மும்பை நகரங்களை இணைக்கும் வகையில் அமைக்கப்படும் எக்ஸ்பிரஸ்வேயில் ஏற்பட்ட பள்ளத்திற்கு எலி தான் காரணம்' என கதை விட்ட ஊழியர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.தலைநகர் டில்லி முதல் மகாராஷ்டிரா வரையில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 1,386 கி.மீ., தூரம் கொண்ட இச்சாலை ஹரியானா, ராஜஸ்தான், ம.பி., குஜராத் மாநிலங்களில் உள்ள 24 நகரங்களை இணைக்கிறது. இதன் மூலம் டில்லியில் இருந்து மும்பைக்கு 12 முதல் 13 மணி நேரத்தில் சென்றடைய முடியும். ஜூலை 31 அன்றைய நிலவரப்படி இச்சாலை அமைக்கும் பணிகள் 80 சதவீதம் முடிவடைந்து உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருந்தார்.இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டத்தில், இச்சாலையில் பெரிய பள்ளம் ஒன்று ஏற்பட்டதுடன் அது புகைப்படங்கள் வெளியாகின. இது குறித்து, இச்சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட நிறுவனத்தில் பணியாற்றிய இளநிலை அதிகாரி ஒருவர் கூறுகையில், '' எலிகள் அல்லது வேறு விலங்குகள் தான் அந்த பள்ளத்தை தோண்டின; இதனால் தான் நீர்கசிவு ஏற்பட்டது'', என தெரிவித்தார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அந்த ஊழியரை பணி நீக்கம் செய்து சம்பந்தப்பட்ட நிறுவனம் உத்தரவிட்டது. பள்ளம் ஏற்பட்ட பகுதியில் தடுப்புகள் அமைத்து விபத்து ஏற்படாத வகையில் பார்த்து கொண்டது. மேலும் தண்ணீர் கசிவு காரணமாக தான் பள்ளம் ஏற்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அப்பாவி
செப் 20, 2024 01:45

பள்ளத்தை அப்படியே உட்டுரலாம். அதிகமா மழை பெஞ்சால் அது வழியா வெளியேறிடும். இது மாதிரி நூறு அடிக்கு ஒரு பள்ளம் தோண்டலாம். கதி சக்தி ஜிந்தாபாத்.


அப்பாவி
செப் 20, 2024 01:43

படத்தைப் பாத்தா பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்டுதான் வீக் மாதிரி தெரியுது.


தத்வமசி
செப் 19, 2024 22:40

முன்பு ஊழல் பெருச்சாளிகள் சில மாநிலங்களில் இருந்தார்கள். இப்போது எங்கும் பணப்புழக்கம். அதனால் தேனை எடுத்தவன் புறங்கையை நக்குவான் என்பது போல அதிகாரிகளின் கள்ளத்தனம் அதிகமாகின்றது.


KRISHNAN R
செப் 19, 2024 21:26

ஓகே கரெக்டாக....இரண்டு கால் எலி என்று சொல்லாமல் விட்டுருக்காங்க


அப்பாவி
செப் 19, 2024 21:25

கதி சக்தி திட்டம் பல்லிளிக்குது. அதை வெச்சு ஊழல் கார்ப்பரேட்கள் சாப்புடறாங்கோ. Rodents என வகைப்படுத்தப்.படும் குழிதோண்டி வசிக்கும் உயிரினங்களில் எலியும் ஒன்று. ஆனா அதுங்க ரோடு பக்கம் வர வாய்ப்பில்லை. நீர்க்கசிவு ந்னு கதை உட்டு தப்பிச்சிட்டாங்க.


சுந்தரம் விஸ்வநாதன்
செப் 19, 2024 19:50

சொன்னது ஊழியர் என்பதால் டிஸ்மிஸ் செய்துவிட்டார்கள். எங்கள் திராவிட பொன் நாட்டில் சர்க்கரையை எறும்பு தின்று விட்டது என்றும் சர்க்கரை வைத்திருந்த சாக்குகளை எலி தின்றுவிட்டது என்றும் கூறிய பெருந்தகையாரை சிலை வைத்து தயிர் வடை நைவேத்யம் வைத்தல்லவோ மக்கள் கும்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.


Narayanan Muthu
செப் 19, 2024 19:42

ஊழல் பெருச்சாளி என சொல்ல வந்தவரை டிஸ்மிஸ் செய்வது எல்லாம் அநியாயம்.


முக்கிய வீடியோ