உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோகன் பகவத்- இமாம் சந்திப்பில் பேசியது என்ன?

மோகன் பகவத்- இமாம் சந்திப்பில் பேசியது என்ன?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத், இஸ்லாமிய இமாம் மற்றும் மவுல்விக்களை டில்லியில் சமீபத்தில் சந்தித்தார். இதில், 60 இஸ்லாமிய அறிஞர்கள் பங்கேற்றனர். பகவத்துடன், ஆர்.எஸ்.எஸ்., ஸின் முக்கிய சீனியர் தலைவர்களும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். ஏற்கனவே 2022ல், பகவத் டில்லியிலுள்ள மசூதிக்கு சென்று, அங்குள்ள இமாமையும் சந்தித்துள்ளார். 'இரண்டு சமூகத்தினரும் ஒற்றுமையாக, அமைதியாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம்' என, சொன்னாராம் பகவத். 'நாங்களும் அதைத்தான் விரும்புகிறோம். புல்டோசர்களை வைத்து, முஸ்லிம்களின் வீடுகளை இடிப்பது, எங்கள் வியாபாரங்களை புறக்கணிப்பது, பசு வதை என்ற பெயரில், எங்களை வதைப்பது போன்ற விஷயங்களை நிறுத்த வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக இருந்து, இந்தியாவை வல்லரசாக்க வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை' என, கூறி னாராம், அகில இந்திய இமாம் தலைவர், உமர் அகமது இலியாசி.நிச்சயம் இதை ஆட்சியில் உள்ளவர்களிடம் எடுத்து செல்வேன். அதே சமயம், ஹிந்து - முஸ்லிம்களுக்கிடையே வெறுப்பை ஏற்படுத்தும், பேச்சுக்களை சமய தலைவர்கள் நிறுத்த வேண்டும் என. கேட்டுக் கொண்டாரம் பகவத்.இந்த சந்திப்பு, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தினாலும், ஆர்.எஸ்.எஸ்., தலைவர்களோ, 'இதற்கு பிரதமர் மோடியின் ஆதரவு உள்ளது; மேலும், இது போன்ற சந்திப்புகள் நடக்கும்' என்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

RAMAKRISHNAN NATESAN
ஜூலை 27, 2025 17:57

நாட்டைக்கூறு போடுறதுக்காக, என்னவேனும்னாலும் செய்வோம் ....ஹிந்து இயக்கங்கள் கண்டுக்க கூடாது .... அதே போல ஹிந்து ஆண்களுக்கு போதை மருந்தும், ஹிந்து பெண்களுக்காக வசியமும் செய்வோம் .... அதையும் கண்டுக்கக்கூடாது .... இதை ஒரு கோரிக்கையா அவங்க வைக்கலையா ?


Thiru, Coimbatore
ஜூலை 27, 2025 11:04

இருபத்திஐந்து கோடி இஸ்லாமிய மக்களை புறந்தள்ளிவிட்டு எல்லாம் இந்தியாவை மென்மேலும் உயர்த்த முடியாது. அதற்கு எந்தவிதமான முஸ்லீம் எதிர்ப்புகளையும் எழாமல் பார்த்து கொண்டு முஸ்ஸீம்களையும் தேசிய நீரோட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அவர்கள் தலைவர்கள் வாயிலாகவே முயற்சிகள் செய்து எல்லா சமூகமும் இணக்கமுற நடக்கும் சூழல் உருவாகும் போது பாரதம் இன்னுமே மிகவலிமைபெறும்... தற்போதைய எதிர்கட்சிகள் இதை நிச்சயம் விரும்பாது... முஸ்லீம் மக்கள் தான் கவனமாக இருக்கனும்


Jack
ஜூலை 27, 2025 08:45

சையது இமாம் தான் ஒஸ்தி


VENKATASUBRAMANIAN
ஜூலை 27, 2025 08:08

நல்ல முயற்சி. ஆனால் இதை காங்கிரஸ் திமுக விரும்பாது. கலைத்து விடுவார்கள். கவனமாக இருக்க வேண்டும்


K V Ramadoss
ஜூலை 27, 2025 07:55

வரவேற்கத் தகுந்தது..


Bharathanban Vs
ஜூலை 27, 2025 07:43

பக்கத்தில் அமர்ந்து பார்த்தது போல அடிச்சுவிடரீங்களே