உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ககன்யான் பயணத்துக்கு கம்பீரமும் வேணும்; கற்கவும் வேணும்: சொல்கிறார் சோம்நாத்!

ககன்யான் பயணத்துக்கு கம்பீரமும் வேணும்; கற்கவும் வேணும்: சொல்கிறார் சோம்நாத்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ககன்யான் திட்டத்தில் விண்வெளி செல்லப்போகும் 4 விண்வெளி வீரர்கள் போல மாற என்ன தகுதிகளை வளர்த்து கொள்ள வேண்டும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கினார்.நிலவை ஆய்வு செய்ய சந்திரயான் -3, சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 திட்டங்களை வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ, தற்போது மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த தீவிரமாக உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம், இந்த திட்டத்தில் விண்வெளிக்கு செல்ல உள்ள, விமானப்படை குரூப் கேப்டன்கள் பிரசாந்த் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் மற்றும் விங் கமாண்டர் சுபன்சூ சுக்லா ஆகியோரை அறிமுகம் செய்து வைத்து பிரதமர் கவுரவித்தார்.இந்நிலையில், இந்தியாவில் வளர்ந்து வரும் விண்வெளி திட்டத்தில், குறிப்பாக எதிர்கால ககன்யான் பணிகளுக்கு விண்வெளி வீரர்களாக ஆக விரும்பும் நபர்களுக்கு என்ன தகுதி இருக்க வேண்டும் என சோம்நாத் விளக்கினார்.

அவர் கூறியதாவது

* ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு செல்ல உள்ள வீரர்கள் திறமையான விமானிகள். புதிய விமானிகளுக்கு பயிற்சி அளிப்பது மட்டுமல்லாமல், ஹெலிகாப்டர்கள் மற்றும் போர் விமானங்கள் உட்பட எந்த விமானத்திலும் பறக்கும் திறன் கொண்டவர்கள்.* அவர்களை போல மாற, விண்வெளி வீரர்களுக்கு தொழில்நுட்ப திறன் மற்றும் உடல் வலிமை இருக்க வேண்டும்.* விண்வெளி வீரர் பயிற்சிக்கு வரும்போது அது வேறு உலகம். நீங்கள் ஒரு சிப்பாய் அல்ல. மீண்டும் மாணவர் ஆக மாற வேண்டும்.* இஸ்ரோ நிறுவனம் பயிற்சி அளிக்கும் போது அவர்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் கற்று கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி