உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஷிம்லா ஒப்பந்தம் சொல்வது என்ன?

ஷிம்லா ஒப்பந்தம் சொல்வது என்ன?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொள்வதாக இந்தியா அறிவித்துள்ள நிலையில், 'ஷிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வோம்' என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது.ஷிம்லா ஒப்பந்தம் வங்கதேச போர் முடிவில் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட ஒப்பந்தம் ஆகும்.வங்கதேச போரில் வெற்றி பெற்ற இந்தியா சார்பில் பிரதமர் இந்திரா, தோல்வியுற்ற பாகிஸ்தான் சார்பில் அதிபர் ஜூல்பிகர் அலி புட்டோ ஆகியோர் கையொப்பம் இட்டனர்.அனைத்து பிரச்னைகளுக்கும் இரு நாடுகளும் தங்களுக்குள் அமைதியான முறையில் பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டும் என்பது இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம். இதன்படி, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பிரச்னைகளில் வேறு நாடுகள் தலையிடக்கூடாது என்று இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது.இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் தற்போதுள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு, இந்த ஒப்பந்தம் மூலமே ஏற்படுத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் 740 கிலோமீட்டர் நீளத்துக்கு இந்த எல்லை கட்டுப்பாட்டு கோடு அமைந்துள்ளது. மலைகள், பள்ளத்தாக்குகள், சிற்றோடைகள், ஆறுகள் இந்த கட்டுப்பாட்டு கோட்டின் மீது அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

V.Mohan
ஏப் 26, 2025 14:29

""""முதல்வன்""" சினிமாவில் ரகுவரன் முதல்வராக நடித்த ""அர்ஜூனிடம் உங்களால என்னைத் தவிர்க்க முடியலை இல்ல என்று நக்கலாக சிரித்தபடி சொல்லுவார். டிட்டோ அதேபோல இந்த வயற்றெரிச்சல்கார விடியல் விசுவாசிகளால், "" மோடி மற்றும் அமித்ஷா அவர்களின் நினைப்பை தவிர்க்க முடியாமல், "ஜெர்க்"" ஆகி சம்பந்தம் இல்லாத இடத்திலும் அவர்கள் இருவரது பெயரை முடிச்சுப் போட்டு கருத்து எனும் கருமத்தை அள்ளித் தெளித்துக் கொண்டு போகின்றனர். திறமையும் ,நேர்மையும் மக்கள் ஆதரவும் அவர்கள் இருவரையும் தனியே காட்டுகிறது என்பதை உணர அவர்களால் முடியவில்லை, பாவம


Anantharaman Srinivasan
ஏப் 24, 2025 23:26

ஏட்டீக்கு போட்டியாக வம்பு செய்யும் பாகிஸ்தானுக்கு மரணயடி கொடுத்தால் அடங்கி வழிக்கு வரும்.


thehindu
ஏப் 24, 2025 22:03

என்ன இருந்தாலும் யாரும் அவலைப்படப்போவதில்லை . மோடி ஷாவின் தலைக்கனம் வறட்டு கவுரவம் எல்லாவற்றையும் விட விலை உயர்ந்தது


Ramesh Sargam
ஏப் 24, 2025 20:56

அன்று கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை எல்லாம் குப்பைத்தொட்டியில் போட்டு, பாக்கிஸ்தான் மீது சரியான தாக்குதல் நடத்தவேண்டும். அதுதான் இப்போதைக்கு சரி.


chandra
ஏப் 24, 2025 20:17

அவர் சொல்லுகிற மாதிரி பூட்டோவிடம் போய் கேளு என்று சொல்ல வேண்டியதுதான்.


Sathya
ஏப் 24, 2025 20:03

There is no need for such a useless agreement. it's already defunct.


GSR
ஏப் 24, 2025 19:46

ஏற்கெனவே சிம்லா ஒப்பந்தம் மீறப்பட்டதை போல தான் பாக்கிஸ்தான் நடந்து கொள்கிறது. சட்டம் 370 நீக்கப்பட்ட போதே ஊரெல்லாம் ஒப்பாரி வைத்தும் ஒன்றும் நடக்கவில்லை. இப்பொழுது சீனா அமெரிக்காவுடன் முட்டி கொள்ள விரும்பவில்லை - வீம்புக்கு மட்டும் பதிலடி கொடுத்து வருகிறது. அமெரிக்காவோ, பஹல்கம் விஷயத்தில் பாகிஸ்தானை புரிந்து கொண்டுவிட்டது. இந்த பின்னணியில் சிம்லா ஒப்பந்தம் ரத்து செய்தால் இந்தியாவுக்கு தான் சாதகம். மண்டைக்கு மேல் அல்ல, மண்டைக்கு உள்ளே ஏதாவது இருக்க வேண்டும்.


ஈசன்
ஏப் 24, 2025 19:33

இந்த நாட்டுடன் ஒப்பந்தம் என்பதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா! பொருளாதாரம் படு பாதாளத்தில் சென்று விட்ட, கிட்டத்தட்ட அடுத்த நாட்டில் கையேந்தும் நிலைக்கு வந்து விட்ட இவர்களை மனிதர்களாகவே மதிக்க கூடாது. பொய், பொறாமை, மத வெறி, அதனை வைத்து வெடிகுண்டு கலாச்சாரம், ஈவு இரக்கமே இல்லாமல் கொல்வது போன்ற அனைத்து கொடூர குணங்களை கொண்ட மனிதர்கள் இவர்கள். கடைசி தீவிரவாதி வரை அனைவரையும் தீர்த்துகட்டி, பிறகு சென்டினல் தீவு மக்களை போல இவர்களை உலக நாடுகள் ஒதுக்கி வைக்க வேண்டும்.