உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கடைசி நேரத்தில் தகவல் சொல்லி என்ன பயன்; மோடிக்கு மம்தா மீண்டும் கடிதம்

கடைசி நேரத்தில் தகவல் சொல்லி என்ன பயன்; மோடிக்கு மம்தா மீண்டும் கடிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: மேற்கு வங்க வெள்ள பாதிப்பு விவகாரத்தில் பிரதமர் மோடி உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷனுக்குச் (டி.வி.சி.,) சொந்தமான மைதான், பஞ்சாட் அணைகளில் இருந்து, அரசிடம் எந்த தகவலும் தெரிவிக்காமல், முன்னறிவிப்பு ஏதுமின்றி நீர் திறக்கப்பட்டதாகவும், இதனால், தெற்கு பகுதி மாவட்டங்களைச் சேர்ந்த 5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் (செப்.,20) கடிதம் எழுதியிருந்தார். டி.வி.சி., திட்டமிடாமல் தண்ணீரை விடுவிப்பதே இந்த வெள்ளத்துக்கு காரணம் என்றும், ஒருதலைபட்சமான போக்கு தொடர்ந்தால், எனது அரசு டிவிசியில் இருந்து முற்றிலும் விலக நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும், இந்த கடிதத்தை நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டிலுக்கும் அனுப்பியிருந்தார்.மம்தாவின் இந்த கடிதத்திற்கு அமைச்சர் சி.ஆர். பாட்டில் பதிலளித்திருந்தார். அதாவது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக, ஒவ்வொரு முறையும் தண்ணீர் திறக்கப்படும் போது, அரசுக்கு தகவல் தெரிவித்து இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இதனால், கடுப்பான முதல்வர் மம்தா பானர்ஜி, அமைச்சரின் விளக்கத்திற்கு மறுப்பு தெரிவித்ததுடன், பிரதமர் மோடிக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். தண்ணீர் திறப்பு விவகாரத்தில் மத்திய நீர்வளத்துறை ஆணைய அதிகாரிகள் ஒருதலைபட்சமாக முடிவெடுப்பதாகவும், மாநில அரசுடன் கலந்து ஆலோசிப்பதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுல்லாமல், நீர்திறப்புக்கு கொஞ்ச நேரத்திற்கு முன்பு தகவல் அளிப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க போதுமான அவகாசம் இருப்பதில்லை என்றும், எனவே, பிரதமர் மோடி உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Murugesa Pandian
செப் 24, 2024 12:21

தீதி ஜார்கண்ட்லயாவது சொல்லிவிட்டுத் தண்ணீரைத் திறந்து விடுகிறார்கள். கர்நாடகாகாரர்கள் சொல்லாமலே கபினியில் இருந்தும் கிருஷ்ணராஜ சாகரில் இருந்தும் ஒரே சமயத்தில் திறந்து விட்டு விடுகிறார்கள். ஹேமந்த் சொரேன் ஒங்க இண்டி கூட்டணி ஆளுதானே. நீங்களே பேசலாமே.


RAMAKRISHNAN NATESAN
செப் 23, 2024 08:38

வருடாவருடம் நடக்கும் நிகழ்வுக்கு முற்கூட்டியே எச்சரிக்கையா ???? எங்க டுமீலு நாட்டு தத்தி மாதிரியே நடந்துக்குறீங்க மேடம் ஜி ..... முன்னாடியே சொல்லியிருந்தா அந்த பெண் டாக்டரின் கற்பையும், உயிரையும் காப்பாத்துன மாதிரி ..... உங்க மாநில மக்கள் ஒரு பேயை பெண்ணா நினைச்சுகிட்டு இருக்காங்கோ மேடம் ஜி .....


RAMAKRISHNAN NATESAN
செப் 23, 2024 08:58

பெருமழை, புயல் போன்ற சிவப்பு எச்சரிக்கை சூழ்நிலைகளை முன்கூட்டியே தெரிவிக்கும் வகையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தை மேம்படுத்த வேண்டும் என மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.


Mahendran Puru
செப் 23, 2024 07:52

ஜெயலலிதா தூங்குகிறார் என்று உத்தரவுக்கு காத்திருந்து சென்னையை மூழ்கடித்தது நினைவிற்கு வருகிறது.


Barakat Ali
செப் 23, 2024 07:10

இணையதளங்களை ஆராய்ந்ததில் தெரிய வந்த விபரம் ..... மைதான் அணைக்கட்டில் இருந்து ஜார்க்கண்ட் மாநில அரசு வருடா வருடம் ஜூலை முதல் செப்டம்பர் இரண்டாவது வாரம் வரை மேற்குவங்கத்துக்கு தண்ணீர் திறந்து விடுகிறது ..... செப்டம்பர் இறுதியில் விசுவகர்மா பூஜை சமயத்தில் - அங்கே பருவமழையும் முடியும் சமயத்தில் மேலும் அதிகமாகத் திறக்கப்படுகிறது ..... இந்தத் திட்டத்தில் மாற்றம் என்பதே இருக்காதெனினும், மேற்குவங்க அரசுக்கு ஒவ்வொரு முறையும் இதற்கான தகவல் தெரிவிக்கப்படுகிறது ..... ஆக, அம்மையார் சொல்வது பச்சைப்பொய் .....


sankar
செப் 23, 2024 07:02

இவள் வாயிலேயே அடிங்க சார் - பொய் சொல்வதே பொழப்பா போச்சு


சாண்டில்யன்
செப் 22, 2024 23:30

பங்களாதேஷ் கலவரம் மற்றும் இலங்கை தேர்தல் முடிவுகள் இவர்களுக்கு எச்சரிக்கை மணியடிக்கிறதை இவர்கள் உணரவில்லை பெரிய சக்திகளாயிருந்தவர்கள் நாட்டை விட்டே துரத்தப் படுகிறார்கள்


SUBBU,MADURAI
செப் 23, 2024 06:04

Two kinds of politics: 1) PM Modi in USA, discussing how to set up semiconductor plant in Kolkata 2) TMC govt blocking Jharkhand border 2 days back, accusing DVC of releasing water and flooding Bengal Which one will lead to development?


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 23, 2024 07:33

இந்த மூர்க்க அங்கிள் பலமுறை பேர் மாத்திக்கிட்டாரு ...... தெற்காசியா முழுவதும் இஸ்லாமிய ஆட்சி என்னும் அவருடைய ஆசையை இங்கே சொல்லியிருக்காரு .........


Krishna Gurumoorthy
செப் 22, 2024 23:27

வெள்ளம் ரகசியமாக வருகிறதா?பெருமழை மாநிலம் முழுவதும் பெய்து வருகிறது முதல்வர் முதலிலேயே ஊகித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் தூங்கிவிட்டு இப்போது யார் மீது பழியை போடலாம் என்று அலையக் கூடாது


சாண்டில்யன்
செப் 22, 2024 23:27

எங்கும் எதிலும் அரசியல் லேட்டஸ்ட் - திருப்பதி லட்டு அதிகாரத்தை வைத்து எப்படியெல்லாம் குடைச்சல் கொடுக்கலாம் என்று ரூம் போட்டு சதி செய்கிறார்கள் பலன் - மக்கள் மனதில் இவர்கள் மீது வெறுப்பைதான் ஏற்படுத்தும்.


Ganapathy
செப் 22, 2024 22:31

நீங்க இன்னுமா முதல்வராக இருக்கீங்க?


Ramesh Sargam
செப் 22, 2024 22:11

வெள்ளம் வந்து பாதிப்பு ஏட்பட்டாச்சு. இனி பிரதமருக்கு கடிதம் எழுதி என்ன பயன்? நீர்வளத்துறை அமைச்சர் முன்னெச்சரிக்கை கொடுத்தாச்சு என்று கூறுகிறார். மமதாவோ நீர்திறப்புக்கு கொஞ்ச நேரத்திற்கு முன்பு தகவல் வந்ததாக கூறுகிறார். யார் பேச்சை நம்புவது? இந்த மத்திய மாநில அரசிடம் சிக்கி சின்னாபின்னமாகிறார்கள் மக்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை