உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அடிக்குது ஜாக்பாட் சமூக ஊடக பயனர்களுக்கு!: அரசை ஆதரித்து பதிவிட்டால் ரூ.8 லட்சமாம்: உ.பி., அரசு அதிரடி

அடிக்குது ஜாக்பாட் சமூக ஊடக பயனர்களுக்கு!: அரசை ஆதரித்து பதிவிட்டால் ரூ.8 லட்சமாம்: உ.பி., அரசு அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக ஊடகங்களில் அரசுக்கு ஆதரவாக உ.பி., அரசின் திட்டங்கள், சாதனைகள் பற்றிய தகவல்களை பதிவிடுபவர்களுக்கு ரூ.8 லட்சம் வரை ஊக்கத்தொகை அளிப்பது தொடர்பான புதிய சமூக ஊடகங்கள் கொள்கை நடைமுறைக்கு வரவுள்ளன. இந்த கொள்கை, அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் ஆகியுள்ளது.உத்தர பிரதேசம் மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., அரசு செயல்பட்டு வருகிறது. நேற்று (ஆக.,27) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், புதிய சமூக ஊடகங்கள் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கொள்கையின் மூலம் ஏராளமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. அதாவது, பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தேச விரோத பதிவுகளை போடும் பயனர்களுக்கு முன்பு தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவின்கீழ் தனியுரிமை மீறல்கள் மற்றும் இணைய பயங்கரவாதம் ஆகிய பிரிவுகளின்படி வழக்கு தொடரப்படும். இனி, தேச விரோத பதிவுகளை இடுபவர்கள் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையிலும் வழங்கப்படும். அதேபோல், ஆபாசமான அல்லது அவதூறான விஷயங்களை ஆன்லைனில் பரப்புபவர்கள் மீது கிரிமினல் வழக்கு பாயும்.

ஊக்கத்தொகை

* சமூக ஊடகங்களில் அரசுக்கு ஆதரவாக அரசின் திட்டங்கள், சாதனைகள் பற்றிய தகவல்களை பதிவிடுபவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும்.* எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூபில் பாலோயர்களின் எண்ணிக்கை அடிப்படையில் 4 வகைகளாக பிரிக்கப்படுவார்கள்.* அதில், எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் அரசின் திட்டங்கள், சாதனைகளை பற்றிய தகவல்களை பரப்புபவர்களுக்கு பாலோயர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாதம், ரூ.5 லட்சம், ரூ.4 லட்சம், ரூ.3 லட்சம் என ஊக்கத்தொகை வழங்கப்படும்.* யூடியூப்பில், வீடியோக்கள், ரீல்ஸ்கள், குறும்படங்கள் மற்றும் பாட்காஸ்ட்கள் மூலம் வெளியிடுபவர்களுக்கு ரூ.8 லட்சம், ரூ.7 லட்சம், ரூ.6 லட்சம் மற்றும் ரூ.4 லட்சம் என ஊக்கத்தொகை வழங்கப்படும்.* உத்தர பிரதேசம் மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்களும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

ajp
ஆக 28, 2024 23:40

ஆஹா... கலக்குற புலிகேசி


venugopal s
ஆக 28, 2024 21:15

உத்தரப்பிரதேச மாநில மக்களுக்கு உண்மையிலேயே நல்லது செய்தால் அவர்களே பாராட்டுவார்கள். இல்லை என்றால் இப்படித்தான் காசு கொடுத்து பாராட்டச் சொல்ல வேண்டிய நிலை வரும்!


தாமரை மலர்கிறது
ஆக 28, 2024 19:02

அருமையான திட்டம்.


J.V. Iyer
ஆக 28, 2024 17:14

ஆஹா அருமையான திட்டம். அப்படியே, உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பும் ஊடகங்களுக்கு பத்து லட்சம் அபராதம் விதிக்கவும் செய்யுங்கள்.


Sankare Eswar
ஆக 28, 2024 15:13

இதைவிட முட்டாள்தனமா எவனும் யோசிக்க முடியாது.... விமர்சங்கள் வந்தால்தான் ஆட்சியின் குறை களைந்து நல்லாட்சி தொடர திட்டங்களை எடுக்க முடியும்.


Natesan Narayanan
ஆக 28, 2024 14:36

நாங்கள் அனைவரும் உங்கள் ஆதரவலர்கள் , இது வரை தங்கள் நற்பணிகளை போற்றுகின்றோம் . உங்களுக்கு ஆதரவு கொடுப்பது புண்ணியகாரியம் . எதற்கு எங்களுக்கு பணம் . அந்த பணத்தை நல்லகாரியம் பண்ண இருக்கட்டும் . .


s k suresh babu
ஆக 28, 2024 14:24

JAI YOGI JI JAI BHARAT


பாமரன்
ஆக 28, 2024 14:21

விக்கிற வெலவாசிக்கு எவ்ளோ நாள் தான் ரெண்டு ரூபாய்க்கு கருத்து போடமுடியும் நம்ம பகோடாஸால... அதனால் தான் இந்த ஊதிய உயர்வு திட்டம்... மற்றபடி ஏற்கனவே அமலில் உள்ளது தான்... போங்க போங்க ஸ்வீட் எடுத்து கொண்டாடுங்க பகோடாஸ்


RAMAKRISHNAN NATESAN
ஆக 28, 2024 13:38

நாமளும் சங்கிகளை வசைபாடி எவ்ளோ மெனக்கிடறோம் ...... நம்ம புலிகேசி மன்னரோ அல்லது தக்குறி வெள்ளாட்டு அமீச்சரோ இப்படி போடுறதில்ல ..... பிஸ்கட்டை தூக்கிப்போடுறதோட நிறுத்திக்கிறாங்களே ...... ஊ பீயிஸ் வேதனை .....


வைகுண்டேஸ்வரன்
ஆக 28, 2024 13:35

இங்கே யாராச்சும் திமுக ஆதரவு கருத்து போட்டால், 200 ரூபாய் உ பி என்று, ஆதாரமே இல்லாமல், அறிவுகெட்டத் தனமாக எழுதிக் கொண்டிருக்கிறவர்கள் இனி என்ன பண்ணப் போறீங்க??


RAMAKRISHNAN NATESAN
ஆக 28, 2024 14:12

Your old name Pugazh was better. But this name helps to show you are a secularist.


புதிய வீடியோ