உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இதற்கு மேல் அரசு என்ன செய்ய வேண்டும்: கர்நாடக துணை முதல்வர் கேள்வி

இதற்கு மேல் அரசு என்ன செய்ய வேண்டும்: கர்நாடக துணை முதல்வர் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: பெங்களூருவில் 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடக்கிறது. தன்னால் முடிந்த அனைத்தையும் அரசு செய்து வருகிறது. இதற்கு மேல் அரசு என்ன செய்ய முடியும் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: 11 பேர் உயிரிழந்த உடன் நீதி விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறின. இதனை ஏற்றுக் கொண்டு முதல்வர் உடனடியாக நீதி விசாரணை நடத்தப்படும் என அறிவித்தார்.மேலும் பல விசாரணை நடக்கிறது. நிதித்துறை சார்ந்த விசாரணை, நீதி விசாரணை நடக்கிறது. இதற்கு மேல் அரசு என்ன செய்ய முடியும். அரசு தன்னால் முடிந்த சிறந்த விஷயத்தை செய்து வருகிறது. எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கான திட்டம் தயாரிக்கப்படும். இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.ஐ.பி.எல்., கோப்பை வென்ற பெங்களூரு அணிக்கு நடந்த பாராட்டு விழாவில் வீரர்களை பார்க்க ஏராளமான ரசிகர்கள் கூடினர். இதில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்த விவகாரத்தில் மாநில காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கர்நாடக ஐகோர்ட் தாமாக முன் வந்து விசாரணை நடத்தி வருகிறது.பெங்களூரு அணி நிர்வாகம், கர்நாடக கிரிக்கெட் சங்கம், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலரை கைது செய்துள்ளனர். ஓய்வு பெற்ற நீதிபதி குன்ஹா தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Selvaraj
ஜூன் 08, 2025 14:47

You two chief Ministers just take moral responsibility and stay away from government. Unnecessarily dont blame the police for your lapses. Revoke suspension of the police personnels.


venugopal s
ஜூன் 07, 2025 13:13

கர்நாடக அரசு எடுத்த அளவு நடவடிக்கைகள் கூட ஹாத்ரஸ் போலே பாபா கூட்ட நெரிசலில் நூற்றுமுப்பது பேர் இறந்த போதும், கும்பமேளா கூட்ட நெரிசலில் முப்பது பேர் இறந்த போதும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச பாஜக அரசு எடுக்கவில்லை!


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 07, 2025 13:02

எதற்கும் நீங்கள் இண்டி கூட்டணி திராவிட மாடல் தமிழக திமுக அரசிடம் ஆலோசனை பெற்று இந்த விசாரணை உங்களுக்கு சாதகமாக வரும் படி செய்யது கொள்ளலாம். அதற்கு சிறிது செலவாகலாம் அப்புறம் எங்கள் எம்பி திரு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்பதில் இருந்து விலக்களித்து அவரது திரைப்படம் ஓட அனுமதி தர வேண்டும். ஏனென்றால் இது நாட்டுக்கு தேவை என்று திமுகவிலிருந்து எம்பியாக தேர்வாகியுள்ளார்.


சந்திரன்
ஜூன் 07, 2025 08:18

RCB தனியார் கம்பெனி இதில் பல நாட்டு வீரர்கள் உள்ளனர் ipl ஒன்றும் இந்திய கிரிக்கெட் அல்ல அது பல தனியார் கம்பெனி முதலாளிகள் நடத்தும் கேம் இதை அரசு ஏன் கொண்டாட வேண்டும். அதனால் கர்னாடக அரசு நடந்த கோர சம்பவத்திற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்


R SRINIVASAN
ஜூன் 07, 2025 05:32

பெங்களுருவில் நடந்த இந்த மோசமான நிகஷ்ச்சிக்கு ரசிகர்களே காரணம் .கிரிக்கெட்டாகட்டும் ,சினிமாவாகட்டும் ரசிகர்கள் ஒரு வெறியுடன் செயல்படுகிறார்கள். இவர்கள் தங்கள் முனைப்பை படிப்பிலும் ,தாங்கள் செய்யும் தொழிலிலும் காட்டினால் இந்த நாடு வேகமாக முன்னேறும். இதே போல் பெண்களும் இல்லத்தரசிகளும் தங்க நகையில் காட்டும் ஆர்வத்தை விட்டு சேமிப்பில் கவனம் செலுத்தினால் அவர்களுடைய பொருளாதாரம் உயரும் .இதைப்பத்ரி இவர்கள் சிந்தித்தால் விலைவாசி தானாக குறையும் .நாட்டின் பொருளாதாரம் உயரும்.


நிக்கோல்தாம்சன்
ஜூன் 07, 2025 04:14

பொதுமக்களை கொன்ற காங்கிரஸ் அரசு இண்டி கூட்டணியில் திமுகவும் இருப்பது தான் வேதனை


தாமரை மலர்கிறது
ஜூன் 07, 2025 00:36

பதவி விலக வேண்டும்.


Iyer
ஜூன் 06, 2025 23:24

PHOTO OP க்காக நீங்களும் முதல்வர் சித்தராமையவும் செய்த அட்டூழியம் தான் 11 பேர் மரணத்துக்கு காரணம். நீங்கள் இருவரும் உடனே பதவி விலகவேண்டும். போலீஸ் எதிர்ப்பு தெரிவித்தும் நீங்கள் அவர்கள் யோசனையை ஏற்காமல் - வேண்டிய SAFETY MEASURES எடுக்காமல் - கூட்டம் கூட்டினீர்கள். கிரிமினல் வழக்கு உங்கள் இருவர் மேலும் தொடரவேண்டும்


Wooden Tamilan
ஜூன் 06, 2025 22:48

Resign and the Government should be ashamed


Padmasridharan
ஜூன் 06, 2025 22:44

இறப்புக்கு கன்னட மொழி பேசும் இருப்பு காரணமாகிவிட்டதே. மொழிப்பற்று இருப்பவர்கள் உயிர்மேல் பற்றில்லாமல் ஆகிவிட்டார்களே சாமி. .


சமீபத்திய செய்தி