உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொடூர தாக்குதலை உடல் கேமராவில் பதிவு செய்த பயங்கரவாதிகள் நோக்கம் என்ன?

கொடூர தாக்குதலை உடல் கேமராவில் பதிவு செய்த பயங்கரவாதிகள் நோக்கம் என்ன?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பஹல்காம்: ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணியரை குறிவைத்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், உடல் கேமராவில் கொடூர செயலை படம்பிடித்த நோக்கம் என்ன என்பது வெளியாகி உள்ளது.இந்த தாக்குதல் குறித்து உளவுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து செயல்படும், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான, லஷ்கர் - இ - தொய்பாவின் உள்ளூர் கிளையான, 'தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட்' அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=20k8dcb2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அடர்ந்த பைன் காட்டில் பதுங்கியிருந்த ஐந்துக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள், ராணுவ சீருடை, குர்தா - பைஜாமா உடை அணிந்து வந்து, அப்பாவி மக்களை சுட்டுக்கொன்று விட்டு தப்பி ஓடி விட்டனர். சமீபத்தில் பைசரன் பள்ளத்தாக்கில் ஊடுருவிய பாக்., பயங்கரவாதிகளும், இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். லஷ்கர் - இ- தொய்பாவின் உயர்மட்ட தளபதி காலித் என்கிற சைபுல்லா கசூரி, இந்த தாக்குலுக்கு மூளையாக செயல்பட்டுள்ளார். உடல் கேமராக்கள் மற்றும் ஹெல்மெட் பொருத்தப்பட்ட கேமராக்களை அணிந்து, தாக்குதலின் முழு நிகழ்வுகளையும் பயங்கரவாதிகள் பதிவு செய்துள்ளனர். இந்த தாக்குதல் வீடியோக்களை தங்களது ஆதரவாளர்களிடம் காட்டி, நிதி வசூல் செய்வது, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு காஷ்மீருக்கு சுற்றுலா பயணிகள் வராமல் தடை செய்வது ஆகியவையே நோக்கம் என தெரியவந்துள்ளது.மேலும் அவர்கள், ராணுவ தர ஆயுதங்களை தாக்குதலுக்கு பயன்படுத்தி உள்ளனர்.தாக்குதலுக்கு முன்னதாக, உள்ளூர் நபர்களின் உதவியுடன், பைசரன் பள்ளத்தாக்கு பகுதியை பயங்கரவாதிகள் வேவு பார்த்துள்ளனர். சரியாக திட்டமிட்டு, பாதுகாப்பு படையினர் இல்லாத நேரம் பார்த்து, இந்த தாக்குதலை அவர்கள் அரங்கேற்றி உள்ளனர். பயங்கரவாதிகளில் இருவர், உள்ளூரைச் சேர்ந்த ஆதில், ஆசிப் என்பது தெரிய வந்துள்ளது. தப்பியோடிய பயங்கரவாதிகளை பிடிக்கும் பணி முழு வீச்சில் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

தமிழன்
ஏப் 29, 2025 08:41

பயங்கரவாதிகளின் கொள்கை நாட்டில் அமைதியை சீர்குலைப்பது இதே கொள்கை உடையது இந்திய கூட்டணி கட்சிகள். குறிப்பாக திருமாவளவன் பேசும்போது ஆர்டிகிள் 370 நீக்கம் தான் தீவிரவாத தாக்குதலுக்கு காரணம் என்று பயங்கரவாதியின் கூட்டாளி போல் பேட்டி கொடுத்தார் அவன் மேல் மாநில அரசு மத்திய அரசுகள் எந்த நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது


உண்மை கசக்கும்
ஏப் 24, 2025 16:24

கோயம்புத்தூர் தீவிரவாதி சவ ஊர்வலத்திற்கு சென்ற தமிழ்நாட்டு அரசியல்வாதிகளையும் சுட்டு தள்ள வேண்டும்.


உண்மை கசக்கும்
ஏப் 24, 2025 16:20

ஜம்மு காஷ்மீர் முதல்வர் யார்..


sasidharan
ஏப் 24, 2025 13:55

உதவி செய்த உள்ளூர் வாசிகளை முதலில் சுட்டு தள்ள வேண்டும் .


Veeraputhiran Balasubramoniam
ஏப் 24, 2025 13:41

இன்னொரு பக்கம் மழை மண்சரிவு பாதிப்பு மீட்ப்பு பணியில் ராணுவம் , அமெரிக்க அதிகாரி பயணம் பாதுகாப்பு பணியில் மொத்த துப்பு இலாகா


Anbuselvan
ஏப் 24, 2025 13:27

LTTE போல இவர்களும் ஒரு கொள்கை வைத்து இருக்கலாம். அதாவது கொன்றதற்கு ஆதாரத்தை தலைமையிடம் காண்பிக்க வேண்டும் என்று.


B MAADHAVAN
ஏப் 24, 2025 13:02

பயங்கரவாதிகளை விட அவர்களுக்கு உதவிய உள்ளூர் கார கயவர்களை முதலில் துடிதுடிக்க போட்டுத்தள்ள வேண்டும். இது இங்கே உள்ள கயவர்களுக்கும் ஒரு பயத்தை உண்டு பண்ணுவது போல் இருக்க வேண்டும்.


Anbuselvan
ஏப் 24, 2025 13:49

சரியாக சொன்னீர்கள். உள்ளூர் காரன் இடம் கொடுக்காவிடில் அவர்கள் எப்படி உள்ளே புக முடியும். எட்டப்பர்கள் மிதிக்கப் பட வேண்டும். நிச்சயமாக.


முக்கிய வீடியோ