உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உலக தலைவர்கள் பேஷன் ஷோவில் பங்கேற்றால் எப்படியிருக்கும்?: எலான் மஸ்க் பகிர்ந்த ஏஐ வீடியோ

உலக தலைவர்கள் பேஷன் ஷோவில் பங்கேற்றால் எப்படியிருக்கும்?: எலான் மஸ்க் பகிர்ந்த ஏஐ வீடியோ

புதுடில்லி: பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடின் உள்ளிட்ட உலக தலைவர்கள் பேஷன் ஷோவில் பங்கேற்றால் எப்படியிருக்கும் என்ற எண்ணத்தில் 'ஏ.ஐ' தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோவை உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் பகிர்ந்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0tqb7z8l&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0செயற்கை நுண்ணறிவு எனப்படும் 'ஏ.ஐ' தொழில்நுட்பம் தற்போது பல விஷயங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாம் செய்ய நினைப்பதை கற்பனையுடன் தொழில்நுட்ப உதவியால் செய்வதே இதன் முக்கிய நோக்கம். உதாரணமாக ஒரு சிறுவனின் புகைப்படத்தை வைத்து அடுத்த 50 ஆண்டுகளுக்கு பிறகு எப்படி இருப்பார் என 'ஏ.ஐ' மூலம் அறியலாம். அப்படியான 'ஏ.ஐ'யை பயன்படுத்தி உலக பணக்காரர்களில் ஒருவரும், 'எக்ஸ்' வலைதள நிறுவனருமான எலான் மஸ்க், பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடின், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட உலக தலைவர்கள் பேஷன் ஷோ பங்கேற்றால் எப்படியிருக்கும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், கைதி உடையில் டொனால்டு டிரம்ப், சக்கர நாற்காலியில் ஜோ பைடன், ஒபாமா, மார்க் ஜூகர்பெர்க், நரேந்திர மோடி, கமலா ஹார்ஸ், சீன அதிபர் ஜி ஜிங்பிங், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், ரஷிய அதிபர் புதின், ஐரோப்பிய அரசியல் தலைவர்கள், போப் பிரான்சிஸ் என வரிசையாக நடந்து வருகின்றனர். கடைசியாக சமீபத்தில் நடந்த மைக்ரோசாப்ட் மென்பொருள் குளறுபடியை கிண்டலடிக்கும் வகையில், மைக்ரோசாப் நிறுவனர் பில் கேட்ஸ் நடந்து வருவதும் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. எலான் மஸ்க்கும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளார். இது தற்போது வைரலாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ThamizhMagan
ஜூலை 22, 2024 22:11

இலான் மஸ்க், டிரம்ப்பின் தோஸ்த் ஆயிற்றே? எப்படி கைதி உடையில் டிரம்ப்? ஆனால் அந்த உடை டிரம்ப்பிற்கு மிக்க பொருத்தம் செப்டம்பரில் தண்டனை வழங்கப்படும்.


முருகன்
ஜூலை 22, 2024 19:07

இப்போ மட்டும் என்ன நடக்கிறது


hari
ஜூலை 22, 2024 20:14

அதானே நம்ம கட்டுமரத்தை கிளோஸ் அப்ல பாத்தா தெரியும் முருகா


Tirunelveliகாரன்
ஜூலை 22, 2024 17:48

இதில் ஒருவருக்கு மட்டும் தான் பேசன் சோவில் கலந்து கொள்ள உண்மையான இருக்கிறது.


D.Ambujavalli
ஜூலை 22, 2024 16:24

நம் பிரதமர் தான் ஒவ்வொரு மாநிலம், தேசத்துக்கும் ஒருவித costume அணிந்து உண்மையிலேயே fashion ஷோ தானே காட்டுகிறார்


Iniyan
ஜூலை 22, 2024 15:18

இந்த எல்லன் மஸ்க் ஒரு ஆபத்தான கோமாளி


S BASKAR
ஜூலை 22, 2024 15:05

??????♥️


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜூலை 22, 2024 14:20

நகைச்சுவை என்ற வகையில் ரசிக்கும்படி இருக்கிறது. இறுதியில் விண்டோஸ் கிராவுட்ஸ்ட்ரைக் பி.எஸ்.ஒ.டி. சூப்பர்.


மேலும் செய்திகள்





புதிய வீடியோ