உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜாதி வாரி கணக்கெடுப்பு நிச்சயம் நடக்கும்: காங்கிரஸ் புகாருக்கு மத்திய அரசு மறுப்பு

ஜாதி வாரி கணக்கெடுப்பு நிச்சயம் நடக்கும்: காங்கிரஸ் புகாருக்கு மத்திய அரசு மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி:மத்திய அரசு வெளியிட்டுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு அரசாணையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு பற்றிய எந்த அறிவிப்பும் இல்லை என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. இந்த புகாரை மறுத்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதிவாரி கணக்கெடுப்புடன் சேர்த்து நடத்தப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.மத்திய அரசு வரும் 2027ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பு, ஜாதி வாரி கணக்கெடுப்பாக நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான அரசிதழ் அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. இதில் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான அறிவிப்பு எதுவும் இல்லை என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசின் அரசிதழ் அறிவிப்பில் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான அறிவிப்பு எதுவும் இல்லை. பிரதமர் மனதை மாற்றிக் கொண்டு விட்டாரா? ஏன் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு கெஜட் அறிக்கையில் இல்லை?வழக்கமான மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஒன்பதாயிரம் கோடி ரூபாய் முதல் 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவாகும். ஆனால் வெறும் 575 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூடுதல் பணம் எங்கே? இவ்வாறு ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியின் இந்த புகாரை மத்திய உள்துறை அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பானது ஜாதி வாரியான கணக்கெடுப்புடன் சேர்த்து நடத்தப்படும் என்று ஏற்கனவே மத்திய அரசு வெளிப்படையாக கூறி இருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Venkatesan Srinivasan
ஜூன் 17, 2025 22:22

ஜாதிவாரி கணக்கெடுப்புடன் மதத்தையும் சேர்க்க வேண்டும். இந்துமதத்தில் மட்டுமே ஜாதிகள் உள்ளது. முஸ்லிம் கிருத்துவ மதத்தில் இல்லை. அப்படி ஏதும் குறிப்பிட்டால் அதனை நீக்க வேண்டும். பெரும்பாலான சிறுபான்மை மதப்பிரிவு மக்கள் தங்களை ஆவணங்களில் இந்துக்கள் மற்றும் ஜாதி பிரிவுகள் என்று குறிப்பிட்டு இட ஒதுக்கீடு சலுகைகள் பெறுகின்றனர். முடிந்தால் மத ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிந்த பிறகு எல்லோரும் கட்டாயம் மத ஜாதி குறிப்புகளை தங்கள் பெயருடன் இணைத்து வெளியிட வகை செய்ய வேண்டும். அப்பொழுது இருக்கிறது அரசியல்வாதிகளின் "ஜாதிகள் இல்லையடி பாப்பா" முழக்கம்.


கண்ணன்
ஜூன் 17, 2025 12:06

கூடா நட்பு கேடாய் இவருக்கு ஆயிற்று


கண்ணன்
ஜூன் 17, 2025 12:06

பாவம், நன்னடத்தை இல்லாதோருடன் சேர்ந்து அவர்களைப் போலவே படிப்பறிவற்றோர் போல ஆகிவிட்டார்


naranam
ஜூன் 16, 2025 22:08

இவனுக்கு ....வரவே வராதா?


KRISHNAN R
ஜூன் 16, 2025 22:04

இவர்கள் நோக்கம் மக்கள் அடித்து கொள்ள வேண்டும். அதில் குளிர் காய லாம்


Kumar Kumzi
ஜூன் 16, 2025 21:45

எமதர்மராஜாவின் கண்ணில் படாமல் ஒழித்து திரிகிறார் கூடிய சீக்கிரம் சிக்கிவிடுவார் .


திகழும் ஓவியம்
ஜூன் 16, 2025 21:40

70 வருட ஆட்சியில் என்ன .... கிட்டு இருந்தாய்?


Nagarajan D
ஜூன் 16, 2025 21:32

உங்க முதலாளி சீனாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் என்ன வென்று கேட்டு எங்களுக்கு சொல்லு முதலில்


தாமரை மலர்கிறது
ஜூன் 16, 2025 21:18

ஐநூறு கோடி ரூபாய் ஆகிற செலவுக்கு காங்கிரஸ் காலத்தில் பத்தாயிரம் கோடி ரூபாய் செலவு செய்து உள்ளீர்கள். அந்த ஊழல் இப்போது புலப்பட்டுவிட்டது. என்னது ஜாதிவாரி கணக்கெடுப்பா? அந்த தேவை இல்லாத ஆணியை புடுங்கியெறியப்பட்டுவிட்டது. இன்னமும் சாதியை பிடித்து தொங்கிக்கொண்டு, இந்தியாவை தாழ்த்தவேண்டாம்.


சமீபத்திய செய்தி