உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாதிகள் யார்? காங்., கண்டுபிடிப்பு!

பயங்கரவாதிகள் யார்? காங்., கண்டுபிடிப்பு!

மைசூரு: ''முஸ்லிம்களை எதிர்க்கும் பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., தான் உண்மையான பயங்கரவாதிகள்,'' என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் லட்சுமண் தெரிவித்தார்.மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:ஹூப்பள்ளி கலவரத்தில் முஸ்லிம் சமூகத்தின் பெயரை பா.ஜ., விமர்சித்துள்ளது. அவர்களின் பெயரை கேட்டாலே, பயங்கரவாதிகளுடன் பா.ஜ.,வினர் ஒப்பிடுகின்றனர். ஆனால் பா.ஜ.,வும், ஆர்.எஸ்.எஸ்.,சும் தான் உண்மையான பயங்கரவாதிகள்.மாநிலத்தில் மொத்தம் 43 வழக்குகளை அரசு வாபஸ் பெற்றுள்ளது. இதில், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஒன்பது வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. மீதமுள்ள 34 வழக்குகள் பா.ஜ., ஆட்சி காலத்தில் போடப்பட்டவை. இந்த வழக்குகள், விவசாயிகள், மாணவர்கள், கன்னட ஆதரவு போராட்ட குழுவினர் மீது தொடரப்பட்டவை.ஹூப்பள்ளி கலவர வழக்கில் முஸ்லிம்கள் பெயர் இருப்பதால், இந்த விவகாரத்தை பா.ஜ.,வினர் பெரிதுபடுத்துகின்றனர். முதல்வர் சித்தராமையா மீது முடா வழக்கு தொடர்ந்த ஸ்நேகமயி கிருஷ்ணா மீது, 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இப்படிப்பட்ட குற்றப் பின்னணி கொண்ட அவர், முதல்வர் சித்தராமையாவை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது சரியா. தினமும் லோக் ஆயுக்தா அலுவலகத்துக்கு சென்று அழுத்தம் கொடுக்கின்றனர். பா.ஜ., தலைவர்கள், எதிரிகள் போன்று செயல்படுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

K V Ramadoss
அக் 16, 2024 22:53

இந்தியாவில் தீவரவாதத்திற்கு ௭திரான முதல் குரல் உங்கள் மதத்தவர்களிடமிருந்து கடுமையாக வருமானால் தீவிரவாதம் நிச்சயம் குறையும்.


Sathyanarayanan Sathyasekaren
அக் 16, 2024 19:41

இவனை போன்ற சொரணை கேட்ட ஹிந்துக்களும், கான் ஸ்கேம் காங்கிரஸில் சொரணை இல்லாமல் இருக்கும் ஹிண்டுக்கும், இவர்களுக்கு வோட்டை போடும் வெட்கம் கேட்ட ஹிந்துக்களுக்கு இன்னமும் வேண்டும். இது எல்லாம் போதாது


Mohamed Younus
அக் 16, 2024 16:16

இவர் சொல்லுவது முற்றிலும் சரி . இவர் போன்ற தேசபக்த ஜனநாயக வாதிகள் கண்டுகொள்ளப்பட வேண்டும் . அதே நேரத்தில் எந்த மதமாக இருந்தாலும் தீவிரவாதிகளை ஒழிக்க அனைவரும் பாடுபட வேண்டும் .


Sathyanarayanan Sathyasekaren
அக் 16, 2024 19:39

மொதமேது குடியிருக்கும் கோய்ம்பத்தூரில் குண்டுவைக்கும் உங்களுக்கு, பெங்களூரு குண்டுவெடிப்பிற்கு திட்டம் தீட்டியதற்காக சென்னையில் நன்கு பேர் கைது, காஷ்மீர் தாக்குதலுக்கு திட்டம் போட்டதாக தஞ்சாவூர் கும்பகோணத்தில் நான்குபேர் கைது, தீவிரவாதத்தை ஒழிக்க உங்களை போன்ற தேசபக்தர்கள் தான் பாடு படவேண்டும். செய்வீர்களா/


vijai
அக் 17, 2024 19:44

bai


Dharmavaan
அக் 16, 2024 11:22

இவனை சகோதரனாக நினைக்கிறானா என்று தெரிந்தும் கொள்ளட்டும்


Dharmavaan
அக் 16, 2024 11:20

பல்லக்கு தூக்கி சாம ரம் வீசி.வாழ் பிடித்தால்தான் ஒட்டு என்ன செய்வது காங்கிரஸ் கொத்தடிமைகளை


ரெட்டை வாலு ரெங்குடு
அக் 16, 2024 11:04

பேசாமல் முஸ்லீம் லீக் கட்சியுடன் நீங்க கங்கிரெஸ் கட்சிய இணைத்துவிடுங்கள் அதுதானே நியாயம் அதுதான் நீதி அதுதானே தர்மம் .


shyamnats
அக் 16, 2024 10:48

லட்சுமன் ன்னு பெரும் வச்சுக்கிட்டு, சிறுபான்மையினர் ஓட்டுக்காக என்னவெல்லாம் டான்ஸ் ஆடவேண்டியிருக்கு.


vijai hind
அக் 16, 2024 08:31

உங்கள் ஆட்சி அழகு தெரியுது பாகிஸ்தான் ஆட்கள் அங்க குடியேறி உள்ளார்கள்


vijai
அக் 16, 2024 08:28

இது மாதிரி பேசி பேசி நாட்டை நாசம் பண்ணாதீங்க


முக்கிய வீடியோ